Contents
வித்தியாசமான கோணத்தில் விகாரி வருட மீனம் ராசி பலன்கள் 2019-2020
சுய ஜாதகப்படி நற்பலன்கள் அளவு மற்றும் கெடுபலன்கள் அளவு – உங்களுக்கு நீங்களே அறிந்துகொள்ளும் சூட்சமத்துடன்
மீனம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் பொதுவாக சொல்லப்படும் யாவும், அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே.
சொல்லப்படும் பலன்கள் சுய ஜாதகத்தின் தசாபுத்தி பொருத்து மாறும் என்பது உண்மையே. இருந்தாலும் இன்னொரு சூட்சமமும் உள்ளது.
அந்த சூட்சமத்தையும் அதன்படி பலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ள அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி பலன்களின் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது.
முதலில் பலன்களையும் பின்பு யார்யாருக்கு எந்த அளவு பலன்கள் கிடைக்கும் என்பதனையும் பார்ப்போம்
மீனம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-2020
வருட பலன்களை நிர்ணயிக்க உதவும் குரு மற்றும் சனி போன்ற முக்கியமான கிரகங்கள் அனைத்தும் பெயர்ச்சி காணும் இந்த விகாரி வருடத்தில், முன்னமே பெயர்ச்சி கண்டுள்ள ராகு-கேதுக்கள் என்று முக்கோண தரப்பில் பலன்கள் தர காத்துள்ளது இந்த தமிழ் புத்தாண்டான விகாரி வருடம்.
இதில், விகாரி பிறப்புக்கு சில வாரங்கள் முன்னமே மார்ச் மாதத்தில் பெயர்ச்சி கண்ட ராகு-கேதுக்கள், உங்கள் மீனம் ராசிக்கு முறையே நான்கு-பத்து என்று சொல்லபடும் கேந்திர ஸ்தானங்களில் அமர்ந்துவிட்ட நிலையில், விகாரி ஆண்டு மத்தியில் நவம்பர் மாதத்தில் நடக்கும் பெயர்ச்சி மூலம் குரு, தனது ஆட்சி வீடான தனுசிலும் (ராசியாதிபதி மற்றும் தர்மாதிபதி ஆட்சி பலம் பெற்று ராசிக்கு பத்திலும்), அதற்கடுத்து வரும் ஜனவரி மாதத்தில் நடக்கும் பெயர்ச்சி மூலம் சனியும் தனது ஆட்சி வீடான மகரத்திலும் (லாபாதிபதி மற்றும் விரயாதிபதி ஆட்சி பலம் பெற்று ராசிக்கு பதினொன்றிலும்) அமரவுள்ளனர்.
மீனம் ராசி அன்பர்களுக்கு பெரும்பாலான கிரகங்கள் இப்போது நன்மை தரும் இடத்தில் உள்ளதால் எல்லாத் துறையினருக்கும் லட்சியங்கள் நிறைவேறும் காலகட்டம் இது.
உங்களுடைய நீண்டகால திட்டங்களை இப்போது தடங்கலின்றி நிறைவேற்றிக் கொள்ளலாம்.
மீன ராசியினர் தொட்டது துலங்கும் காலம் என்பதை மனதில் நிறுத்தி, பலன்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நேரம் என்பதால், சரியாக உழைத்தால், நிறைவாக பலனை காணலாம்.
அதிர்ஷ்ட பலன்கள்
மனதில் குதூகலம் அதிகரிக்க போகிறது. உங்களின் விடாமுயற்சியும் தைரியமும் மேலோங்கி அனைத்துப் பிரச்னைகளையும் நீங்கள் தனி ஒருவராகவே சமாளித்து தீர்க்கும் அளவிற்கு ஆற்றல் பெறுவீர்கள்.
வெளிநாடு, வெளிமாநில தொடர்புகளும் அவற்றின் மூலம் பொருள்வரவும் இருக்கும். அதேபோல வருடத்தின் பாதி காலம் குருவின் ஒன்பதாமிட இருப்பால் வேலை தொழில் இடங்களில் நல்ல பெயரும், கவுரவமும் கிடைக்கும்.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பதை மனதில் நிறுத்தி வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வெற்றி வாகை சூட வைக்கும் வருடமாக இது அமையவிருக்கிறது
பூர்வபுண்ணிய ஸ்தானம் வலுப்பெறுவதால் அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் இருந்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும்.
பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். இந்த வருடம் மிகுந்த நன்மைகள் உண்டு. உங்களின் குறைகள் அனைத்தும் இறைவன் அருளால் தீரும் நேரம் இது.
பிறந்த ஜாதகத்தில் தசாபுக்திகளும் நன்றாக நடைபெறுமானால் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் இந்த வருடம் கிடைத்து விடும் என்று கிரக நிலைமைகள் காட்டுகின்றன.
பிள்ளைகள் மூலம் ஆதரவு உண்டு. பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். பிள்ளைகளுக்கான கடமைகளை பெற்றோர்கள் சரியாகச் செய்ய முடியும். தெய்வ தரிசனம் கிடைக்கும்.
வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த வட மாநில புனித யாத்திரை இப்போது போக முடியும். ஞானிகள் அருள் புரியும் ஜீவசமாதிகளுக்கு சென்று அவர்களின் அருள் பெற முடியும்.
ஆலயப் பணிகளில் ஈடுபாடு வரும். திருக்கோயில்களைச் சுற்றித் தொழில்புரிபவர்கள் மேன்மை அடைவீர்கள்.
வீடு, இடம்
வீடு கட்டலாம். பிளாட் வாங்க முடியும். நல்ல வீட்டிற்கு குடி போகலாம். மாற்றங்கள் நிச்சயம் உண்டு. வாகனயோகம் சிறப்பாக இருக்கிறது. பழைய வண்டியை விற்று விட்டு புதியதாக நல்ல மாடல் வாங்குவீர்கள்.
உங்களின் குறைகள் அனைத்தும் இறைவன் அருளால் தீரும் நேரம் இது. பிறந்த ஜாதகத்தில் தசாபுக்திகளும் நன்றாக நடைபெறுமானால் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் இந்த வருடம் கிடைத்து விடும் என்று கிரக நிலைமைகள் காட்டுகின்றன.
இழுபறியில் இருந்து வந்த பேச்சுவார்த்தைகள், நடவடிக்கைகள் சாதகமாக முடிவுக்கு வரும். வராது என்று கை விடப்பட்ட பணம் கிடைக்கும்.
பொருளாதார சிக்கல்கள் தீரும். பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும்.
கோர்ட், கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்பு முனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.
வெளிநாட்டுப் பயணத்திற்கு தடைகள் நீங்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரும். தந்தையின் ஆதரவு பூரணமாய்க் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களால் நன்மை கிடைக்கும்.
செய்கின்ற தொழிலில் அதிக முயற்சி இல்லாமலேயே நிறைந்த லாபங்கள் இப்போது கிடைக்கும். கண்மூடிக் கண் திறப்பதற்குள் பாக்கெட்டில் எப்படி பணம் வந்தது என்று சொல்ல முடியாத அமைப்பில் பண வரவு தற்போது உங்களுக்கு இருக்கும்.
இந்த வருடம் உங்கள் முயற்சிகள் அனைத்தும் பலிதமாகி மேன்மையான நிலையை அடைவீர்கள்.
அலுவலங்களில் நல்ல பெயர் கிடைக்கும். இழந்த போன பெருமையை மீட்டெடுப்பீர்கள். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கப்போகும் காலம் இது.
எனவே இனிமேல் உங்களின் உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.
வேலை
[wp_ad_camp_3]
உங்களின் சுய ஜாதகத்தில் அரசு வேலை அமைத்து தரும் கிரகங்கள் சரியான இடத்தில் சுப வலிமை பெற்று அமர்ந்திருக்கும் பட்சத்தில், தகுந்த தசாபுத்தி அமைப்புகள் நடப்பில் இருக்குமேயானால் நிச்சயம் அரசு வேலையில் உங்களை அமர வைக்கும் வருடமாக இந்த விகாரி வருடம் இருக்கும்.
சுயதொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள்.
உங்களின் எதிரிகள் ஓட்டம் பிடிப்பார்கள். வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும்.
சினிமா தொலைகாட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பிற விசயங்களில் கேட்கும் இடத்திலிருந்து உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் பாராமல் நீங்கள் ஒருவருக்கு செய்த உதவியால் வருடம் முழுவதும் நல்லபலன்கள் அவர் மூலமாக கிடைக்கும். யூக வணிகத்துறைகளும், பங்குச்சந்தையும் கை கொடுக்கும்.
புதிய ஏஜென்சி எடுக்கலாம். நல்ல கம்பெனியின் டீலர்ஷிப் கிடைக்கும். தொழிலை விரிவாக்கம் செய்யவோ புதிய கிளைகள் ஆரம்பிக்கவோ இது நல்லநேரம்.
விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற எந்த துறையினர்களாக இருந்தாலும் இந்த நல்லநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நினைத்ததை சாதிக்கலாம்
குடும்பம்
கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு.
குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு மளமள வென்று வரன்கள் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபம் புக்கிங் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று நடந்து திருமணம் கூடி வரும்.
கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்துவேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள்.
குழந்தை இல்லாத தம்பதியினருக்கு உடனடியாக குழந்தை பிறக்கும். குடும்பத்தில் சொத்துச் சேர்க்கை இருக்கும். நகை வாங்க முடியும்.
பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி உங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நிலமோ, வீட்டுமனையோ வாங்க முடியும்.
குழந்தைகளால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் கல்வியில் முன்னேற்றங்கள் இருக்கும்.
குழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட முடியும். நல்ல காலேஜில் சீட்டு கிடைக்கும்.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு.
இடமாற்றம், கேட்டபடி கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக் குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம்.
மாமியார் மாமனாருடன் கருத்து வேறுபாடுகளும் தந்தையுடன் உடன் பிறந்த அத்தைகளுடன் சிறிய பிரச்னைகளும் வரலாம்.
பெண்கள்
பெண்கள் மிகுந்த மேன்மை அடைவீர்கள். வேலைக்குப் போகும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வீட்டிலும் அலுவலகத்திலும் மாறி மாறி அவஸ்தைப்பட்ட நிலைமை இனிமேல் மாறி நிம்மதி கிடைக்கும் வருடம் இது.
தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். தந்தையிடமிருந்து ஏதேனும் ஆதாயம் இருக்கும். மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும்.
தந்தைவழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். இதுவரை இருந்துவந்த பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும்.
வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது.
நான்கில் இருக்கும் ராகு தாயார் விஷயத்தில் இழப்புக்களையும் மனக் கஷ்டங்களையும் தருவார்.
பிள்ளைகள் மூலம் ஆதரவு உண்டு. பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். பிள்ளைகளுக்கான கடமைகளை பெற்றோர்கள் சரியாகச் செய்ய முடியும்.
தெய்வ தரிசனம் கிடைக்கும். வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த வட மாநில புனித யாத்திரை இப்போது போக முடியும்.
ஞானிகள் அருள் புரியும் ஜீவசமாதிகளுக்கு சென்று அவர்களின் அருள் பெற முடியும். ஆலயப் பணிகளில் ஈடுபாடு வரும். திருக்கோயில்களைச் சுற்றித் தொழில்புரிபவர்கள் மேன்மை அடைவீர்கள்.
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும்.
இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள்.
குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்ய முடியும்.
இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது.
முக்கிய பலன்கள்
குறிப்பிட்ட சில மீன ராசிக்காரர்கள் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணையை இப்போது சந்திப்பீர்கள். காதல் வரும் நேரம் இது.
சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும்.
தனுசில் குரு சேரும் காலம் மிக சிறந்த பொருளாதார நன்மைகளை நிச்சயம் உங்களுக்கு தரும். குருபகவானும் அதிக வலுவாக உள்ளதால் மனதில் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு மிக விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும். ஒரு சிலருக்கு பிள்ளைகளின் கல்வித்தடை, அவர்களுக்கு நல்லவேலை அமையாத நிலை, திருமணம் போன்ற சுபகாரியத் தடைகளையும் ராகுபகவான் தருவார். ராகு கேதுவின் காரக தொழில் செய்த்து வரும் அன்பர்கள் பெரிய அளவில் பொருளாதார மேன்மை அடையும் காலமிது..
மகரத்தில் சனி வந்த பின்பு, அதிக பொருளாதார மேன்மையை தருவார். இன்னும் நுணுக்கமாக பார்த்தோம் எனில், மீன ராசியில் உள்ள குருவின் நட்சத்திரமான பூரட்டாதி,. இரண்டாவதாக, சனியின் உத்திரட்டாதி மற்றும் தானே நட்சத்திர தேவதையாக விளங்ககூடிய ரேவதி நட்சத்திரம் என அனைத்து வகையிலும், மீன ராசிக்கு பொருளாதார மேன்மையையும் தொழில் விருத்தியையும் தரவல்ல வகையில் சனிபகவான் லாப ஸ்தானத்தில் (மறைமுக குரு-சனி தொடர்பில்) வந்து அமருவதால், கவலை ஏதும் இல்லாத காலமிது.
ஆனால், சனிபகவான், கடின உழைப்பிற்கு பெயர் பெற்ற கிரகம் என்பதால், நீங்கள் எவ்வளவு உழைப்பை தந்தாலும், அதற்கு உண்டான பலன்கள், அழகாக உங்களை வந்து சேரும் காலம். சரியான நேரத்தில் உழைக்காமல் விட்டால் பலன்கள் குறைவாகவே கிடைக்கும். ஏனெனில் முன்பு நீங்கள் உழைத்த உழைப்பிற்கு தகுந்த பலன்கள் இல்லாமல் அதிக மன வருத்தம் அடைந்து இருப்பீர்கள். இப்போது அப்படி அல்ல. மனதில் கொள்ளுங்கள், உங்களுக்கு இது பொன்னான காலம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆக மொத்தத்தில் முக்கியமான வருட கிரகங்களின் கோட்சாரமும் மீனம் ராசி அன்பர்களுக்கு சாதகமாக இருப்பதால், தொடுவது எல்லாம் துலங்கும் வருடம் இது. காலத்தை விரயமாக்காமல் சரியான வகையில் பயன்படுத்தி வாழ்க்கையின் மிக முக்கியமான சம்பவங்களை நடத்தி கொள்ள தோதான காலகட்டம் இது.
மீனம் ராசி தமிழ்புத்தாண்டு பலன்கள் உங்களில் யாருக்கு நடக்கும்? யாருக்கு நடக்காது?
நன்மைகள் எவ்வளவு? தீமைகள் எவ்வளவு?
மேலே சொன்ன பலன்கள் யாவும், மீனம் ராசியில் பிறந்த அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே. இதற்கு மூலகாரணமாக அவரவர்களின் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி பொறுத்தே பலன்கள் நடக்கும் என்பது மட்டுமல்ல. மற்றொரு கூடுதல் காரணமாக பின்வரும் லிங்க்-ல் சொல்லப்ட்டுள்ள விதிகளை பொருத்தி பாருங்கள். அவை பொருந்தும் விதம் பொருத்து உங்களுக்கு சொல்லப்பட்ட பலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ளுங்கள். அவற்றை அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி அதன் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது. நன்மை தரும் கிரகங்களின் தசாபுத்தியோடு பொருந்திவந்தால் பலன்கள் உங்களுக்கு தித்திப்பை தரும். தீமை தரும் கிரகங்களின் தசாபுத்தியோடு பொருந்திவந்தால் பலன்கள் உங்களுக்கு கசப்பை தரும்.
நன்மைகளின் அளவை அதிகரிப்பதற்கும், தீமைகளின் அளவை குறைக்கவும் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறைகளை அறிந்து கொள்ளவும் பின்வரும் வீடியோவை கிளிக் செய்யவும்.
மீனம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் மீனம் 2019-2020
[wp_ad_camp_3]
மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.
https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM
மேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)
ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,
(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)
எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா
M.M.CHANDRA SEGARAN,
(M.M.சந்திர சேகரன்)
ஆலோசனை கட்டணம் குறித்த விபரமறிய உங்களின் ஜாதகத்தை
70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்
*********************************
எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்
குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு
உயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
*********************************