பூண்டு பால் – Poondu paal – Garlic Milk
நம்மில் அதிகம் பேர்கள் தினமும் இரவு தூங்க செல்லும் முன் பால் அருந்தும் பழக்கம் உள்ளவர்களாக உள்ளோம். பாலில் அதிகளவு புரோட்டீன், கால்சியம் போன்ற மனித உடலிற்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் நிறைதுள்ளன என்பதால் அதை தினமும் குடித்து வருகிறோம்
இனி அதோடு சேர்த்து இயற்கை மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த பூண்டு சேர்த்து பூண்டு பால் – poondu paal ஆக குடித்து வந்தால் கிடைக்கும் பயன்கள் பற்றி பார்க்கலாம்.
வெறும் பாலை குடிக்க முடியாமல் அதில், உடலிற்கு சத்து என்று விளம்பரப்படுத்தப்படும் பவுடர்களை கலந்து குடித்து வருகிறோம். ஆனால் இனிமேல் நாம் குடிக்கும் பாலை நம் உடலுக்கு சத்து மட்டுமில்லாமல் நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்த போகிறோம்.
ஆம் நண்பர்களே இந்த பதிவில் பூண்டு பால் நன்மைகள், மருத்துவ குணங்கள், தீர்க்கும் நோய்கள், செய்முறை பற்றி பார்க்கலாம்.
பூண்டு பாலின் – poondu paal மருத்துவ நன்மைகள்
- இந்த பூண்டு பால் நமது இரத்த அழுத்தத்தை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இரத்த ஓட்டத்தின் வேகத்தை சமநிலைப் படுத்துகிறது. எனவே இரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் இந்த பூண்டு பாலை தினமும் எடுத்துக்கொள்ளலாம்.
- பூண்டு ஒரு சிறந்த கிருமி நாசினி ஆகும். எனவே இதை பாலுடன் கலந்து எடுத்துக்கொள்வதால் சளி, காய்ச்சல் ஏற்பட்டவுடன் இந்த பூண்டு பாலை பருகி வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
- பிளேக், யானைக்கால், சார்ஸ், காசநோய், மலேரியா போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளுடன் எதிர்த்து போரிடவும், அழிக்கவும் செய்யும் இந்த பூண்டு பால்.
- இப்பொழுதெல்லாம் 40 வயதை தாண்டியவுடனே அனைவருக்கும் வரும் ஒரு பிரச்சினை மூட்டு வலி, கை கால் வலி, சோர்வு, வாய்வு மற்றும் செரிமான பிரச்சினை போன்றவைகள். இவை அனைத்திற்குமே ஒரே எளிய தீர்வு இந்த பூண்டு பால்.
- மேலும் நமது உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீராக்கி, நல்ல செரிமான சக்தியையும் இந்த பூண்டுபால் கொடுக்கிறது.
- நுரையீரல் ஒவ்வாமை பாதிப்பால் வரும் சளி தொல்லை, காச நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- தாய்மார்களும் இந்த பூண்டு பாலை தினமும் பருகி வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகப்படும். ஆண்களுக்கு தாது விருத்தியடையும்.
- காலை வெறும் வயிற்றில் இந்த பூண்டு பாலை குடித்து வந்தால் வயிற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் அழிந்து விடும்.
பூண்டு பால் – poondu paal செய்முறை
ஒரு நபருக்கு 200 மி.லி , 5 பூண்டு பல் வீதம் எடுத்துக்கொண்டு, பூண்டை நசுக்கி பாலில் இட்டு நன்கு கொதிக்க வைத்து, கொதி வந்ததும் அதோடு சேர்த்து பனங்கற்கண்டு, மஞ்சள்தூள் சிறிதளவு, 2 மிளகை பொடி செய்து அதில் போட்டு இன்னும் சிறிது கொதிக்க விடவும். பின்னர் இறக்கி பூண்டு பல்களை மசித்து பின் பாலை நன்கு கலக்கி குடிக்கலாம்.