ராகு கேது கன்னி ராசிக்கான பெயர்ச்சி பலன்கள்
யாருக்கு பலன்கள் நடக்கும் யாருக்கு பலன்கள் நடக்காது
ராகு கேது பெயர்ச்சி கன்னி 2019
ராகு கேது பெயர்ச்சி கன்னி ராசிக்கு தற்போது ராகு கேதுக்களுக்கு நல்ல இடம் என்று சொல்லப்படும் பதினொன்றாமிடத்தில் இருந்து இன்னும் சில வாரங்களில் மாற்றம் வர போகிறது.
மார்ச் மாதம் 7ல் நடக்கவிருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் ராகு பெயர்ச்சியாகி, பத்தாம் இடத்திற்கும், கேதுபகவான் ஐந்தாமிடத்தில் இருந்துநான்காமிடத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள்
ராகு இருப்பது 11ல் (கடகம்) – வரவிருப்பது 10ல் (மிதுனம்)
கேது இருப்பது 5ல் (மகரம்) – வரவிருப்பது 4ல் (தனுசு)
பத்தாமிடராகு
லாபஸ்தானம் என்று சொல்லப்படும் 11-ம் இடம் ஒரு மிக விசேஷமான அமைப்பை கொண்டதாகும்ராகு கேதுக்கள் 11-ம் இடங்களில்இருந்து வந்த நிலையில், தற்போதுகேந்திர ஸ்தானமான பத்தாமிடத்தில் வந்து அமரும் ராகு, சனியின் பத்தாம் பார்வை ஏற்கனவே உங்கள் ராசியின் மீது இருந்து கொண்டிருக்கும் அதே வேளையில் மிக பெரிய துன்பங்கள் ஏதும் கன்னி ராசிகாரர்களுக்கு இல்லை என்றாலும். சனியோடு ராகு சம சப்தம பார்வை பெறுவதால் சற்று எச்சரிக்கை தேவை
நான்காமிடகேது
கேதுபகவான்4-மிடத்திற்கு மாறுவதால்,கன்னி ராசியினருக்கு நான்காமிட அதிபதி குரு என்பதாலும், குருபகவான் முழுசுப கிரகம் என்பதாலும்.
ராகு கேதுக்கள் எப்போதும் தான் நிற்கும் வீட்டின் அதிபதியை போன்ற பலனை ஜாதகருக்கு தரும் என்பதால், கேதுவின் பலன்கள் இம்முறை குருவின் தன்மைகளோடு வெளிபடும். ஆன்மீகத்தில் நாட்டமும், கடன்களை சுமக்கும் வகையிலும் கேது செயல்பட உள்ளார்.
ராகு கேது பெயர்ச்சி கன்னி பலன்கள்
பணவிஷயத்தில் குறைப்பட்டுக் கொள்ள எதுவும் இல்லை. தாராளமான பணப்புழக்கம்இருக்கும்.
கேது பகவானால் குறிப்பிட்ட சிலருக்கு எதிர்பாராதநல்ல பணவரவு உண்டு. கொடுக்கும் வாக்கைக் காப்பாற்ற முடியும்.
காரிய வெற்றி
நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும். இதுவரை சுபகாரியங்களுக்கு இருந்த தடை விலகி குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும்சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும்.அம்மாவால் அனுகூலம் உண்டு. தாய்வழி உறவினர்கள் உதவுவார்கள்.
வழக்கு, கோர்ட், காவல்துறை போன்றவற்றில்சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அவை அனைத்தும் நல்லபடியாகமுடிவுக்கு வரும்.
அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீளமுடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனைஅடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும்
வேலை, தொழில், வெளிநாடு
இதுவரை தள்ளிப் போய் இருந்த வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களும்வெளிநாட்டு பயணங்களும் தற்போது வெற்றிகரமாக கை கூடி வரும்.
வாழ்க்கைத்துணைவர் வழியில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும். பெற்றோர்களின்ஆசிர்வாதம் கிடைக்கும். பங்காளிச் சண்டை தீரும். பூர்வீக சொத்துப் பிரச்னைசுமுகமாக ஒரு முடிவுக்கு வரும்.
சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும்புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள்அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம். சுயதொழிலர்களுக்கு பணவரவுதடைப்படாது.
வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால்தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும்.
விவசாயிகளுக்கு இம்முறை இயற்கை ஒத்துழைக்கும். தேவையான நேரத்தில் மழைபெய்யும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு பெரிய நன்மைகள் உண்டு.
திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும்எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைப்பது இப்போது நடக்கும்.
நீண்டநாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம்சட்டென்று முடிவுக்கு வந்து பெரும்தொகை கைக்கு கிடைக்கலாம்.
குடும்பம், ஆன்மிகம்
குறிப்பிட்ட சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்டநாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போகமுடியும்.
காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போற வடமாநில புண்ணியத்தலங்களைதரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும்.
ஞானிகளின் தரிசனம் கிடைக்கும்.மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும்பாக்கியம் உண்டாகும்.
இதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும்பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள்.
குடும்பத்திற்கு தேவையானஅத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துச் சேர்க்கை இருக்கும்.பிள்ளைகளின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து வாங்க முடியும்.பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை வாங்கி சேமிக்கலாம்.
தனவரவும் மகிழ்ச்சியும்
தொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், காவல் துறையினர், நீதித்துறையினர், வாகனங்களைஇயக்குபவர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக்கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த ராகுகேதுப்பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும்.
அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு அலுவலகத்தில் தொந்தரவுகள்எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை.
உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம்இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் தற்போது கிடைக்கும்.
வீடு, மனை
வீடு வாங்குவதற்கு இதுவரை இருந்துவந்த தடைகள் நீங்கி கட்டிய வீடோ அல்லதுகாலிமனையோ, குறைந்தபட்சம் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிளாட்டோவாங்குவீர்கள்.
இருக்கும் வாகனத்தை மாற்றிவிட்டு அதைவிட நல்ல வாகனம் வாங்கமுடியும். இதுவரை வாகனம் இல்லாதவர்களுக்கு தற்போது வாகனம் வாங்குவதற்கானயோகம் இருக்கிறது.
திருமணம், குழந்தை பிறப்பு
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும். அதிலும் ஒரு விஷேச நிலையாக பெண் குழந்தைகள் மட்டும்இருந்து ஆண் குழந்தைக்கு ஏங்கும் தம்பதிகளுக்கு இம்முறை ஆண் வாரிசுகிடைக்கும்.
அதுபோலவே முதல் திருமணத்தில் தடுக்கி விழுந்து வாழ்க்கை கோணலாகி போய்துன்பத்தில் இருப்பவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை தற்பொழுது நல்ல விதமாகஅமையும். இந்த வாழ்க்கை நிலையாகவும் நீடித்தும் மனதிற்கு பிடித்த வகையிலும்இருக்கும்.
வழக்குகள், பெண்கள், உடல்நலம்
கணவன்-மனைவி விவாகரத்து பிரச்சினைகள் சம்பந்தமாக காவல்நிலையம், நீதிமன்றம் என அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு வழக்குகள் சாதகமாக முடிவிற்குவந்து நிம்மதியைத் தரும்.
இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினருக்கு திருமணம் கூடிவரும். உங்களின் உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும்உற்சாகத்துடன் இருக்கும்.
பெண்களுக்கு நல்ல பலன்கள் அதிகம்இருக்கும். இதுவரை உங்களை புரிந்துக் கொள்ளாத கணவர் இனிமேல் உங்களைபுரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார்.
பிள்ளைகள்உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில்மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுக்குடும்பத்தில் மருமகளின் பேச்சு மாமியாரால் ஏற்கப்படும்.
வயதானவர்கள் உடல்நலத்தில் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்குமேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம்.
நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போதுவருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும்.குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.
தந்தையிடமிருந்து ஏதேனும்ஆதாயம் இருக்கும். மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால்உதவிகள் இருக்கும். அண்ணன் தம்பி அக்கா தங்கை உறவுகள் பலப்படும்.
மொத்தத்தில்
பிற்பகுதி உங்களுக்கு மிகவும் நல்லபணவரவைத் தரும். ஆகவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையைவளப்படுத்திக் கொள்ளுங்கள். சோம்பலை உதறித்தள்ளி சுறுசுறுப்பாக காரியம்ஆற்ற வேண்டியது அவசியம்.
கேந்திர ஸ்தானங்களில் வந்து அமரும் பாபகிரகங்கள் உங்கள் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை விஷயங்களை சற்று ரணகளத்துடன் தரும் என்பதால், பயம் இல்லாமல், அதே சமயம் எச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது.
மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனியசம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுதமுடியும்.
மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ.ஏ.எஸ், குரூப்ஒன்தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக்கொண்டிருப்பவர்களுக்கும் நல்லசெய்திகள் கிடைக்கும். வெளிமாநில வேலைக்குச்செல்ல இருந்த தடைகள் விலகும்.
ராகு கேது பெயர்ச்சி கன்னி ராசிக்கான சிறப்பு பலன்கள்
(குருபெயர்ச்சி – சனிபெயர்ச்சி)
ராகு-கேது பெயர்ச்சியை தொடர்ந்து எட்டு மாதங்களில் குருபெயர்ச்சியும், குருபெயர்ச்சியை தொடர்ந்து இரண்டு மாதங்களில் சனிபகவான் பெயர்ச்சியும் நடக்க உள்ளதால், இந்த ராகு கேது பெயர்ச்சி, குருபெயர்ச்சி வரை, ஒருவிதமாகவும், குருபெயர்ச்சிக்கு பின் வேறு விதமாகவும், மேலும் சனிபெயர்ச்சிக்கு பின் மற்றொரு கோணத்தில் உங்களுக்கு பலன் அளிக்க உள்ளது என்பதை மனதில் நிறுத்துங்கள். ஆனால்எப்படிப் பார்த்தாலும் இம்முறை நடக்க இருக்கும் ராகு கேதுப் பெயர்ச்சிஉங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை தரும் என்பது உறுதி
ராகு கேது பெயர்ச்சி கன்னி யில் – குருபெயர்ச்சி வரை
(07.03.2019 முதல் 04.11.2019 வரை)
உங்களின் மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவை மிகவும் நன்றாக இருக்கும்.நான்கு பேர் மத்தியில் அந்தஸ்துடன் நடத்தப்படுவீர்கள். எதிர்காலத்திற்கானசேமிப்பு,பூமி லாபம் உங்களுக்கு கிடைக்கும். வீடு, காலிமனை கண்டிப்பாக வாங்கமுடியும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும். திரவப்பொருட்கள், வெள்ளைநிறம் சம்பந்தப்பட்ட தொழில், ஆற்றுமணல் கட்டுமானப்பொருள் தொழில்செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. யூனிபாரம் அணிந்து வேலை செய்யும்துறைகளில் இருப்போருக்கு நல்ல பலன்கள் நடக்கும். தந்தையைப் பெற்ற பாட்டன்வழியில் பூர்வீக சொத்து ஒன்று கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த காலத்தில்நீங்கள் செய்யும் ஒரு நல்ல உதவியால் வாழ்நாள் முழுவதும் உங்களுக்குநன்மைகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையானபொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும்இருக்கும்.
ராகு கேது பெயர்ச்சி கன்னி யில் – குருபெயர்ச்சி வரை
(04.11.2019 முதல் 24.01.2020வரை)
இந்த காலம் மிக சிறந்த பொருளாதார நன்மைகளை நிச்சயம்உங்களுக்கு தரும். தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளில் மாற்றத்தை ஏற்படுத்தித் தருவார்.என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் பாராமல் நீங்கள் ஒருவருக்கு செய்த உதவியால்அவர் மூலமாக இப்போது உங்களுக்கு நல்லபலன்கள் கிடைக்கும். இதுவரைதள்ளிப்போய் இருந்த வெளிநாட்டு தொடர்பான வேலை விஷயங்களும் வெளிநாட்டுபயணங்களும் தற்போது வெற்றிகரமாக கை கூடி வரும். வாழ்க்கைத் துணைவர்விஷயத்தில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும். குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள்வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், எதிர்காலத்திற்கான திட்டங்கள்போன்றவைகளை இப்போது செய்ய முடியும்.வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்டதொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு இம்முறை நல்ல வருமானம் இருக்கும்..
ராகு கேது பெயர்ச்சி கன்னி யில் – குருபெயர்ச்சி வரை
(24.01.2020 முதல் 23.09.2020 வரை)
குருபகவானின் பார்வை உங்கள் ராசி மீது இருந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், சனிபகவானின் பெயர்ச்சி, உங்களை கடன்களை வாங்க செய்தாலும், வாழ்க்கையில் முன்னேறும் பாதையினை உங்களுக்கு காட்டாமல் போகமாட்டார்.இதுவரை கருத்து வேற்றுமைகளாலும் குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்தகணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். காவல்துறை, ராணுவம் போன்ற சீருடை அணிந்துசெயல்படும் துறையினருக்கு இதுவரை இருந்த அனைத்துப் பிரச்னைகளும் விலகிநிம்மதி இருக்கும். வீடு, வாகன, தாயார் விஷயத்தில் செலவுகள் இருக்கும்.சினிமா, தொலைகாட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தைபயன்படுத்திக் கொள்ளுங்கள். குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள்வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், எதிர்காலத்திற்கான திட்டங்கள்போன்றவைகளை இப்போது செய்ய முடியும்.
ராகு கேது பெயர்ச்சி கன்னி ராசியில் பாதிப்பு யாருக்கு இருக்கும் –யாருக்கு இருக்காது
பாதிப்பு குறைய என்ன பரிகாரம்
சொல்லப்படும் பலன்கள் யாவும் துல்லியமாக அனைவருக்கும் சர்வநிச்சயமாக நடந்துவிடாது. அதற்கு அவரவர் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி அமைப்பு முக்கியமான காரணமாக சொல்லப்பட்டாலும், பலன்கள் நடக்கும் அமைப்பை அதன் அளவை மற்றொரு முறையிலும் கண்டறிய இயலும். அதை பற்றி தெரிந்து கொண்டு அதற்கு உண்டான இறைவழிபாடுமற்றும் பரிகார முறைகளையும் தெரிந்துகொள்ள பின்வரும் லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.
ராகு கேது பெயர்ச்சி கன்னி ராசி பலன்கள் 2019-2020 யாருக்கு நடக்கும் நடக்காது
************************************
மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமதுYouTubeசேனலானSHRI JAI SAKTHI JOTHIDAM – ஐSubscribeசெய்வதுடன் அருகில் வரும்Bell – ஐயும்Clickசெய்து கொள்ளுங்கள்.
https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM
மேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)
ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,
(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)
எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா
M.M.CHANDRA SEGARAN,
(M.M.சந்திரசேகரன்)
ஆலோசனை கட்டணம் குறித்த விபரமறிய உங்களின் ஜாதகத்தை
70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்
*********************************
எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்
குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு
உயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
*********************************