Contents
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் cm health insurance card download
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் இதில் உங்களது பெயர் இருக்கிறதா இல்லையா என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் அதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்றும், அதில் உள்ள உறுப்பினர்களின் விவரம் மற்றும் அதற்கான காப்பீட்டு அட்டையை எவ்வாறு டவுன்லோட் செய்வது என்றும் இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
ஒருவேளை உங்களது பெயர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் இல்லை என்றால் புதிதாக எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம். எனவே இந்த பதிவு உங்களில் தெரிந்த யாருக்காவது பயன்படும் என்று நீங்கள் நினைத்தால் தயவு செய்து அவர்களுக்கு ஷேர் செய்யவும்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பெயர் இருக்கிறதா என்பதை அறிய என்ன தேவை?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் உங்களது பெயர் இருக்கிறதா என்பதை அறிய உங்களது ரேஷன் கார்டு எண், அதாவது ஸ்மார்ட் கார்டுக்கு முன்பு இருந்த ரேஷன் கார்டு எண் தேவை.
அல்லது நீங்கள் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய செய்திருந்த மொபைல் எண் வைத்தும் உங்களது முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான காப்பீட்டு அட்டையை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் இதில் உங்களது பெயர் இருக்கிறதா என்பதை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
https://claim.cmchistn.com/Payer/PayerMembersearch.aspx
எவ்வாறு காணலாம்?
இந்த பக்கத்தில் மூன்று வழிகளை பயன்படுத்தி உங்களது முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் -ற்கான காப்பீட்டு அட்டையை நீங்கள் காணலாம்.
- உங்களுடைய ரேஷன் கார்டு எண்
- முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் -ல் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்
- நீங்கள் புதிதாக விண்ணப்பித்திருந்தால் அதற்கான URN எண்
இதில் ஏதாவது ஒன்றை அதற்கான இடத்தில் நீங்கள் உள்ளீடு செய்து கீழே உள்ள SEARCH என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது உங்களது பெயர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் இதில் இருந்தால் கீழே அதன் விவரங்கள் வந்துவிடும்.
ஒருவேளை உங்களது பெயர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் இதில் இல்லை என்றால், எந்த தகவல்களும் வராது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் -ற்கான அட்டை டவுன்லோடு
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் இதற்கான காப்பீட்டு அட்டையை டவுன்லோடு செய்வதற்கு POLICY NO என்பதற்கு கீழே உள்ள எண்ணை கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் இதற்கான உங்களின் முழு விவரம் மற்றும் இதில் இணைந்திருக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரம் ஆகிய அனைத்தும் இடம்பெற்று இருக்கும்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் இதற்கான காப்பீட்டு அட்டையை டவுன்லோடு செய்ய இந்த இடத்தில் உள்ள Generate e-card என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது இதை டவுன்லோடு செய்து கொண்டு உங்களுக்கு தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
புதிதாக விண்ணப்பிப்பது எப்படி?
ஒருவேளை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் இதில் உங்களது பெயர் இல்லை என்றால் எவ்வாறு இதில் உங்களையும் உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் இணைத்துக் கொள்வது என்பதை பார்க்கலாம்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யும் வழிமுறை
கிராம நிர்வாக அலுவலரிடம் குடும்ப வருமானச் சான்றிதழை பெற வேண்டும்.
குடும்ப தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர் குடும்ப அட்டையின் அசல் மற்றும் நகல் மற்றும் வருமானச் சான்றிதழ் உடன் மாவட்ட கியோஸ்க்கு வர வேண்டும்.
ஆப்ரேட்டர் மேற்கண்ட ஆவணங்களை சரி பார்ப்பார். அடிப்படை விவரங்கள் மற்றும் கைரேகை பதிவு செய்த பிறகு, அவர் உங்கள் பெயரை திட்டத்தில் பதிவு செய்வார். குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தை எடுத்த பின் பயனாளிக்கு காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.