Contents
புதிய வாக்காளர் பட்டியல் 2019
2019 ஆம் ஆண்டிற்கான புதிய வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் மற்றும் உங்கள் குடும்பத்தாரின் பெயர்கள் இருக்கின்றதா என்று எப்படி கண்டுபிடிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
நீங்கள் புதிதாக 18 வயது நிரம்பிய உடன் வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பித்து இருக்கலாம். அல்லது ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்து இருந்தாலும் இந்தப் 2019 புதிய வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் நீங்கள் இருக்கும் இடத்திற்கு சரியாக மாறி உள்ளதா என்பதை இந்த இரண்டு வழிகளில் தெரிந்து கொள்ளலாம்.
அதில் முதல் வழி நமது வாக்காளர் அட்டையில் வரிசை எண் பாகம் எண் கொண்டு நமது பெயர் 2019 புதிய வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறதா என்று கண்டுபிடிக்கலாம்.
மற்றொரு வழி நமது வாக்காளர் அட்டை எண்ணை தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள எண்ணிற்கு sms அனுப்புவதன் மூலமாக நமது நமது பெயர், நாம் எந்த இடத்திற்கு சென்று ஓட்டு போட வேண்டும், நமது முகவரி போன்ற விவரங்கள் அனைத்தும் நமக்கு எஸ்எம்எஸ் வாயிலாக வந்துவிடும்.
எனவே இந்த sms ஐ வைத்துக்கொண்டு நமது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
வரிசை எண் பாகம் எண்
நமது வாக்காளர் அட்டையின் பாகம் எண் வரிசை எண் எளிதாக கண்டுபிடிப்பது என்பதற்காக நமது தளத்தில் ஏற்கனவே ஒரு பதிவை பதிவிட்டுள்ளோம். எனவே அதைப் பார்த்து பயன்பெறுங்கள்.
உங்கள் வாக்காளர் அட்டையின் வரிசை எண் பாகம் எண் கண்டுபிடிக்க க்ளிக் செய்யுங்கள்
[wp_ad_camp_3]
புதிய வாக்காளர் பட்டியல் 2019 கிளிக் செய்யுங்கள்
மேலே உள்ள லிங்கை கிளிக் செய்தால் இந்த பக்கம் வரும்.
உங்களது மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதியை தேர்ந்தெடுத்து பின்னர் சமர்ப்பிக்க என்பதை கிளிக் செய்யுங்கள்.
அதன்பின்னர் இந்தப் பக்கம் வரும். இதில் இடது கைப்பக்கம் பாகம் எண்கள் வரிசையாக இருக்கும். அதற்கு நேராக நீங்கள் எங்கு சென்று வாக்களிக்க வேண்டுமோ அந்தப் பள்ளி அல்லது கல்லூரி பெயர் வரும்.
எனவே உங்களது பாகம் எண் இருக்கும் இடத்திற்கு நேராக உள்ள இடத்தை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது captcha code டைப் செய்யும் பக்கம் வரும் சரியான கேப்ட்சா எண்ணை டைப் செய்து சமர்ப்பிக்க என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுத்த பாகம் எண்ணிற்கான அனைத்து வாக்காளர்களும் அடங்கிய ஒரு பட்டியல் Pdf பார்மெட்டில் டவுன்லோட் ஆகும்.
அதை ஓபன் செய்து கொள்ளுங்கள் இப்பொழுது வலது புறம் மேலே உங்களது பாகம் என் இருக்கும் ஒரு முறை உறுதி செய்து கொள்ளுங்கள்.
கீழே ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வரிசையாக எண்கள் இருக்கும். அதில் உங்கள் வரிசை எண் எதுவோ அதைத் தேடுங்கள். உங்களது பெயர் இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒருவேளை உங்களது பெயர் அந்த வரிசையில் இல்லை என்றால் உடனே வாக்காளர் உதவி மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
Sms மூலம் வாக்காளர் பட்டியல்
அடுத்து தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமாக நமது பெயர் புதிய வாக்காளர் 2019 உள்ளதா என்று கண்டுபிடிக்கலாம்.
51969 அல்லது 166 என்ற எண்ணிற்கு “epic” ஒரு இடைவெளி விட்டு உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து அனுப்பினால், நீங்கள் வாக்களிக்கும் இடம் உங்களது முகவரி, உங்களது பெயர் உங்களது அப்பா அல்லது கணவர் பெயர் போன்ற விவரங்கள் அனைத்தும் உங்கள் மொபைல் எண்ணிற்கு வந்துவிடும்.
இதை வைத்து உங்களது பெயர் எந்த வாக்காளர் பட்டியலில் இருக்கிறது என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
குறிப்பு: இந்த எஸ்எம்எஸ் மூலம் நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் முறை பெரும்பான்மையான நேரங்களில் வேலை செய்வதில்லை.
எனவே எஸ்எம்எஸ் வரவில்லை என்றால் மேலே சொன்ன வழியில் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பயன்பட கீழே உள்ள சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.
[…] By Do SoMeThInG nEw – March 9, 2019 0 1 நமது மொபைலில் இருந்து நமக்கான வாக்குச்சாவடி எங்குள்ளது என்று கண்டுபிடிப்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் 2019 வரவிருக்கிறது. இதற்கான வாக்காளர் பட்டியல் அனைத்து மாநிலங்களுக்கும் உறுதிசெய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள். […]
[…] By Do SoMeThInG nEw – March 9, 2019 0 1 நமது மொபைலில் இருந்து நமக்கான வாக்குச்சாவடி எங்குள்ளது என்று கண்டுபிடிப்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் 2019 வரவிருக்கிறது. இதற்கான வாக்காளர் பட்டியல் அனைத்து மாநிலங்களுக்கும் உறுதிசெய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். […]