ராகு கேது பெயர்ச்சி மீனம் பலன்கள்
யாருக்கு பலன்கள் நடக்கும் யாருக்கு பலன்கள் நடக்காது
ராகு கேது பெயர்ச்சி மீனம் 2019
ராகு கேது பெயர்ச்சி மீனம் ராசிக்காரர்களுக்கு ஐந்தில் ராகுவும், பதினொன்றில் கேதுவும் இருந்து வந்து கேதுவால் உங்களுக்கு வர இருந்த அதிர்ஷ்டங்களை தடுத்துக் கொண்டிருந்த ராகு இன்னும் சில வாரங்களில் மார்ச் மாதம் 7ல் நடக்கவிருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் ராகு பகவான் நான்காமிடத்திற்கும், கேது பகவான் பத்தாமிடத்திற்கும் மாற போகிறார்கள்.
கேந்திர ஸ்தானங்களில் ராகு கேதுக்கள் அமரும் இந்த காலம் உண்மையில் உங்களுக்கு அதிர்ஷ்டமான காலமே. வாழக்கைக்கு அஸ்திவாரமான விசயங்கள் அனைத்தும் உங்கள் கரங்களில் வந்து தவழும் காலம் இது என்பதை மனதில் நிறுத்துங்கள்.
ராகு இருப்பது 5ல் (கடகம்) – வரவிருப்பது 4ல் (மிதுனம்)
கேது இருப்பது 11ல் (மகரம்) – வரவிருப்பது 10ல் (தனுசு)
நான்காமிட ராகு
மீன ராசிக்கு நான்கில் ராகு சஞ்சரிக்கும் இந்த காலம், ராகு அமர போவது புதனின் வீட்டில், சொந்தமாக வீடு இல்லாத ராகு கேதுக்கள், தான் அமரும் இடத்தின் அதிபதியின் தன்மையோடு தனது பலத்தை வெளிப்படுத்தி கொள்வார்கள் என்பது விதி. அதன்படி, புதனின் சேட்டைகளோடு களம் இறங்குவதால், வாழ்க்கை கலகலவென செல்லும்.
அதே சமயம் சமயம் பார்த்து உங்களை மாட்டிவிட உங்களை சுற்றி நபர்கள் இருப்பார்கள் எச்சரிக்கை. ஆனாலும் குருபகவானின் அருள் இருப்பதால் உங்களுக்கு வரும் அனைத்து புன்னைகையோடு எதிர்கொண்டு அனைத்திலும் ஜெயித்து காட்டும் காலமிது.
பத்தாமிட கேது
கேதுபகவான் 10-மிடத்திற்கு மாறுவதால், மீன ராசியினருக்கு 10-மிடத்திற்கு அதிபதி குரு என்பதாலும், குருவே உங்களின் ராசிநாதன் என்பதாலும், மேலும் குருபகவான் முழு சுப கிரகம் என்பதாலும். ராகு கேதுக்கள் எப்போதும் தான் நிற்கும் வீட்டின் அதிபதியை போன்ற பலனை ஜாதகருக்கு தரும் என்பதால், கேதுவின் பலன்கள் இம்முறை குருவின் தன்மைகளோடு வெளிபடும். ஆன்மீகத்தில் நாட்டமும், பழைய கடன்களை அடைத்து புதிய கடன்களை சுமக்கும் வகையிலும் கேது செயல்பட உள்ளார்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
பொதுவாக ராகு-கேதுக்கள் தற்போது மாற இருக்கும் நான்கு, பத்தாமிடங்கள் நன்மைகள் தரும் இடமாக மூல நூல்களில் சொல்லப்படவில்லை.
ஆயினும் பாபக் கிரங்கள் ஐந்து, ஒன்பது எனப்படுகின்ற திரிகோண ஸ்தானத்தில் இருப்பதை விட நான்கு, ஏழு, பத்து ஆகிய கேந்திர ஸ்தானங்களில் நற்பலன்களை தருவார்கள் என்பதால் கடந்த தடவை ஐந்தாமிடத்தில் இருந்து தராத நல்ல பலன்களை நான்கு, பத்தாமிடங்களில் மீனத்திற்கு தருவார்கள்.
காரிய வெற்றி
பொதுவாகச் சொல்லப் போனால் இந்த பெயர்ச்சி முழுவதுமே நல்ல பலன்கள் நடக்கும். பண வரவு திருப்தியாக இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று இந்த வருடம் நனவாகும்.
உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும். வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும்.
இதுவரை எந்த ஒரு அமைப்பிலும் வேலை, திருமணம் போன்ற வாழ்க்கை அமைப்புகளில் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு தற்போது வாழ்க்கையில் செட்டில் ஆகும் அமைப்புகள் நடைபெற துவங்கும்.
எந்த ஒரு காரியத்திலும் தடைகளை உணர்ந்தவர்கள், எதுவுமே நடக்கவில்லையே, எனக்கு மட்டும் என் திறமைக் கேற்ற அங்கீகாரமோ, வேலையோ கிடைக்கவில்லையே என்று புலம்பி கொண்டிருந்தவர்களுக்கு இந்த மார்ச் மாதம் நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் ஒரு விடியல் இருக்கும்.
வேலை, தொழில்
இதுவரை நல்ல வேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும்.
தொழிலாளர்களுக்கு வேலைப் பளு குறைந்து சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், இயக்கும் வேலையில் உள்ளவர்கள் போன்ற துறையினர் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்வதற்கோ புதிய கிளைகள் ஆரம்பிப்பதற்கோ இது மிகவும் நல்ல நேரம். இதுவரை இருந்த தடைகள் அகலும். சோம்பலாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள்.
தனியார் துறையினர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம்.
சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம்தான்.
குடும்பம்
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும்.
குடும்பத்தில் குதூகலம் நிலவும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள்.
குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்ய முடியும்.
இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது.
குறிப்பிட்ட சில மீன ராசிக்காரர்கள் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணையை இப்போது சந்திப்பீர்கள்.
காதல் வரும் நேரம் இது. சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும்.
கேதுபகவான் தற்போது சாதகமான இடம் என்று சொல்லப்படும் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார்.
இனிமேல் நிதானமான பலன்களை தரக்கூடிய பத்தாமிடத்திற்கு மாறுவார். இதனால் வேலை,தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் பாதிக்கப்படுமோ என்ற கவலை உங்களுக்குத் தேவையில்லை.
உறவுகள்
பெற்ற பிள்ளைகள் விஷயத்தில் நல்லது நடக்கும். மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக் கவலை இப்போது நீங்கும்.
புத்திர பாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு புத்திர ஸ்தானத்திலிருந்து பாபக் கிரகமான ராகு விலகுவதால் குழந்தைச் செல்வம் கிடைக்கும்.
குழந்தைகளால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் கல்வியில் முன்னேற்றங்கள் இருக்கும்.
குழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட முடியும். நல்ல காலேஜில் சீட்டு கிடைக்கும்.
தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். தந்தையிடமிருந்து ஏதேனும் ஆதாயம் இருக்கும். மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும்.
தந்தைவழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். இதுவரை இருந்துவந்த பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும்.
வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது. நான்கில் இருக்கும் ராகு தாயார் விஷயத்தில் இழப்புக்களையும் மனக் கஷ்டங்களையும் தருவார்.
பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்வீர்கள்.
தொலைதூர பிரயாணங்களோ வெளிநாட்டு பயணங்களோ நடக்கும். இதுவரை வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும்.
தொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், காவல் துறையினர், நீதித்துறையினர், வாகனங்களை இயக்குபவர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக்கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த ராகுகேதுப்பெயர்ச்சி நல்ல பலன்களையே தரும்.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. வெகுநாட்களாக எதிர்பார்க்கும் குடியுரிமை கிடைக்கும். தாய் தந்தையை பார்க்க தாய்நாடு வந்து திரும்பலாம்.
இருக்கும் நாட்டில் சுமுக நிலை இருக்கும். இந்தப் பெயர்ச்சியை கும்ப ராசியினர் பரிபூரணமாக உபயோகப்படுத்திக் கொண்டு உயர்வது நிச்சயம் என்பதில் சந்தேகம் இல்லை.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
பெரும்பாலான கிரகங்கள் இப்போது நன்மை தரும் இடத்தில் உள்ளதால் எல்லாத் துறையினருக்கும் லட்சியங்கள் நிறைவேறும் காலகட்டம் இது. உங்களுடைய நீண்டகால திட்டங்களை இப்போது தடங்கலின்றி நிறைவேற்றிக் கொள்ளலாம்.
மீன ராசியினர் தொட்டது துலங்கும் காலம் என்பதை மனதில் நிறுத்தி, பலன்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நேரம் என்பதால், சரியாக உழைத்தால், நிறைவாக பலனை காணலாம்.
ராகு கேது பெயர்ச்சி மீனம் சிறப்பு பலன்கள்
(குருபெயர்ச்சி – சனிபெயர்ச்சி)
ராகு-கேது பெயர்ச்சியை தொடர்ந்து எட்டு மாதங்களில் குருபெயர்ச்சியும், குருபெயர்ச்சியை தொடர்ந்து இரண்டு மாதங்களில் சனிபகவான் பெயர்ச்சியும் நடக்க உள்ளதால், இந்த ராகு கேது பெயர்ச்சி, குருபெயர்ச்சி வரை, ஒருவிதமாகவும், குருபெயர்ச்சிக்கு பின் வேறு விதமாகவும், மேலும் சனிபெயர்ச்சிக்கு பின் மற்றொரு கோணத்தில் உங்களுக்கு பலன் அளிக்க உள்ளது என்பதை மனதில் நிறுத்துங்கள்.
ராகு கேது பெயர்ச்சி மீனம் ராசியில் – குருபெயர்ச்சி வரை
(07.03.2019 முதல் 04.11.2019 வரை)
உங்களுக்கு இம்முறை நல்ல பணவரவுகள் இருக்கும். இரட்டிப்பு நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.
கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்கலாம். ஆனாலும் அவை உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கான திருப்புமுனையான கடனாக இருக்கும். வேற்றுமதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள்.
சுப வலுவடைந்திருக்கும் கேது உங்களின் தொழில், வேலை விஷயங்களில் நல்ல மாற்றங்களை தருவார். குறிப்பாக மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் லாபம் அடைவீர்கள்.
சுயதொழில் செய்பவர்களுக்கோ, அரசு-தனியார் துறைகளில் வேலை செய்பவர்களுக்கோ, வியாபாரிகளுக்கோ, கலைஞர்களுக்கோ, பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கோ தொழில் அமைப்புகளில் எவ்விதப் பிரச்சினையும் ஏற்படாது.
ராகு கேது பெயர்ச்சி மீனம் ராசியில் – குருபெயர்ச்சி பின்
(04.11.2019 முதல் 24.01.2020 வரை)
சனியுடன் குரு சேரும் இந்த காலம் மிக சிறந்த பொருளாதார நன்மைகளை நிச்சயம் உங்களுக்கு தரும்.
குருபகவானும் அதிக வலுவாக உள்ளதால் மனதில் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு மிக விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும்.
ஒரு சிலருக்கு பிள்ளைகளின் கல்வித்தடை, அவர்களுக்கு நல்லவேலை அமையாத நிலை, திருமணம் போன்ற சுபகாரியத் தடைகளையும் ராகுபகவான் தருவார். ராகு கேதுவின் காரக தொழில் செய்த்து வரும் அன்பர்கள் பெரிய அளவில் பொருளாதார மேன்மை அடையும் காலமிது..
ராகு கேது பெயர்ச்சி மீனம் ராசியில் – சனிபெயர்ச்சிக்கு பின்
(24.01.2020 முதல் 23.09.2020 வரை)
சனி, அதிக பொருளாதார மேன்மையை தருவார். இன்னும் நுணுக்கமாக பார்த்தோம் எனில், மீன ராசியில் உள்ள குருவின் நட்சத்திரமான பூரட்டாதி,. இரண்டாவதாக, சனியின் உத்திரட்டாதி மற்றும் தானே நட்சத்திர தேவதையாக விளங்ககூடிய ரேவதி நட்சத்திரம் என அனைத்து வகையிலும், மீன ராசிக்கு பொருளாதார மேன்மையையும் தொழில் விருத்தியையும் தரவல்ல வகையில் சனிபகவான் லாப ஸ்தானத்தில் (மறைமுக குரு-சனி தொடர்பில்) வந்து அமருவதால், கவலை ஏதும் இல்லாத காலமிது. ஆனால், சனிபகவான், கடின உழைப்பிற்கு பெயர் பெற்ற கிரகம் என்பதால், நீங்கள் எவ்வளவு உழைப்பை தந்தாலும், அதற்கு உண்டான பலன்கள், அழகாக உங்களை வந்து சேரும் காலம். சரியான நேரத்தில் உழைக்காமல் விட்டால் பலன்கள் குறைவாகவே கிடைக்கும். ஏனெனில் முன்பு நீங்கள் உழைத்த உழைப்பிற்கு தகுந்த பலன்கள் இல்லாமல் அதிக மன வருத்தம் அடைந்து இருப்பீர்கள். இப்போது அப்படி அல்ல. மனதில் கொள்ளுங்கள், உங்களுக்கு இது பொன்னான காலம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ராகு கேது பெயர்ச்சி மீனம் ராசியில் பாதிப்பு யாருக்கு இருக்கும் – யாருக்கு இருக்காது
பாதிப்பு குறைய என்ன பரிகாரம்
சொல்லப்படும் பலன்கள் யாவும் துல்லியமாக அனைவருக்கும் சர்வநிச்சயமாக நடந்துவிடாது. அதற்கு அவரவர் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி அமைப்பு முக்கியமான காரணமாக சொல்லப்பட்டாலும், பலன்கள் நடக்கும் அமைப்பை அதன் அளவை மற்றொரு முறையிலும் கண்டறிய இயலும்.
அதை பற்றி தெரிந்து கொண்டு அதற்கு உண்டான இறைவழிபாடு மற்றும் பரிகார முறைகளையும் தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோவை கிளிக் செய்து பாருங்கள்.
ராகு கேது பெயர்ச்சி மீனம் பலன்கள் 2019-2020 யாருக்கு நடக்கும் நடக்காது
************************************
மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.
https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM
மேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)
ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,
(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)
எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா
M.M.CHANDRA SEGARAN,
(M.M.சந்திரசேகரன்)
ஆலோசனை கட்டணம் குறித்த விபரமறிய உங்களின் ஜாதகத்தை
70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்
*********************************
எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்
குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு
உயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
*********************************