ராகு கேது பெயர்ச்சி கடகம் பலன்கள்
யாருக்கு பலன்கள் நடக்கும் யாருக்கு பலன்கள் நடக்காது
ராகு கேது பெயர்ச்சி கடகம் 2019
ராகு கேது பெயர்ச்சி கடகம் ராசிக்காரர்களுக்கு 1 மற்றும் 7-ம்இடங்களில் இருந்து வந்த காலத்தில், கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோல இருந்து வந்த நிலை இருந்து வந்தது.
ஆனாலும்கடந்த சில மாதங்களாக,குருபகவானின் ஒன்பதாமிட பார்வையால், கண்கள் தெளிவடைந்தநிலையில், மேலும் கண்களை திறந்து தெளிவாக காணும் வகையில்,இன்னும் சில வாரங்களில் மார்ச் மாதம் 7ல் நடக்கவிருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம்ராகு கேதுக்கள் 6 மற்றும் 12-ம் இடங்களுக்கு மாற இருக்கின்றன.
ராகு இருப்பது 1ல் (கடகம்) – வரவிருப்பது 12ல் (மிதுனம்)
கேது இருப்பது 7ல் (மகரம்) – வரவிருப்பது 6ல் (தனுசு)
பன்னிரண்டாமிடராகு
ஊர் விட்டு ஊர் சென்று சம்பாதிக்கும் அனைவருக்கும் பொற்காலம் இது. இந்த அமைப்பு கடக ராசிக்கு மிகுந்தநற்பலன்களை கொடுக்கக் கூடியதாகும். இப்போது நடைபெற இருக்கும் ராகு-கேதுபெயர்ச்சியின் மூலம் கடந்த 2 வருடங்களாக கடகத்திற்கு இருந்து வந்தபின்னடைவுகள் நீங்கி ஒரு மிகப்பெரிய நல்ல மாற்றம் உருவாகும்.இருட்டுக் கிரகம் உங்கள் ராசியின் மேல் அமர்ந்ததால் பல கடகராசிக்காரர்களின் செயல்திறன் முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. அனைத்துமுயற்சிகளும் ஒரு முட்டுச்சந்தின் மேல் முட்டிக் கொண்டு முன்னே போகமுடியாமலும், பின்னே திரும்ப முடியாமலும் ஒரு வினோதமான நிலைமை. ராகுவினால்கடக ராசிக்காரர்களுக்கு இருந்து வந்த நிலை மாற போகிறது.
ஆறாமிடகேது
கேதுபகவான்6-மிடத்திற்கு மாறுவதால்,கடக ராசியினருக்கு ஆறாமிட அதிபதி குரு என்பதாலும், குருபகவான்,முழு சுப கிரகம் என்பதாலும், ராகு கேதுக்கள் எப்போதும் தான் நிற்கும் வீட்டின் அதிபதியை போன்ற பலனை ஜாதகருக்கு தரும் என்பதால், கேதுவின் பலன்கள் இம்முறை குருவின் தன்மைகளோடு வெளிபடும். ஆன்மீகத்தில் நாட்டமும், கடன்களை சுமக்கும்வகையிலும் கேது செயல்பட உள்ளார்.ராகு கேதுக்கள் 3, 6, 11 இடங்களில் வந்து அமரும் போதுநன்மைகளைநிச்சயம் செய்வார் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
இந்த மாற்றத்தினால் கடக ராசிக்காரர்களின் தொழில் நிலைமைகளில் இதுவரை இருந்து வந்த “கிணற்றில் போட்டகல்” போன்ற நிலைமை இனிமேல் இருக்காது. அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாகநடைபெறும். எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை இனிமேல்இருக்காது.
பணவரவு
சிலருக்குமறைமுக வழியிலான தனலாபம் உண்டாகும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. யார்வீட்டு பணமாக இருந்தாலும் உங்கள் கையில் தாராளமாக நடமாடும் என்பதால்பணச்சிக்கல் வராது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள்.குறிப்பிட்ட சிலருக்கு நம்பர் 2 தொழில் இப்போது கை கொடுக்கும்.
வீடு, மனை
நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு வீட்டுக்கனவு நனவாகும். ஆனாலும் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ வாங்கவோ செய்வீர்கள்.இந்தப் பெயர்ச்சி உங்களை ஒரு நல்ல சொத்து சேர்க்க வைக்கும்
நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போதுபொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும்.
வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் சிரமப்படவாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே கவனமாக இருங்கள். யாருக்கும் ஜாமீன் போடவேண்டாம்.
சமரசம் செய்து வைப்பது, பஞ்சாயத்து பண்ணுவது போன்றவைகள் பக்கம்தலைவைத்துப் படுக்காதீர்கள். இதனால் மனவருத்தம், வீண் விரோதங்கள் வரலாம்.
உடல்நலம்
ராசியில் இருந்து ராகு வெளியேறுவதால் இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் மீண்டும் கிடைக்கப்பெறுவீர்கள். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். செயல்திறன் கூடும்.இதுவரை இருட்டான குகைக்குள் இருந்தது போன்ற நிலைமை மாறி வெளிச்சத்திற்குவருவீர்கள். முகத்தில் பொலிவு தெரியும். உங்களை அறியாமலேயே உற்சாகத்துடன்இருப்பீர்கள்.
உங்கள் ராசியான கடகம் ஒளி மிகுந்தராசியாகி, அதன் மேல் இருந்த ஒரு இருட்டு விலகுவது, உங்களுக்கு மிகப்பெரியநல்ல மாற்றத்தை கொடுக்கும் என்பதால் கடக ராசிக்காரர்கள் அனைவருக்குமேஏதாவது ஒரு வகையில் உங்கள் விருப்பங்களுக்கும், தேவைகளுக்கும் இருந்து வந்ததடைகள் விலகுவதை காணலாம்.
கடன், நோய், எதிர்கள் தொல்லை விலகல்
ராகுவின் எதிர்முனை கிரகமான கேதுபகவான் 6-மிடத்திற்கு மாறுவதால் இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் உங்களுக்கு அடிபணியும்.
கேது 6-மிடத்தில் அமர்வது கடன், நோய்கள் அற்ற வாழ்வை தரும்என்பதால் இதுவரை கடன் தொல்லைகளில் மாட்டிக் கொண்டு தலையை பிய்த்துக்கொண்டிருந்தவர்கள் இனிமேல் நல்ல பணவரவு வந்து கடனை அடைப்பீர்கள்.
ஆறாம் வீடு அங்கே இருக்கப் போகும்கேதுவால் வலிமை அடைவதால் அந்த பாவத்தின் கடன், நோய், எதிர்ப்பு ஆகியதன்மைகள் இனிமேல் குறையும்.
எனவே அதிகமான கடன் தொல்லை, ஆரோக்கியப்பிரச்னைகளில் இருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு அதிலிருந்துவிடுபடுவதற்கான வழிமுறைகள் பிறக்கும்.
பிறந்தஜாதகத்தில் தசா புக்திகளும் ஒத்துழைத்தால் ஒன்றரை வருடத்திற்குள் கடன்இல்லாத நிலைமையை அடைய முடியும் அளவிற்கு உங்களின் பொருளாதார உயர்வு நன்றாகஇருக்கும்.
மாறாகபிறந்தஜாதகத்தில் தசா புக்திகளும் ஒத்துழைக்காத பட்சத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களை அதிக கடனில், நோயில், எதிரிகளின் தொல்லையில் தள்ளி விடும். ஆனாலும் ஆறாமிட கேது நன்மைகளை தரவல்லது என்பதால், எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது.
பாபக் கிரகங்கள் பனிரெண்டாம் வீட்டில்நன்மைகளைத் தருவார்கள் என்ற விதிப்படி, இந்தப் பெயர்ச்சியில் ராகுவால் உங்களுக்கு அதிகமாகன நற்பலன்கள்கிடைக்கும். தருவார்.
அதேபோல உங்களின் ஆறாம் பாவத்திற்கு மாறும்கேதுபகவானும் உங்களுக்கு நன்மைகளை மட்டுமே தருவார்.
இடமாற்றம்
பனிரெண்டாமிட ராகுவால் உங்களுக்கு அனைத்துவிஷயங்களிலும் மாறுதல்கள் இருக்கும். ஊர் மாற்றம், தொழில் மாற்றம், வீடுமாற்றம், தொழில் இட மாற்றம் போன்றவை தற்போது நடக்கும்.
சிலருக்கு இம்முறைவாழ்க்கையைப் புரட்டிப் போடக்கூடிய அளவிற்கு ஏதேனும் ஒரு முக்கியமானவிஷயத்திலும் மாற்றத்தை ராகு தருவார்.
அதேபோல டிரைவர்கள், டிராவல்ஸ் துறையினர், ஓரிடத்தில் இல்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கும் துறையினர் போன்றவர்களுக்குராகுபகவான் மிகுந்த நன்மைகளை அளிப்பார்.
இதுவரை வெளிநாடு போகாதவர்களை ராகுகடல் தாண்ட வைப்பார். வடமாநிலங்களுக்குப் போவது போன்ற நீண்ட பிரயாணங்களும்அடிக்கடி இருக்கும்.
விவசாயிகள், கலைஞர்கள் போன்றவர்களுக்குஇதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத்தரும் நிலை ராகுவால் உண்டு.
வேலை, தொழில், வெளிநாடு
சொல்லிக்கொடுக்கும் பணி, சாப்ட்வேர், அச்சகம், புத்தகம், அக்கவுண்ட்ஸ், பத்திரிக்கைத்துறை போன்ற துறைகளில்இருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி அபரிமிதமானநன்மைகளைத் தரும்.
மேற்கண்ட துறைகளில் இருப்போரின் வாழ்க்கை லட்சியங்கள்இப்போது நிறைவேறும்.
ரியல்எஸ்டேட், வீடு கட்டி விற்போர், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும்வெள்ளை நிறம் சம்பந்தப் பட்ட தொழில் செய்பவர்களுக்கு பட்ஜெட்டை மீறிசெலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம் வந்துஅனைத்தையும் ஈடு கட்டும்.
இதுவரை போகாத ஊர்களுக்கு செல்வீர்கள்.புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தர்ம காரியங்கள் மற்றும் அறப்பணிகளில்ஈடுபட வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலர் உங்களை ஆலயத் தொண்டில்ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.
வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்துவிஷயங்களும் உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலைசெய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும்.
இதுவரை வெளிநாடுசெல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள்மூலம் நன்மைகள் இருக்கும்.
பெண்களுக்கான கூடுதல் பலன்கள்
வேலைக்குச்செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்தபிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு.
இடமாற்றம், கேட்டபடியே கேட்கும்இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம்போக வேண்டிய சூழ்நிலை வரலாம். மாமியார் மாமனாருடன் கருத்து வேறுபாடுகளும்தந்தையுடன் உடன் பிறந்த அத்தைகளுடன் சிறிய பிரச்னைகளும் வரலாம்.
தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ளவேண்டாம். யாரிடமும் அனாவசியமாக பேசி சிக்கலை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்.ஏதேனும் கோர்ட் போலிஸ் ஸ்டேஷன் வழக்கு போன்றவைகளில் சிக்கி அலையக் கூடியவாய்ப்பு இருப்பதால் எல்லாவற்றிலும் உஷாராக இருங்கள்.
யூக வணிகத்துறையில் இந்த வருடம் அதிகமுதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும்என்பதால் நஷ்டங்கள் ஏற்படலாம். கவனத்துடன் இருங்கள்..
குடும்பம்
பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளைவைத்திருக்கும் கடக ராசிக்காரர்கள் அவர்களின் மேல் சற்றுக் கவனம் செலுத்தவேண்டிய காலம் இது.
பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறுஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால்அவர்களை கண்காணிப்பது நல்லது.
ஆக மொத்தத்தில் நிலைமை உங்களுக்கு சாதகமாக செல்வது போல இருந்தாலும், மறைமுகமாக சில எதிர்ப்புகளும், மறைமுக எதிரிகளும் உங்களை நேரம் பார்த்து பதம்பார்க்கும் காலம் என்பதால், எதிலும்எச்சரிக்கைஉணர்வோடு செயல்படுவது நல்லது.
ராகு கேது பெயர்ச்சி கடகம் ராசிக்கான சிறப்பு பலன்கள்
(குருபெயர்ச்சி – சனிபெயர்ச்சி)
ராகு-கேது பெயர்ச்சியை தொடர்ந்து எட்டு மாதங்களில் குருபெயர்ச்சியும், குருபெயர்ச்சியை தொடர்ந்து இரண்டு மாதங்களில் சனிபகவான் பெயர்ச்சியும் நடக்க உள்ளதால், இந்த ராகு கேது பெயர்ச்சி, குருபெயர்ச்சி வரை, ஒருவிதமாகவும், குருபெயர்ச்சிக்கு பின் வேறு விதமாகவும், மேலும் சனிபெயர்ச்சிக்கு பின் மற்றொரு கோணத்தில் உங்களுக்கு பலன் அளிக்க உள்ளது என்பதை மனதில் நிறுத்துங்கள். ஆனால்எப்படிப் பார்த்தாலும் இம்முறை நடக்க இருக்கும் ராகு கேதுப் பெயர்ச்சிஉங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை தரும் என்பது உறுதி
ராகு கேது பெயர்ச்சி கடகம் ராசியில் – குருபெயர்ச்சி வரை
(07.03.2019 முதல் 04.11.2019 வரை)
வாகன விஷயங்களில் யோகம் கிடைக்கும். புதிய வாகனம் அமையும். ஏதாவது ஒருசெயலால் புகழ் அடையும்படி இருக்கும்.
இளைய பருவத்தினர் எதிர்கால வாழ்க்கைத்துணைவரை இப்போது சந்திப்பீர்கள். உங்கள் பிற்பகுதி வாழ்க்கையைநிர்ணயிக்கும் காலமாக இது இருக்கும்.கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு.
இந்த காலத்தில் புதிய முதலீடுகளை, புதிய வர்த்தக எண்ணங்களை செயல்படுத்தும் முன், உங்கள் சுய ஜாதகத்தை ஆராய்ந்து, அதன் பின் செய்வது மிக நல்லது.
ராகு கேது பெயர்ச்சியில் – குருபெயர்ச்சி பின்
(04.11.2019 முதல் 24.01.2020வரை)
கண்டசனியின் தாக்கத்தினை எதிர்நோக்க இருக்கும் காலம் நெருங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், நடக்கும் இந்த குருபெயர்ச்சி (ஆறாமிடகுரு) காலத்தில். பெரிதாக எதிலும் முதலீடு செய்வதோ மற்றும், மற்றவர்களை நம்பி (புதியவர்களோ, பழகியவர்களோ) எந்த செயலிலும் இறங்க வேண்டாம். சிலருக்கு கல்வியில் ஆர்வம்குறையும். அக்கறை எடுத்து படித்தாலும் மதிப்பெண் கிடைப்பது கடினமாகஇருக்கும். கல்வியில் தடை வரும். பருவவயதுக் குழந்தைகளுக்கு படிப்பைத் தவிரமற்ற விஷயங்களில் ஆர்வமும், நாட்டமும் இருக்கும். குழந்தைகளை பெற்றோர்கள்அக்கறையுடன் கவனிப்பது நல்லது
ராகு கேது பெயர்ச்சியில் – சனிபெயர்ச்சிக்கு பின்
(24.01.2020 முதல் 23.09.2020 வரை)
அஷ்டமசனியின் தாக்கத்தை,எதிர்கொள்ள வேண்டி, முன்னரே உங்களுக்கு பரீட்சை நடத்தும் காலமான இந்த கண்டசனியின் ஆரம்ப கட்டத்தில் பெரிதாக பிரச்சனைகள் இல்லாததது போல தோன்றினாலும், சிலவாரங்கள் கழித்து, உங்களின் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல ஆக்கிவிடும் நேரம் என்பதை மனதில் கொள்ளுங்கள். ஆகையால், ஆரம்ப காலத்தில் வரக்கூடிய பொருளாதார மேன்மையை சரியான வகையில் சேமித்து கொள்வது சிறப்பு.
இல்லையேல் உள்ளதும் போச்சுடா நொள்ள கண்ணா என்று கலங்கவேண்டி வரும். எச்சரிக்கை. பெரிதாக எதிலாவது ஈடுபடுவதற்கு முன் குல தெய்வ அருள் பெற்று, செயல்படுங்கள்.
ராகு கேது பெயர்ச்சியால்பாதிப்பு
யாருக்கு இருக்கும் –யாருக்கு இருக்காது
பாதிப்பு குறைய என்ன பரிகாரம்
சொல்லப்படும் பலன்கள் யாவும் துல்லியமாக அனைவருக்கும் சர்வநிச்சயமாக நடந்துவிடாது. அதற்கு அவரவர் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி அமைப்பு முக்கியமான காரணமாக சொல்லப்பட்டாலும், பலன்கள் நடக்கும் அமைப்பை அதன் அளவை மற்றொரு முறையிலும் கண்டறிய இயலும். அதை பற்றி தெரிந்து கொண்டு அதற்கு உண்டான இறைவழிபாடுமற்றும் பரிகார முறைகளையும் தெரிந்துகொள்ள பின்வரும் லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.
ராகு கேது பெயர்ச்சி கடகம் ராசிக்கான பலன்கள் 2019-2020 யாருக்கு நடக்கும் நடக்காது
************************************
மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமதுYouTubeசேனலானSHRI JAI SAKTHI JOTHIDAM – ஐSubscribeசெய்வதுடன் அருகில் வரும்Bell – ஐயும்Clickசெய்து கொள்ளுங்கள்.
https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM
மேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)
ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,
(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)
எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா
M.M.CHANDRA SEGARAN,
(M.M.சந்திரசேகரன்)
ஆலோசனை கட்டணம் குறித்த விபரமறிய உங்களின் ஜாதகத்தை
70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்
*********************************
எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்
குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு
உயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
*********************************
[…] இருப்பது 9ல் (கடகம்) – வரவிருப்பது 8ல் […]
[…] இருப்பது 5ல் (கடகம்) – வரவிருப்பது 4ல் […]