Contents
ராகு கேது பெயர்ச்சி துலாம் பலன்கள்
யாருக்கு பலன்கள் நடக்கும் யாருக்கு பலன்கள் நடக்காது
ராகு கேது பெயர்ச்சி துலாம் 2019
ராகு கேது பெயர்ச்சி துலாம் ராசி காரர்களுக்கு கேந்திர இடங்களில் இருந்து வந்த ராகு மற்றும் கேது பகவான்கள் மாற இருக்கிறார்கள்.
வரும் மார்ச் மாதம் 7ல் நடக்கவிருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் ராகுஒன்பதாமிடத்திலும்(பாக்கியஸ்தானத்தில்), கேதுபகவான் மூன்றாமிடத்திலும் (வீரிய ஸ்தானத்தில்) பெயர்ச்சியாகிறார்கள்
ராகு இருப்பது 10ல் (கடகம்) – வரவிருப்பது 9ல் (மிதுனம்)
கேது இருப்பது 4ல் (மகரம்) – வரவிருப்பது 3ல் (தனுசு)
ஒன்பதாமிடராகு
பாக்கிய ஸ்தானம் என்று சொல்லப்படும் ஒன்பதாமிடத்தில்ராகு வருவது, மிகவும்சிறப்பு என்று சொல்லமுடியாத இடம் என்றாலும், பயப்பட தேவையில்லாத இடமும் கூட. ராகு கேதுக்கள் எப்போதும் தான் நிற்கும் வீட்டின் அதிபதியை போன்ற பலனை ஜாதகருக்கு தரும் என்பதால்,புதனின் வீட்டில் வந்தமரும், ராகு, புதனின் சேட்டைகளோடு களம் இறங்குவதால், கலகலவென நகரும்காலமாக இந்த ராகு பெயர்ச்சி இருக்கும்.
மூன்றாமிடகேது
கேதுபகவான் -மிடத்திற்கு மாறுவதால், விருச்சிக ராசியினருக்குமூன்றாமிட அதிபதி குரு என்பதாலும், குருபகவான் முழுசுப கிரகம் என்பதாலும்.
ராகு கேதுக்கள் எப்போதும் தான் நிற்கும் வீட்டின் அதிபதியை போன்ற பலனை ஜாதகருக்கு தரும் என்பதால், கேதுவின் பலன்கள் இம்முறை குருவின் தன்மைகளோடு வெளிபடும். ஆன்மீகத்தில் நாட்டமும், கடன்களை சுமக்கும் வகையிலும் கேது செயல்பட உள்ளார்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
நிழல் கிரகங்கள் என்று ராகு கேதுக்கள்மூன்று, ஒன்பதாம் இடங்களில் வருவதன் மூலம் சகாயஸ்தானம் என்று சொல்லப்படும் உதவி ஸ்தானம் மிகுந்த வலுப்பெறும். இந்த இடம்தைரியம் மற்றும் கீர்த்தியை குறிப்பதால் இதுவரை எதற்கும் பயந்து கொண்டுதன்னம்பிகை இன்றி இருந்த துலா ராசியினர் இழந்த நம்பிக்கையை மீண்டும்பெறுவீர்கள்.
அதே போல தற்போது மாற இருக்கும் வீடுகள் ராகு-கேதுக்கள்நன்மைகளைச் செய்யக் கூடிய ஒரு அமைப்பு வீடுகள் என்பதால் இந்த பெயர்ச்சியின்மூலம் துலாமிற்க்கு நல்ல வாய்ப்புகளின் கதவுகள் அகலமாகத் திறந்துவைக்கப்படும்.
முன்னேற்ற பாதையில் உங்கள் பயணம்
முன்னேற்றம் மற்றும் விரிவாக்கத்திற்கான அனைத்தையும் தற்போதுநல்ல விதமாகச் செய்ய முடியும். தடைகள் அனைத்தும் நீங்குவதால் ஊக்கத்துடன்செயல்படுவீர்கள். தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு நல்ல நேரம்இது. அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும்.
சிலருக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப்பெற்று முன்னேறுவதற்கு தற்போது வாய்ப்பு இருக்கிறது. வியாபாரிகளுக்கு இதுமிகுந்த லாபங்கள் வரக்கூடிய ஒரு காலகட்டமாக அமையும்.
எல்லாவிதமானவியாபாரமும் இப்போது கை கொடுக்கும். கிளைகள் திறக்கலாம். புதிய டீலர்ஷிப்எடுக்கலாம். வருமானம் சிறப்பாக இருக்கும்.
தொழில் துறையில், வேலை அமைப்புகளில்இதுவரை நல்லது கிடைக்காத நிலைமை மாறத் துவங்கி ராகு-கேதுபெயர்ச்சிக்கு பிறகு நழுவிப் போன அனைத்து வாய்ப்புகளும் இப்போது தானே தேடிவரும். அதைவிட மேலாக ஏற்கனவே வாய்ப்புக் கிடைத்தும் அதை சரியாக செய்யமுடியாமல், கிடைத்த வாய்ப்பினை நழுவ விட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புகிரகங்களால் கொடுக்கப்படும்.
இதுவரை நடந்த எதிர்மறை பலன்களால் கலங்கிப் போய், எனக்கு என்ன நடந்துகொண்டு இருக்கிறது, ஏன் எனக்கு அனைத்திலும் தோல்வி கிடைக்கிறது, ஏன் என்னைஎவரும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று தைரியம் இழந்துகலங்கித் தவித்துக் கொண்டிருக்கும் துலாம் ராசி இளைய பருவத்தினருக்குதைரியத்தையும், புத்துணர்ச்சியும் ஊட்டி அவர்களை சாதனை செய்பவர்களாகமாற்றும் வேலையினை மூன்றாமிட கேது செய்வார்.
ராகு பகவான் ஒன்பதாம் இடத்திற்கு வருவது நன்மைகளைத் தராது என்று நமதுமூலநூல்களில் சொல்லப் பட்டிருந்தாலும், ராகு இப்போது செல்லும் இடம்புதனின் வீடு என்பதால் என்பதால் (புதன் கேளிக்கைக்கு பெயர்போனவர். கேளிக்கையே உலக புகழ் பெற ராகு உதவ வேண்டும்) பெரிய துன்பங்கள் எதையும்துலாம் ராசிக்கு நிச்சயமாக கொடுத்து விட மாட்டார்.
எனவே எப்படிப் பார்த்தாலும் துலாமிற்குஇந்த வருடசித்திரை மாதம்முதல் அனைத்துக் கஷ்டங்களும் படிப்படியாக குறைய வேண்டிய நிலையில் இருப்பதால்,எனவே இந்தப் பெயர்ச்சியினை துலாம் ராசிக்காரர்கள்வரவேற்கவே செய்வீர்கள்.
காதல், திருமணம், குடும்பம்
இளைய பருவத்தினருக்கு தடைகள் நீங்கி உடனடியாக திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர்சம்மதம் கிடைக்கும்.
ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களின்வாழ்க்கைத் துணைவரை அடையாளம் காண்பீர்கள்.
கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும்.
மனைவிக்கு நகை வாங்கி கழுத்தில் போட்டு அழகுபார்க்க முடியும். குழந்தைகளின் எதிர் காலத்துக்கு முதலீடு செய்ய முடியும்.பிள்ளைகள் விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் அவர்களை சேர்க்க முடியும்.
குடும்பப் பிரச்னை காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்றுசேருவீர்கள். விவாகரத்து வரை போன தம்பதிகள் வழக்கைத் திரும்பப் பெற்றுசமரசமாகி திரும்ப இணைவீர்கள்.
முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்குஇரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு உடனடியாக குழந்தை பிறக்கும். மகன்மகள் விஷயத்தில் இதுவரை இருந்துவந்த மனக்கவலைகள் இனிமேல் இருக்காது.பிள்ளைகள் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும்.
வேலை, தொழில்
மூன்றாமிடமான தனுசில் கேதுபகவான் சுப, சூட்சும வலுப் பெறுவதால்மூன்றாமிடத்தின் நற்பலன்கள் அனைத்தும் உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும்.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்றபொருத்தமான வேலை உடனடியாக அமையும். உயர் கல்வி கற்பதற்கு இதுவரை இருந்துவந்த தடைகள் அனைத்தும் விலகும்.
அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் தவிர்த்த மேல் வருமானங்கள்இருக்கும். தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில்சேருவீர்கள். அரசியல்வாதிகளுக்கு ஏமாற்றங்கள் விலகி பொறுப்பான பதவிகிடைக்கும். மக்கள் மத்தியில் அந்தஸ்தும் கௌரவமும் கிடைப்பதோடுவருமானத்திற்கும் வழி பிறக்கும்.
வீடு, மனை, அரசு சம்பந்தப்பட்டவை
வீடு கட்டுவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். சிலருக்கு கட்டியவீடோ, காலிமனையோ வாங்குவதற்கு இப்போது நல்ல சந்தர்ப்பம் வரும். புதிதாகநல்ல வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சொத்து சேர்க்கை மற்றும் பொன்நகை சேர்க்கை இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து விதமானபொருட்களையும் இப்போது வாங்க முடியும்.
அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் நல்லமுறையில் தேர்வுகளை எழுதமுடியும். ஏற்கனவே தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இதுவரை இருந்தஅதிருப்திகள் இனிமேல் இருக்காது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சம்பளஉயர்வும் பாக்கித் தொகையும் உடனே பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடியஇடமாற்றங்கள் உண்டு. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் இருந்தமுட்டுக்கட்டைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும்பங்குதாரர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.
ஆன்மிகம், பெண்கள், உடல்நலம், கடன்கள்
நீண்ட தூர புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசிகயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். பெரிய மகான்களின் தரிசனம்கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும்பாக்கியம் கிடைக்கும்.
பெண்களுக்கு நன்மைகள் உண்டு.குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். கணவர் மூலமாகநன்மையை பெறுவீர்கள். மாமியாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில்மதிக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள்தீரும். உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும்.
உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம்தெரியும்.
இதுவரை இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. எனவேஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும்.
குடும்பத்தில் மங்களகாரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும்அதற்கு ஏற்ப சுபச்செலவுகளும் இருக்கும்.
கடன் தொல்லையால்அவதிப்பட்டவர்களுக்கு கடனை தீர்க்கக் கூடிய அமைப்புக்கள் உருவாகும். ஒருசிலர் புதிய கடன்கள் பெற்று பழைய கடன்களை அடைப்பீர்கள். இனிமேல் கடன்கள்கஷ்டங்களைத் தராது.
ராகு கேது பெயர்ச்சி துலாம்ராசிக்கான சிறப்பு பலன்கள்
(குருபெயர்ச்சி – சனிபெயர்ச்சி)
ராகு-கேது பெயர்ச்சியை தொடர்ந்து எட்டு மாதங்களில் குருபெயர்ச்சியும், குருபெயர்ச்சியை தொடர்ந்து இரண்டு மாதங்களில் சனிபகவான் பெயர்ச்சியும் நடக்க உள்ளதால், இந்த ராகு கேது பெயர்ச்சி, குருபெயர்ச்சி வரை, ஒருவிதமாகவும், குருபெயர்ச்சிக்கு பின் வேறு விதமாகவும், மேலும் சனிபெயர்ச்சிக்கு பின் மற்றொரு கோணத்தில் உங்களுக்கு பலன் அளிக்க உள்ளது என்பதை மனதில் நிறுத்துங்கள்.
ராகு கேது பெயர்ச்சி துலாம் ராசியில் – குருபெயர்ச்சி வரை
(07.03.2019 முதல் 04.11.2019 வரை)
ஆன்மிக நாட்டம், ஞானிகள் தரிசனம், இதுவரைசெல்லாத திருத்தலங்களை தரிசிக்கும் பாக்கியம், புதிய வாகன யோகம், எதிலும்லாபம், மூத்தசகோதர நன்மை போன்றவைகள் உண்டாகும்.
ஏதேனும் ஒரு வகையில்விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பாக்கெட்டில் இருந்து பணத்தைஎடுக்கும் முன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள்.எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கள் இப்போதுஉங்களுக்கு நடக்கும்.
குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இதுஎன்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.
தள்ளிப் போயிருந்தகுலதெய்வ வழிபாட்டினை உடனடியாக நேர்த்திக்கடன்களுடன் நிறைவேற்ற முடியும்.எல்லா சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக் கூடியவர் நீங்கள்என்பதால் இந்த ராகுகேதுப்பெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளையே அதிகம் தரும்.கேது சுப வலிமையுடன் இருப்பதால் உங்களுக்கு இம்முறை நல்ல பணவரவுகள்இருக்கும்.
ராகு கேது பெயர்ச்சி துலாம் ராசியில் – குருபெயர்ச்சி வரை
(04.11.2019 முதல் 24.01.2020வரை)
இந்த காலம் மிக சிறந்த பொருளாதார நன்மைகளை நிச்சயம்உங்களுக்கு தரும். குருபகவானும் வலுவாக உள்ளதால் மனதில் ஆன்மிக எண்ணங்கள்மேலோங்கும். சித்தர்களின் ஆசிகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு.
இம்முறைநீங்கள் தரிசிக்க விரும்பும் புனிதத்தலங்கள் அனைத்திற்கும் செல்லும்பாக்கியம் கிடைக்கும்.கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர்புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள்.
சிலருக்கு அலைச்சல்களும்மந்தநிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம் தொழில் முன்னேற்றமும்வருமானமும் கண்டிப்பாக இருக்கும். கோர்ட், கேஸ், நிலம் சம்பந்தமானவழக்குகள். போலீஸ் விவகாரங்கள் கிரிமினல் வழக்குகள் உள்ளவர்களுக்கு சாதகமானதிருப்பங்கள் இருக்கும். கவனத்துடன் செயல்படாவிடில், கடன்கள் அதிகமாகும் காலகட்டம்
ராகு கேது பெயர்ச்சி துலாம் ராசியில் – குருபெயர்ச்சி வரை
(24.01.2020 முதல் 23.09.2020 வரை)
ஆரம்பத்தில் சிறிது சுணக்கமான பலன்கள் இருந்தாலும் நடுப்பகுதியில் இருந்துநல்ல பலன்கள் நடக்கத் துவங்கி படிப்படியாக உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்கள் மிகவும் முன்னேற்றமாக இருக்கும்.
எட்டாம் வீட்டின் நல்ல விஷயங்களான வெளிநாட்டுத் தொடர்பு, வேற்று நாட்டுக்குடிமகன் ஆகுதல், வெளிதேச வாசம், சயனசுகம், தாராளமாக செலவு செய்யும்அளவுக்கு வருமானம், அடிக்கடி பிரயாணம் போன்ற பலன்கள் உங்களுக்கு இப்போதுநடக்கும்.
வெளிநாட்டு தொடர்பால் இந்த வருடம் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும்வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தந்தைவழிஉறவில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு இருக்கும்.
ராகு கேது பெயர்ச்சி துலாம் ராசியில் பாதிப்பு யாருக்கு இருக்கும் –யாருக்கு இருக்காது
பாதிப்பு குறைய என்ன பரிகாரம்
சொல்லப்படும் பலன்கள் யாவும் துல்லியமாக அனைவருக்கும் சர்வநிச்சயமாக நடந்துவிடாது. அதற்கு அவரவர் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி அமைப்பு முக்கியமான காரணமாக சொல்லப்பட்டாலும், பலன்கள் நடக்கும் அமைப்பை அதன் அளவை மற்றொரு முறையிலும் கண்டறிய இயலும்.
அதை பற்றி தெரிந்து கொண்டு அதற்கு உண்டான இறைவழிபாடுமற்றும் பரிகார முறைகளையும் தெரிந்துகொள்ள பின்வரும் வீடியோவை கிளிக் செய்யவும்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 யாருக்கு நடக்கும் நடக்காது
************************************
மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமதுYouTubeசேனலானSHRI JAI SAKTHI JOTHIDAM – ஐSubscribeசெய்வதுடன் அருகில் வரும்Bell – ஐயும்Click செய்து கொள்ளுங்கள்.
https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM
மேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)
ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,
(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)
எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா
M.M.CHANDRA SEGARAN,
(M.M.சந்திரசேகரன்)
ஆலோசனை கட்டணம் குறித்த விபரமறிய உங்களின் ஜாதகத்தை
70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்
*********************************
எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்
குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு
உயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
*********************************