முருங்கைக்காய் வறுவல் செட்டிநாடு முறையில் எப்படி செய்வது?

0
3323
முருங்கைக்காய் வறுவல், murungaikkaai, murungai varuval, drumstick fry, முருங்கைக்காய் , முருங்கைக்காய் வறுவல், சுவையான முருங்கைக்காய் வறுவல்,

பொதுவாக முருங்கைக்காய் அனைத்து மக்களாலுமே விரும்பி உண்ணப்படும் ஒரு காய் ஆகும். முருங்கைக்காய் வறுவல் செட்டிநாடு சுவையில் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Contents

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய்-3

சின்ன வெங்காயம்-10

தக்காளி-1

கடுகு-1/4 ஸ்பூன்

மிளகாய் தூள்-1 ஸ்பூன்

மஞசள்தூள்-1/2 ஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

கறிவேப்பிலை- சிறிதளவு

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி கடுகு போட்டு பொறிய விட வேண்டும். பின்பு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும், பிறகு, தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். பின், மஞ்சள்தூள், மிளகாய் தூள் தேவையான அளவு சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு,முருங்கைக்காயை போட்டு நன்கு வதக்கவும். பின்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி கொதிக்க வைத்து எடுக்கவும். பின்பு நன்கு வற்ற விடுங்கள்.

முருங்கைக்காய் வறுவல் ரெடி….

இந்த பதிவு அனைவருக்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள்.