பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள்
ஒரு மனிதனுடைய பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்வது உலகில் எல்லா அரசாங்கத்தாலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் நாம் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெறுவதற்கு மிகவும் அலையை வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் தற்போது எல்லாம் கணினி மயமானதால் பிறப்பு சான்றிதழ் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் ஆன்லைனிலேயே நாம் டவுன்லோடு செய்ய முடியும். அதை பற்றி தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள்.
இந்த லிங்கை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
அதற்கடுத்து வரும் இந்த பக்கத்தில் REGISTRATION FOR NEW USERS என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து இந்த பக்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கேட்கப்பட்டுள்ள தகவல்களை டைப் செய்து கொள்ளுங்கள். பிறகு SUBMIT என்பதை கிளிக் செய்யுங்கள்.
[wp_ad_camp_3]
இப்பொழுது நீங்கள் எந்த மொபைல் எண் டைப் செய்தீர்களா அந்த எண்ணிற்கு ஒரு OTP எண் வரும். அந்த எண்ணை அடுத்து வரும் இந்த பக்கத்தில் டைப் செய்து SUBMIT ஐ கிளிக் செய்யுங்கள்.
அடுத்து இந்த பக்கம் வரும். இதில் நீங்கள் கொடுத்த மொபைல் எண் அல்லது இமெயில் கொடுத்து கடவு எண் மற்றும் கேப்ட்சா எண்ணையும் டைப் செய்து LOG IN – ஐ கிளிக் செய்யவும்.
இந்த பக்கத்தில் SERVICES என்பதை கிளிக் செய்யுங்கள்.
இந்த இடத்தில் PRINT BIRTH CERTIFICATE என்பதை கிளிக் செய்யுங்கள்.
இங்கே பிறப்பை பதிவு செய்த ஊர், பிறந்த தேதி, மொழி, பிறப்பு முறை, பாலினம் இந்த தகவல்களை மட்டும் டைப் செய்து பின் SEARCH என்பதை தேர்ந்தெடுங்கள்.
இப்பொழுது அன்றைய தினத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளுடைய பட்டியல் வரும். அதில் சமீபத்தில் பிறந்த குழந்தையாக இருந்தால் குழந்தையின் பெயரையும் பெற்றோரின் பெயரையும் வைத்து கண்டுபிடிக்கலாம்.
[wp_ad_camp_3]
15 வருடங்களுக்கு முன்பு பிறந்தவராக இருந்தால் அவர்களின் பெற்றோர் மற்றும் முகவரியை வைத்து கண்டு பிடிக்கலாம்.
பட்டியலில் உங்களுக்கு தேவையான பெயரை கண்டு பிடித்ததும் இந்த இடத்தில் SELECT என்பதை கிளிக் செய்து அதில் PRINT என்பதை கிளிக் செய்யுங்கள்.
பின்வரும் இந்தப்பக்கத்தில் தமிழில் வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் வேண்டுமா என்பதை தேர்வு செய்யுங்கள். இப்பொழுது ஒரு புதிய விண்டோவில் பிறப்பு சான்றிதழ் வந்து விடும். அதை நீங்கள் டவுன்லோடு மற்றும் பிரிண்ட் எடுத்துகொள்ளலாம்.
இந்த பிறப்பு சான்றிதழ் அனைத்து துறைகளிலும் அங்கீகரிக்கப்படும்.
இதற்கான வீடியோ
Sir,
thank you for the guidance.
But Coimbatore corporation is not shown in the page for downloading online birth certificate.