Contents
- 1 ராகு கேது பெயர்ச்சி 2019 பலன்கள்
- 1.1 யாருக்கு பலன்கள் நடக்கும் யாருக்கு பலன்கள் நடக்காது
- 1.2 ராகு கேது பெயர்ச்சி மிதுனம் 2019
- 1.3 ராகு கேது பெயர்ச்சி மிதுனம் ராசிக்கான பலன்கள்
- 1.4 பணவரவும், வேலை மற்றும் தொழில் அமைப்பும்
- 1.5 சிக்கல்களில் இருந்து விடுதலை
- 1.6 குடும்பம்– தனவரவு
- 1.7 பெண்களுக்கான கூடுதல் பலன்கள்
- 1.8 ராகு கேது பெயர்ச்சி மிதுனம் சிறப்பு பலன்கள்
- 1.9 ராகு கேது பெயர்ச்சி மிதுனம் ராசியில் பாதிப்பு யாருக்கு இருக்கும் –யாருக்கு இருக்காது
- 1.10 ராகு கேது பெயர்ச்சி மிதுனம் 2019-2020 யாருக்கு நடக்கும் நடக்காது
- 1.11 Related
ராகு கேது பெயர்ச்சி 2019 பலன்கள்
யாருக்கு பலன்கள் நடக்கும் யாருக்கு பலன்கள் நடக்காது
ராகு கேது பெயர்ச்சி மிதுனம் 2019
ராகு கேது பெயர்ச்சி மிதுனம் ராசிக்காரர்களுக்கு சாதகமற்ற பலனை தரும் இடங்களான2, 8-ம் இடங்களில் இருந்து வரும் நிலையில்,சம சப்தம பார்வையால் சனிபகவான் பார்த்துகொண்டிருக்கும்சமயத்தில் (கண்டச்சனி),இன்னும் சில வாரங்களில் மார்ச் மாதம் 7ல் நடக்கவிருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் 1 மற்றும் 9-ம்இடங்களுக்கு மாற இருக்கின்றன.
இவை அதிக நன்மைகள் தரும் இடம் இல்லை என்றாலும், இதுநாள் வரை,ராகு-கேதுவால் அனுபவித்து வந்த தீமைகளை குறைக்கும் இடங்களாகும் இது.
ராகு இருப்பது 2ல் (கடகம்)–வரவிருப்பது1ல் (மிதுனம்)
கேது இருப்பது 8ல் (மகரம்)– வரவிருப்பது7ல் (தனுசு)
ஒன்றாமிடராகு
ஒரே நேரத்தில் இரண்டு தொழில், இரண்டு வேலை செய்வோரும், சாதுர்யமான பேச்சை மூலதனமாய் வைத்து சம்பாதிப்போரும், ஆன்லைனில் வர்த்தகம் மற்றும் வேலை செய்வோரும், கடை வைத்து சம்பாதிக்கும், கடைக்குதேவையான பொருட்கள் விநியாக துறையில் இருப்பவர்களும், வண்டி வாகனம் சம்பந்தபட்ட துறையில் இருப்போரும், இசைத்துறை கலைத்துறை கலைஞர்களும்,–தற்போது ராகு மாற இருக்கும் மிதுனவீடு காற்று ராசி என்பதாலும், இரட்டைத்தன்மை ராசி என்பதாலும்,ஒன்றாம் பாவத்தின் பிடிவாத தன்மையால் நன்மைகளை அனுபவிக்கஉள்ளீர்கள். (அதிகபிடிவாதம் நன்மைகளை குறைக்கும் மேலும் நன்மைகளையே தடுத்துவிடும் எச்சரிக்கை)
ஏழாமிடகேது
கேதுபகவான்7-மிடத்திற்கு மாறுவதால்,மிதுன ராசியினருக்கு ஏழாமிட அதிபதி குரு என்பதாலும், குருபகவான்,மிதுனத்திற்கு,பாதகாதிபதி ஆவார். ராகு கேதுக்கள் எப்போதும் தான் நிற்கும் வீட்டின் அதிபதியை போன்ற பலனை ஜாதகருக்கு தரும் என்பதால், கேதுவின் பலன்கள் இம்முறை குருவின் தன்மைகளோடு வெளிபடும். ஆன்மீகத்தில் நாட்டமும், கடன்களை சுமக்கும் வகையிலும் கேது செயல்பட உள்ளார்.
ராகு கேது பெயர்ச்சி மிதுனம் ராசிக்கான பலன்கள்
கடந்த முறை ராகு-கேதுக்கள் 2, 8 எனப்படும்நன்மைகளைத் தர முடியாத ஸ்தானங்களில் அமர்ந்தார்கள்.
இதன் காரணமாகபெரும்பாலான மிதுன ராசியினர்களின் தனம், வாக்கு, குடும்பம் எனப்படும் மூன்றுஅமைப்புகளும் பாதிக்கப்பட்டன.
சிலருக்கு ஜீவன அமைப்புகளான வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றில் சிக்கல்களும், திருமண பருவத்தில் இருப்பவர்களுக்குகல்யாணம் தடையாகியாதும் இருந்து வந்தது. தற்போதைய பெயர்ச்சியின் மூலம்சர்ப்பக் கிரகங்கள் மேற்கண்ட இனங்களில் தடைகளை கொடுத்து வந்த நிலைமைமாறும்.
அதே நேரத்தில் தற்போது மாற இருக்கும் 1, 7-ம் இடங்களும் ராகு-கேதுக்களுக்கு நல்ல இடங்கள் இல்லை என்றாலும், ஏற்கனவே இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து உங்களை நிச்சயம் இளைப்பாற வைக்கும் காலமாக இருக்கும் என்பதால், மிதுன ராசிக்கு மிகப்பெரிய உதவியாகஇருக்கும்.
பணவரவும், வேலை மற்றும் தொழில் அமைப்பும்
ராகு, கேதுஒன்று, ஏழாமிடத்திற்கு வருவது பொதுவாக நண்பர்கள், கூட்டுத் தொழில்செய்பவர்கள் போன்றவர்களுக்கு ஆகாத ஒரு நிலைமை என்பதால் மிகுந்த கவனம் தேவை.
இதுவரை பண விஷயத்தில் புரட்ட முடியாமல்கஷ்டப் பட்டுக் கொண்டிருந்த மிதுன ராசிக்காரர்கள் இனிமேல் சிறிதளவு முயற்சி, பெரிதளவு அதிர்ஷ்டம், அதனால் நல்ல மேம்பாடான நிலை ஆகியவற்றை கண்கூடாககாண்பீர்கள்.
நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும்.
தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடுசெய்வதற்கு பணம் கிடைத்து தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.
வியாபாரிகளுக்கு இதுவரை இருந்து வந்ததேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும்.
பங்குதாரர்கள் இடையே கருத்து வேறுபாடு வரும். ஆனாலும் கூட்டுத் தொழில்லாபம் தரும்.
கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்துவேற்றுமைகள்நீங்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாமல்இருந்த இளைய பருவத்தினர்களுக்கு திருமணம் கூடி வரும்.
இதுவரை எட்டாமிடத்தில் இருந்து வந்தகேதுவால் பொருள் இழப்பு, கடன் தொல்லை, பேராசை பெரும் நஷ்டம் என்ற நிலை, குடும்பத்தில் சிக்கல்கள் நற்பெயர் இழப்பு, வழக்குகளை சந்தித்தல் போன்றநிலைமைகள் இருந்து வந்தன. இவை அனைத்தும் இப்போது மாறும்.
மாறாக கேதுவின் ஏழாமிட இருப்பினால் இதுவரைதிருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு கல்யாணம் கூடி வருதலும், புதிய தொழில்உருவாதலும், நண்பர்கள் மூலம் ஆதாயங்களும், வாழ்க்கை துணை விஷயத்தில்நினைப்பது நடப்பதும், குறிப்பாக காதல் நிறைவேறுதலும் இம்முறை மிதுன ராசிக்குஇருக்கும்.
கேதுபகவானின் ஏழாமிட மாறுதலால் செய்கின்ற தொழிலில் முழுமையான லாபம் கிடைக்கும்.இதுவரை வியாபாரம் நன்றாக நடந்தாலும் கையில் காசைக் காணோமே பணநெருக்கடிஇருந்து கொண்டே இருகிறதே என்ற நிலைமை மாறி தாராளமான பணப்புழக்கம் உங்களிடம்இருக்கும்.
ஆனால் ஏற்கனவே அங்கு சனிபகவான் உள்ள நிலையில் தொழில் மற்றும் வேலை செய்வோர்கள் சற்று சட்டரீதியான, சிக்கல்களுக்கு ஆளாவீர்கள்.
சிக்கல்களில் இருந்து விடுதலை
மிதுன ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்துவந்த பொருளாதார சிக்கல்கள் விலக வேண்டும் என்பதால் இந்தப் பெயர்ச்சியினால்உங்களின் தொழில் முயற்சிகள் மிகவும் நல்லபடியாக இருக்கும்.
எனவே எந்த ஒரு விஷயத்திலும் முழு முயற்சியுடன், ஆகத்திறனுடன், ஊக்கத்துடன்செயல்பட்டால் அனைத்தும் நல்லபடியாக நடந்து வாழ்க்கை மேம்பாடுகள் கிடைக்கும்என்பது உறுதி.
இதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்குதடை நீங்கி நல்ல வசதியான வீடு அமைய போகிறது. வாடகை வீட்டில் இருப்பவர்கள்இனிமேல் குத்தகை அடிப்படை வீட்டிற்காவது மாற முடியும்.
சொந்த வீடு வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களின் ஆசை இப்போது நிறைவேறும். வீடுகட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்கள் முழுதாக முடித்து கிரகப்பிரவேசம் செய்வீர்கள்.
எதிர்கால முதலீடாக குழந்தைகள் பெயரிலோ அல்லது உங்கள்பேரிலோ வீட்டுமனை வாங்குவீர்கள்.
இதுவரைவாகனம் அமையாதவர்களுக்கு வாகனம் அமையும். ஏற்கனவே இருக்கும் வாகனத்தைவிற்றுவிட்டு அதை விட நல்ல வாகனம் வாங்க முடியும்.
சொகுசு வாகனம்வாங்குவதற்கும் அமைப்பு இருக்கிறது. தாய்வழி சொந்தங்களிடம் இதுவரை இருந்துவந்த கருத்து வேற்றுமைகள் தீரும்.
அம்மாவின் ஆதரவு கிடைக்கும். தாயார்வழியில் நன்மைகள் உண்டு. மாமன்கள், சித்திகள் உதவுவார்கள். உயர்கல்வி கற்கஇருந்து வந்த தடைகள் நீங்கி சிலர் மேற்படிப்பு படிப்பீர்கள்.
வெளிநாட்டு தொடர்பால் இந்த வருடம் நன்மைஅடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர்உங்களுக்கு உதவுவார்கள்.
கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில்இருப்பவர்களுக்கு இம்முறை ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்குவாய்ப்பு இருக்கிறது.
குடும்பம்– தனவரவு
குழந்தைஇல்லாத தம்பதிகளுக்கு இப்போது குழந்தை பிறக்கும் நேரம் கூடி வந்து விட்டது.காதலித்துக் கொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு பெற்றோர் சம்மதத்துடன்திருமணம் கை கூடி வரும்.
சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களதுவாழ்க்கைத் துணையை அடையாளம் காண்பார்கள்.
குறிப்பிட்ட சிலருக்கு மூத்த சகோதரம்எனப்படும் அண்ணன், அக்காள்களால் நன்மைகள் இருக்கும். இதுவரை திருமணம்ஆகாமல் தள்ளிப் போயிருக்கும் மூத்தவர்களின் திருமணம் நல்லபடியாக நடக்கும்.
அண்ணன் அக்காக்களுக்கு திருமணம் ஆவதன் மூலம் உங்கள் திருமணத்திற்கு இருந்துவந்த தடை விலகும்.
பிறந்த ஜாதகப்படி ராகு நல்லஇடங்களில் அமர்ந்து ராகு தசை புக்தி நடப்பவர்களுக்கும் ஜாதகப்படி நன்மைகள்தரும் அமைப்புகள் நடப்ப இருப்பவர்களுக்கும் இம்முறை நல்ல பணவரவுகளையும், தனலாபங்களையும் ராகு தருவார்.
பணத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டுஇருந்தாலே பாதிப்பிரச்னைகள் தீர்ந்து விடும் என்று சொல்லுவது இப்போதுஉங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.
செய்கின்ற தொழில் வேலை, வியாபாரம் போன்றஜீவன அமைப்புகள் அனைத்தும் அதன் உச்சபட்ச லாப நிலையில் நடக்கும் என்பதால்தொழில் அமைப்புகளில் முன்னேற்றத்தைப் பற்றிய கவலை உங்களுக்கு இருக்கப்போவது இல்லை.
ஆரம்பத்தில் சிறிது சுணக்கமான பலன்கள்இருந்தாலும் நடுப்பகுதியில் இருந்து நல்ல பலன்கள் நடக்கத் துவங்கிபடிப்படியாக உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்கள்மிகவும் முன்னேற்றமாக இருக்கும்.
மிதுன ராசிக்காரர்கள் மிகப்பெரிய பொதுநலவாதிகள் என்பதாலும், நுணுக்கமான வேலைகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யக்கூடியவர்கள் என்பதாலும், எதையுமே சட்டென கிரகித்துக் கொள்வீர்கள்என்பதாலும் அடுத்து வர இருக்கும் கிரகப் பெயர்சிகளின் மூலம் நன்மைகளைஅடைவீர்கள்.
பெண்களுக்கான கூடுதல் பலன்கள்
இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம்பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும், கௌரவமும் கிடைக்கும். பெண்களின்ஆலோசனை குடும்பத்தில் இருக்கும் ஆண்களால் ஏற்கப்படும்.
வேலைக்குச் செல்லும்மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும்.நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப்பெறுவீர்கள்.
கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும்.குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.
குடும்பத்தில்சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்யமுடியும்.
மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும்.படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கமுடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில்குதூகலம் நிலவும்.
இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவுநன்றாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள்.
ராகு கேது பெயர்ச்சி மிதுனம் சிறப்பு பலன்கள்
(குருபெயர்ச்சி – சனிபெயர்ச்சி)
ராகு-கேது பெயர்ச்சியை தொடர்ந்து எட்டு மாதங்களில் குருபெயர்ச்சியும், குருபெயர்ச்சியை தொடர்ந்து இரண்டு மாதங்களில் சனிபகவான் பெயர்ச்சியும் நடக்க உள்ளதால், இந்த ராகு கேது பெயர்ச்சி, குருபெயர்ச்சி வரை, ஒருவிதமாகவும், குருபெயர்ச்சிக்கு பின் வேறு விதமாகவும், மேலும் சனிபெயர்ச்சிக்கு பின் மற்றொரு கோணத்தில் உங்களுக்கு பலன் அளிக்க உள்ளது என்பதை மனதில் நிறுத்துங்கள். ஆனால்எப்படிப் பார்த்தாலும் இம்முறை நடக்க இருக்கும் ராகு கேதுப் பெயர்ச்சிஉங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை தரும் என்பது உறுதி
ராகு கேது பெயர்ச்சி யில் – குருபெயர்ச்சி வரை
(07.03.2019 முதல் 04.11.2019 வரை)
இந்த காலங்கள் முழுவதுமே மிகவும் கவனமுடன்பங்குதாரர்களை நம்பாமல் சிக்கனமுடன் தொழில் செய்வது நல்லது.
வருடமுற்பகுதியில் மிகவும் யோகமான நிகழ்ச்சிகளை சந்திப்பீர்கள். எதிர்காலவாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது.எதிர்கால நல்வாழ்விற்கு சேமிப்பது நல்லது.
வீண் செலவுகளை முடிந்தவரை குறைத்துக் கொண்டால் இந்த பெயர்ச்சி வளமான சிறப்பாக இருக்கும். இளைய சகோதரிகளால், நண்பர்களால் மற்றும் காதலர்களிடையே பிரச்சனைகள் உருவாகும் காலம் .
ராகு கேது பெயர்ச்சி யில் – குருபெயர்ச்சி பின்
(04.11.2019 முதல் 24.01.2020வரை)
அஷ்டமசனியின் தாக்கத்தினை எதிர்நோக்க இருக்கும் காலம் நெருங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், நடக்கும் இந்த குருபெயர்ச்சி காலத்தில்வாகன விஷயங்களில் யோகம் கிடைக்கும்.
புதிய வாகனம் அமையும். ஏதாவது ஒருசெயலால் புகழ் அடையும்படி இருக்கும். இளைய பருவத்தினர் எதிர்கால வாழ்க்கைத்துணைவரை இப்போது சந்திப்பீர்கள். உங்கள் பிற்பகுதி வாழ்க்கையைநிர்ணயிக்கும் வருடமாக இது இருக்கும். சிலருக்கு கல்வியில் ஆர்வம்குறையும்.
அக்கறை எடுத்து படித்தாலும் மதிப்பெண் கிடைப்பது கடினமாகஇருக்கும். கல்வியில் தடை வரும். பருவவயதுக் குழந்தைகளுக்கு படிப்பைத் தவிரமற்ற விஷயங்களில் ஆர்வமும், நாட்டமும் இருக்கும். குழந்தைகளை பெற்றோர்கள்அக்கறையுடன் கவனிப்பது நல்லது.
அதே சமயம், பெரிதாக எதிலும் முதலீடு செய்வதோ மற்றும், மற்றவர்களை நம்பி (புதியவர்களோ, பழகியவர்களோ) எந்த செயலிலும் இறங்க வேண்டாம்
ராகு கேது பெயர்ச்சி மிதுனம் இப்பெயர்ச்சியில் – சனிபெயர்ச்சிக்கு பின்
(24.01.2020 முதல் 23.09.2020 வரை)
அஷ்டமசனியின் தாக்கத்தை, குருவின் துணையோடு எதிர்கொள்ளும் காலம் இது. ஆகையால், ஆரம்ப கட்டத்தில் பெரிதாக பிரச்சனைகள் இல்லாததது போல தோன்றினாலும், சிலவாரங்கள் கழித்து, உங்களின் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல ஆக்கிவிடும் நேரம் என்பதை மனதில் கொள்ளுங்கள். ஆகையால், ஆரம்ப காலத்தில் வரக்கூடிய பொருளாதார மேன்மையை சரியான வகையில் சேமித்து கொள்வது சிறப்பு.
இல்லையேல் உள்ளதும் போச்சுடா நொள்ள கண்ணா என்று கலங்கவேண்டி வரும். எச்சரிக்கை
ராகு கேது பெயர்ச்சி மிதுனம் ராசியில் பாதிப்பு யாருக்கு இருக்கும் –யாருக்கு இருக்காது
பாதிப்பு குறைய என்ன பரிகாரம்
சொல்லப்படும் பலன்கள் யாவும் துல்லியமாக அனைவருக்கும் சர்வநிச்சயமாக நடந்துவிடாது.
அதற்கு அவரவர் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி அமைப்பு முக்கியமான காரணமாக சொல்லப்பட்டாலும், பலன்கள் நடக்கும் அமைப்பை அதன் அளவை மற்றொரு முறையிலும் கண்டறிய இயலும்.
அதை பற்றி தெரிந்து கொண்டு அதற்கு உண்டான இறைவழிபாடுமற்றும் பரிகார முறைகளையும் தெரிந்துகொள்ள பின்வரும் லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.
ராகு கேது பெயர்ச்சி மிதுனம் 2019-2020 யாருக்கு நடக்கும் நடக்காது
***********************************
மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமதுYouTubeசேனலானSHRI JAI SAKTHI JOTHIDAM – ஐSubscribeசெய்வதுடன் அருகில் வரும்Bell – ஐயும்Clickசெய்து கொள்ளுங்கள்.
https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM
மேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)
ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,
(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)
எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா
M.M.CHANDRA SEGARAN,
(M.M.சந்திரசேகரன்)
ஆலோசனை கட்டணம் குறித்த விபரமறிய உங்களின் ஜாதகத்தை
70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்
*********************************
எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்
குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு
உயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
*********************************