பிஎஃப் யுஏஎன் மொபைல் எண் மாற்றுவது எப்படி? How to change epf UAN Registered mobile number?
பிஎஃப் யுஏஎன் மொபைல் எண் மாற்றம் : நீங்கள் உங்கள் பிஎஃப் அக்கவுண்ட் உடன் ஏற்கனவே இணைத்துள்ள மொபைல் எண் தற்போது உங்களிடம் இல்லை என்றால் உங்களின் புதிய மொபைல் எண்ணை உங்கள் பிஎஃப் அக்கவுண்ட் உடன் இணைப்பதற்கு என்ன வழி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நீங்கள் UAN நம்பரை ஆக்டிவேட் செய்து யூசர் ஐடி, பாஸ்வேர்டு உங்களுக்கு தெரிந்திருந்தால் எளிதாக உங்கள் இபிஎப் அக்கவுண்டிற்குள் சென்று உங்களின் பிஎஃப் யுஏஎன் மொபைல் எண், ஈமெயில் ஐடி போன்ற விவரங்களை மாற்றிக்கொள்ளலாம்.
ஒருவேளை உங்களுக்கு உங்கள் பிஎஃப் அக்கவுண்டின் பாஸ்வேர்டு மறந்து அதில் பதிவு செய்த மொபைல் நம்பரும் இல்லை எனில், ஆன்லைனிலேயே மொபைல் நம்பரை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அதற்கு உங்கள் பிஎப் அக்கவுண்ட் உடன் ஆதாரை இணைத்திருக்க வேண்டும். ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணும் உங்கள் கையில் இருக்க வேண்டியது அவசியம்.
இபிஎஃப் யுஏஎன் யூசர் ஐடி, பாஸ்வேர்டு இவை இரண்டும் இல்லை, பிஎஃப் அக்கவுண்ட் உடன் இணைத்துள்ள மொபைல் எண்ணும் இல்லை, ஆதாரும் இணைக்க வில்லை எனில் நீங்கள் நேரடியாக பிஎஃப் அலுவலகத்திற்கு சென்று அங்கு உள்ள அப்ளிகேஷனை பூர்த்தி செய்து உங்கள் புதிய மொபைல் எண்ணை அப்டேட் செய்து கொள்ளலாம்.
Epf யுஏஎன் யூசர் ஐடி பாஸ்வேர்டு உள்ளது எனில் பிஎஃப் யுஏஎன் மொபைல் எண் மாற்றம் செய்வது எப்படி?
- கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் பிஎஃப் அக்கவுண்டில் லாகின் செய்து கொள்ளுங்கள்.
https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/
- இங்கே இந்த இடத்தில் Manage என்பதை கிளிக் செய்து அதில் Contact Details என்பதை கிளிக் செய்யுங்கள்.
- பின்னர் Change Mobile Number என்பதை கிளிக் செய்து, இரண்டு முறை உங்களது புதிய மொபைல் எண்ணை டைப் செய்யுங்கள்.
- பின்னர் Get Authentication என்பதை கிளிக் செய்யுங்கள்.
- அடுத்து உங்கள் புதிய மொபைல் எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை இதில் டைப் செய்து சப்மிட் என்பதை கிளிக் செய்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் epfo UAN அக்கவுண்ட் யூசர் ஐடி, பாஸ்வேர்டு மறந்து விட்டது, பிஎஃப் அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்ட பழைய மொபைல் எண்ணும் கையில் இல்லை, ஆதார் வெற்றிகரமாக இணைத்து ஆதர் பதிவு மொபைல் எண் உள்ளது எனில்
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இந்த பக்கத்திற்கு வந்து Forgot Password என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
அடுத்து வரும் பக்கத்தில் உங்களது யுஏஎன் நம்பர் ஐ டைப் செய்து கீழே உள்ள கேப்ட்சா வை டைப் செய்து சப்மிட் என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து வரும் பக்கத்தில் உங்களது யுஏஎன் நம்பர் அதற்குக் கீழே பழைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் வரும். இந்த பழைய நம்பருக்கு ஓடிபி அனுப்பவா என்பதை கேட்கும்.
ஆனால் நம்மிடம் பிஎஃப் யுஏஎன் அக்கவுண்ட் உடன் ஏற்கனவே இணைத்த இந்த பழைய மொபைல் எண் கையில் இல்லை. எனவே NO என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
பின்னர் உங்கள் பிஎஃப் கணக்கில் உள்ளவாறு உங்களது பெயர், பிறந்த தேதி, பாலினம் மூன்றையும் தேர்ந்தெடுத்து Verify என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
இவை சரியாக இருக்கும் பட்சத்தில் அடுத்ததாக கீழே கேப்ட்சா மற்றும் உங்களது ஆதார் எண்ணை டைப் செய்யும் ஆப்ஷன் வரும் அதில் சரியாக உங்களது ஆதார் எண் மற்றும் கேப்ட்சா வை டைப் செய்து Verify என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து உங்கள் ஆதார் உடன் இணைத்து உள்ள மொபைல் எண்ணை டைப் செய்யுங்கள். அருகில் உள்ள Get Otp என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்ததாக ஆதாருடன் இணைத்துள்ள மொபைல் நம்பருக்கு OTP எண் வரும். அதை கீழே Enter OTP என்ற இடத்தில் டைப் செய்து, பின்னர் கேப்ட்சா டைப் செய்து Verify என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
OTP நம்பர் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்கள் யுஏஎன் இபிஎஃப்ஓ அக்கவுண்டிற்கு புதிய பாஸ்வேர்டை டைப் செய்யும் ஆப்ஷன் வரும்.
இங்கே நீங்கள் உங்களுக்கு நினைவில் இருக்கும்படி புதிய பாஸ்வேர்டை தேர்ந்தெடுத்து டைப் செய்து கொள்ளுங்கள்.
பின்னர் நீங்கள் இதில் உள்ள முதல் வழியை பயன்படுத்தி உங்கள் புதிய பிஎஃப் யுஏஎன் மொபைல் எண் அப்டேட் செய்து கொள்ளலாம்.