ராகு கேது பெயர்ச்சி கும்பம் பலன்கள்
யாருக்கு பலன்கள் நடக்கும் யாருக்கு பலன்கள் நடக்காது
ராகு கேது பெயர்ச்சி கும்பம் 2019
ராகு கேது பெயர்ச்சி கும்பம் ராசிக்காரர்களுக்கு ஆறில் ராகுவும், பண்ணிரண்டில் கேதுவும், இருந்து தனவரவையும், கடன்களையும் அதிகரிக்க செய்தும், ஆன்மீகத்தில் நாட்டத்தினை ஏற்படுத்தியும் வந்தனர்.
இன்னும் சில வாரங்களில் மார்ச் மாதம் 7ல் நடக்கவிருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் ஐந்தில் ராகுவும், பதினொன்றில் கேதுவும் மாற போகிறார்கள். இது அதிர்ஷ்டமான காலமே.
ராகு இருப்பது 6ல் (கடகம்) – வரவிருப்பது 5ல் (மிதுனம்)
கேது இருப்பது 12ல் (மகரம்) – வரவிருப்பது 11ல் (தனுசு)
ஐந்தாமிட ராகு
கும்ப ராசிக்கு ஐந்தில் ராகு சஞ்சரிக்கும் இந்த காலம், ராகு அமர போவது புதனின் வீட்டில், சொந்தமாக வீடு இல்லாத ராகு கேதுக்கள், தான் அமரும் இடத்தின் அதிபதியின் தன்மையோடு தனது பலத்தை வெளிப்படுத்தி கொள்வார்கள் என்பது விதி.
அதன்படி, புதனின் சேட்டைகளோடு களம் இறங்குவதால், கலகலவென நகரும் காலத்தில் அதிக கவனம் தேவைப்படும். எச்சரிக்கை.
பதினொன்றாமிட கேது
கேதுபகவான் 11-மிடத்திற்கு மாறுவதால், கும்ப ராசியினருக்கு 11-மிடத்திற்கு அதிபதி குரு என்பதாலும், குருபகவான் முழு சுப கிரகம் என்பதாலும்.
ராகு கேதுக்கள் எப்போதும் தான் நிற்கும் வீட்டின் அதிபதியை போன்ற பலனை ஜாதகருக்கு தரும் என்பதால், கேதுவின் பலன்கள் இம்முறை குருவின் தன்மைகளோடு வெளிபடும்.
ஆன்மீகத்தில் நாட்டமும், கடன்களை சுமக்கும் வகையிலும் கேது செயல்பட உள்ளார். ஆனாலும் பொதுவாக 3, 6, 11ல் வந்து அமரும் ராகு கேது எப்பவும் ஜாதகருக்கு தேவையான விசயங்களை தருவதில் முன்னுரிமை தரும் என்பதால், நிம்மதி அடையுங்கள்.
ஆகையால், கும்பம் ராசிக்காரர்களுக்கு ராகு கேதுப் பெயர்ச்சியால் மிக அதிக நன்மைகள் கிடைக்கும்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
எந்த ஒரு விஷயத்திலும் காலூன்றி நிற்கமுடியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தற்போது நல்ல வாய்ப்புகள் கிடைத்து அவர்களும் தங்கள் துறைகளில் நிலைபெற முடியும்.
குறிப்பிட்ட சில கும்பம் ராசிக்காரர்களின் செயல்திறன் நல்லவிதமாக வெளிப்பட்டு சாதனைகளும் செய்வார்கள். இந்தப் பெயர்ச்சியை கும்ப ராசியினர் பரிபூரணமாக உபயோகப்படுத்திக் கொண்டு உயர்வது நிச்சயம்.
சிக்கலில் இருந்து விடுதலை
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்திற்கும் படித்த படிப்பிற்கும் பொருத்தமான வேலைகள் அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
நீண்ட நாட்களாக உங்களுக்கு மனவருத்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்த உயரதிகாரி மாறுதலாகி, அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார்.
இதுவரை சிக்கலில் இருந்த தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் தடைகள் விலகி நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும்.
தொழில்
சுய தொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இம்முறை மேன்மையான பலன்கள் இருக்கும்.
முப்பது வயதுகளில் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை, தொழில் சம்மந்தமான பிரச்னைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக திரும்பி பொருளாதார நிலைமைகள் நிம்மதியாக இருக்கக்கூடிய அளவிற்கு முன்னேற்றமாக இருக்கும்.
சென்ற காலங்களில் வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இனிமேல் இருக்காது. பதவி உயர்வு உடனே கிடைக்கும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் உடனே பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு.
ஐந்தாமிடத்தில் ராகு இருப்பது அதிர்ஷ்டக் குறைவானதாகவும், பிள்ளைகள் விஷயத்தில் செலவுகளும், மனவருத்தமும், விரையங்களும், பெற்றவர்களின் பேச்சை பிள்ளைகள் கேட்க மாட்டார்கள் என்றும் எதிர்மறை பலனாக சொல்லப்பட்டிருகிறது.
பதினொன்றில் இருக்கும் கேதுபகவான் ஆன்மீக விஷயங்களில் உங்களுக்குச் சில நன்மைகளைச் செய்வார்.
குறிப்பிட்ட சிலருக்கு கோவில் கட்டும் அமைப்பையும், இன்னும் சிலருக்கு ஏற்கனவே சிதிலம் அடைந்திருக்கும் பழமையான திருக்கோவில்களை சீரமைத்து தர வாய்ப்பையும் தருவார்.
காரிய வெற்றிகள்
பொதுவிஷயங்களிலும், குடும்பத்திலும், அலுவலகத்திலும் உங்களைப் பிடிக்காதவர்களின் கை தாழ்ந்து உங்களின் கை ஓங்கும்.
குடும்பத்தில் உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்கள் மேல் கோபம் கொண்டிருந்தவர்கள் தங்கள் தவறை உணர்ந்து இனிமேல் நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள்.
இதுவரை உங்களுக்கு தடங்கலாகி வந்த அனைத்துக் காரியங்களிலும் வெற்றி உண்டாகும். உங்களின் லட்சியங்கள் நிறைவேறும் காலம் இது.
கடந்த காலங்களில் பெரிய முயற்சி எடுத்து கஷ்டப்பட்டும் நினைத்த காரியம் நிறைவேறாதவர்கள் இப்போது அதிக சிரமம் இல்லாமல் அதிர்ஷ்டத்தினால் அனைத்தும் நடப்பதைப் பார்ப்பீர்கள்.
வேலை தொழில் வெளிநாடு
அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர்மாற்றமோ இருக்கும்.
தற்போது இருக்கும் வசதியான ஊரை விட்டு வேறு எங்கோ மாற்றம் இருக்கும் என்பதால் பதவி உயர்வு என்றாலும் அதை அரைகுறையான மனதுடன் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும்.
பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணமாக வெளிநாடு சென்று திரும்புவீர்கள். நீண்ட நாட்களாக விசா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது விசா கிடைக்கும்.
வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரன், பேத்திகளை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் மகன், மகள்களுக்கு உதவி செய்ய வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள்.
இதுவரை வெளிநாட்டுக் குடியுரிமை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் விசா பிரச்னையால் வெளிநாடு செல்லமுடியாமல் சிக்கலில் இருந்தவர்களுக்கும் வெளிநாட்டு வேலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் அவர்கள் நினைத்தபடியே செயல்கள் நடந்து நன்மைகள் உண்டாகும்.
உடல்நலம்
நடுத்தரவயது தாண்டியவர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் தற்போது கண்டுபிடிக்கப்படும் என்பதால் அவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுவது நல்லது.
வயதானவர்கள் சிறு உடல் நல பிரச்னைகளையும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளுவதன் மூலம் சிறிய வியாதி பெரிதாகாமல் தற்காத்துக் கொள்ளலாம்.
குடும்பம்
மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும். இதுவரை திருமணம் தாமதமான அக்கா அண்ணன் போன்றவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணமாகும்.
அதிகம் பெண்களுடன் பிறந்தவர்கள் தங்கள் சகோதரிகளின் வீட்டு சுபகாரியங்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும்.
குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு சண்டை, சச்சரவுகள் கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள், கூட்டுக் குடும்பத்தில் தொடர்ந்த முரண்பாடுகள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாததால் ஏற்பட்டிருந்த பிணக்குகள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதுகலமும் இருக்கும்.
கணவன் ஓரிடம் மனைவி வேறிடம் என்று பிரிந்து இருந்தவர்கள், வேலை விஷயமாக வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் உடனடியாக ஒன்று சேருவீர்கள்.
பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். படிப்புச்செலவு மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச் செலவுகளுக்காக கையில் இருக்கும் சேமிப்பை நீங்கள் செலவிட வேண்டியதிருக்கும்.
கடன்கள் மற்றும் எதிரிகள் தொல்லை விலகல்
பதினொன்றாமிடத்திற்கு மாறும் கேதுவின் முக்கியபலனாக இதுவரை கடன் தொல்லையில் அவதிப் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். கடனை அடைப்பதற்கான வழிகள் தெரியும்.
கடன் தீர்ந்தே ஆகவேண்டும் என்பதால் வருமானமும் கூடும். இதுவரை உங்களை விரோதியாக நினைத்தவர்கள் மனம் மாறி நட்பு பாராட்டுவார்கள்.
இதனால் இதுவரை கும்ப ராசிக்காரர்களுக்கு இருந்து வந்த கடன் தொல்லைகளும், பணப்பிரச்சினைகளும் தீரும். குறிப்பிட்ட சிலருக்கு வேண்டாத நபர்களாலும், பொறாமை கொண்டவர்களாலும் இருந்து வந்த சங்கடங்களும், உடல் நலக்குறைவுகளும் நீங்கும்.
இந்த காலகட்டத்தில் விரயங்கள் இருக்கும் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள். கோர்ட், கேஸ், நிலம் சம்பந்தமான வழக்குகள். போலீஸ் விவகாரங்கள் கிரிமினல் வழக்குகள் உள்ளவர்கள் இந்த சாதகமான காலத்தில் வழக்கை முடிக்கப் பாருங்கள்.
பெண்களுக்கான விசேஷ பலன்கள்
பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் இருக்கும் ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.
உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். பெண்கள் நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் இப்போது நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள்.
கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.
உங்களில் சிலருக்கு மாமியார் வீட்டில் இருந்து வாழ்க்கைத்துணையின் பங்காக ஏதேனும் ஒரு சொத்தோ, அல்லது நல்லதொகையோ சரியான சந்தர்ப்பத்தில் கிடைக்கும். ரியல்எஸ்டேட், வீடு கட்டிக் கொடுக்கும் புரமோட்டர்கள், சிகப்புநிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், செம்மண் பூமி, ஆறு, மலைப்பாங்கான இடங்களில் தொழில் வைத்திருப்பவர்கள் மேன்மைகளை அடைவீர்கள்.
வீடு, மனை
சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. பெருநகரங்களில் இருப்பவர்கள் அருமையான ஒரு பிளாட் வாங்குவீர்கள். வாகனமாற்றம் உண்டு. இதுவரை வாங்க முடியாத நீங்கள் விரும்பிய வாகனம் இப்போது வாங்க முடியும். தாயாருக்கு இருந்துவந்த உடல்நலக்குறைவு சரியாகும்.
ஆன்மீக சுற்றுலா
நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும். ஞானிகளின் தரிசனம் கிடைக்கும்.
மகா பெரியவரின் அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும்.
இன்னும் சிலருக்கு ஆன்மீகத்தில் அதிகமான ஈடுபாட்டையும், வேறு சிலருக்கு ஆலயம் சம்பந்தப்பட்ட பதவிகளையும் அறங்காவலர் போன்ற பணிகளையும் கேதுபகவான் தருவார் என்பதால் இந்த ராகு-கேதுப்பெயர்ச்சி கும்ப ராசிக்கு மிகவும் ஒரு நல்ல பெயர்ச்சியாக இருக்கும் என்பது உறுதி.
பூர்வபுண்ணிய ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானம் இவற்றில் வந்து அமரும் ராகு கேதுக்களின் பெயர்ச்சியால் உடல் நலம் உறுதியாகும் காலமாகும் என்பதால், இந்தப் பெயர்ச்சியை கும்ப ராசியினர் பரிபூரணமாக உபயோகப்படுத்திக் கொண்டு உயர்வது நிச்சயம் என்பதில் சந்தேகம் இல்லை.
ராகு கேது பெயர்ச்சி கும்பம் ராசிக்கான சிறப்பு பலன்கள்
(குருபெயர்ச்சி – சனிபெயர்ச்சி)
ராகு-கேது பெயர்ச்சியை தொடர்ந்து எட்டு மாதங்களில் குருபெயர்ச்சியும், குருபெயர்ச்சியை தொடர்ந்து இரண்டு மாதங்களில் சனிபகவான் பெயர்ச்சியும் நடக்க உள்ளதால், இந்த ராகு கேது பெயர்ச்சி, குருபெயர்ச்சி வரை, ஒருவிதமாகவும், குருபெயர்ச்சிக்கு பின் வேறு விதமாகவும், மேலும் சனிபெயர்ச்சிக்கு பின் மற்றொரு கோணத்தில் உங்களுக்கு பலன் அளிக்க உள்ளது என்பதை மனதில் நிறுத்துங்கள்.
ராகு கேது பெயர்ச்சியி கும்பம் ராசியில் – குருபெயர்ச்சி வரை
(07.03.2019 முதல் 04.11.2019 வரை)
உங்களுக்கு இம்முறை நல்ல பணவரவுகள் இருக்கும். இரட்டிப்பு நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.
பிற்பகுதியில் இருந்து பணப்பிரச்னைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்கலாம். ஒரு சிலர் வெளிநாட்டில் வேலை செய்யப் போக வேண்டியிருக்கும்.
எதிர்கால முன்னேற்றத்திற்கான திருப்புமுனை அமைப்புகள் இப்போது இருக்கும். வேற்றுமதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலையில் பாராட்டப்படுவீர்கள். இருந்தாலும் ஏழரைச்சனி இன்னும் சில வாரங்களில் வர இருப்பதால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகவும் வாய்ப்புகள் அதிகம்
ராகு கேது பெயர்ச்சி கும்பம் ராசியில் – குருபெயர்ச்சி பின்
(04.11.2019 முதல் 24.01.2020 வரை)
ஏழரைச்சனி அருகில் வந்து இருக்க கூடிய இந்த காலத்தில், சனியுடன் குரு சேரும் இந்த காலம் மிக சிறந்த பொருளாதார நன்மைகளை நிச்சயம் உங்களுக்கு தரும். குருபகவானும் அதிக வலுவாக உள்ளதால் மனதில் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். பெற்றோரின் மற்றும் குடும்பத்தாரின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். நிறைய செலவுகளும் விரயங்களும் இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள். புதியதாக எந்த ஒரு பெரிய முடிவையும் எடுக்கும் முன்பு ஆற அமர யோசித்து செயல்படுவது. ஏனெனில், இந்த சமயங்களில், அதிக பணபுழக்கம் இருக்கும். ஆனால், அதே பணபுழக்கம் உங்களை தவறான முடிவுகளை எடுக்கவும் காரணமாக அமைந்துவிடும் வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கை.
ராகு கேது பெயர்ச்சி கும்பம் ராசியில் – சனிபெயர்ச்சிக்கு பின்
(24.01.2020 முதல் 23.09.2020 வரை)
ஏழரைச்சனி சனி ஆரம்பித்துவிட்டதால், சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலமிது இருந்தாலும் சனி பகவான் உங்களுக்கு ராசிநாதன் என்பதாலும் அவரே உங்களுக்கு விரய, அதிபதி என்பதால், சற்று நிம்மதியும் அடையலாம். தனக்கு தானே அதிக துன்பங்களை தரமாட்டார் என்பதல்ல இதன் அர்த்தம், துன்பத்தை சமாளிக்கும் ஆற்றல் திறன் தந்துவிடுவார் என்பதே அது. எதிரி தன்னை எப்படி தாக்குவார் என்று தெரிந்தால் அதில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள முடியும் என்பதன் சூட்சமமே இது. ஆகையால், இயல்பாகவே சனிபகவானின் குணங்கள் உங்களிடம் இருப்பதால், சனி எவ்வாறு உங்களை தாக்குவார் என்பது, அந்த தாக்குதலில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும் தானே. புதிதாக மனக்கவலைகள், குழப்பங்கள், தொழில்தேக்கம், அதிர்ஷ்டக்குறைவு, தடைகள், தாமதங்கள் என்று எதிர்மறை எண்ணங்கள் சூழும் காலம். மேலும் ராசிக்கு விரய ஸ்தானத்தில் அமரும் சனிபகவானின் இந்த பெயர்ச்சியால், மருத்துவ செலவுகள் அதிகமாகும் காலம். இதனை சுப விரயங்களாக மாற்ற சனிபகவானின் காயத்ரி மந்திரம் ஜபிப்பதும், குல தெய்வ வழிபாடும் மிக முக்கியம்.
ராகு கேது பெயர்ச்சி கும்பம் ராசியில் பாதிப்பு யாருக்கு இருக்கும் – யாருக்கு இருக்காது
பாதிப்பு குறைய என்ன பரிகாரம்
சொல்லப்படும் பலன்கள் யாவும் துல்லியமாக அனைவருக்கும் சர்வநிச்சயமாக நடந்துவிடாது. அதற்கு அவரவர் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி அமைப்பு முக்கியமான காரணமாக சொல்லப்பட்டாலும், பலன்கள் நடக்கும் அமைப்பை அதன் அளவை மற்றொரு முறையிலும் கண்டறிய இயலும். அதை பற்றி தெரிந்து கொண்டு அதற்கு உண்டான இறைவழிபாடு மற்றும் பரிகார முறைகளையும் தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோவை கிளிக் செய்து பாருங்கள்.
ராகு கேது பெயர்ச்சி கும்பம் பலன்கள் 2019-2020 யாருக்கு நடக்கும் நடக்காது
************************************
மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.
https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM
மேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)
ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,
(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)
எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா
M.M.CHANDRA SEGARAN,
(M.M.சந்திரசேகரன்)
ஆலோசனை கட்டணம் குறித்த விபரமறிய உங்களின் ஜாதகத்தை
70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்
*********************************
எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்
குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு
உயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
*********************************