how to check #epf balance online from mobile app │ epf balance Missed call number │ Epf balance know by sms │ பிஎஃப் பேலன்ஸ் பார்ப்பது எப்படி?

0
3342
பிஎஃப் பேலன்ஸ் - EPF Balance Check

Contents

பிஎஃப் – EPF – UAN

பிஎஃப் அல்லது #UAN -ல் உள்ள நமது பிஎஃப் பேலன்ஸ் – EPF Balance check செய்து எவ்வளவு என்பதை தெரிந்து கொள்வதில் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்யும். இந்த Epf என்பது தொழிலாளர் நலனுக்காக அரசாங்கமும் முதலாளியும் இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.

இதில் நமது ஊதியத்திலிருந்து ஒரு பகுதி தொகை பிடித்தம் செய்து அதே அளவு தொகையை நமது முதலாளியும் சேர்த்து இந்த EPF அமைப்பில் மாதம்தோறும் செலுத்தி வருகின்றனர்.

இது காலப்போக்கில் சேர்ந்து வட்டியுடன் நாம் ஓய்வு பெறும் போது EPF Amount ஒரு முழு தொகையாக கையில் வரும்போது வயதான காலத்தில் நமக்கு உதவிகரமாக இருக்கும். அதற்காக ஆரம்பிக்கப்பட்டது இந்த அமைப்பு.

பிஎஃப் பேலன்ஸ் – EPF Balance Check

ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை இந்த அமைப்பு பல நடைமுறை மாற்றங்களை பெற்றுள்ளது. ஓய்வு பெற்ற 15 நாட்களுக்குள் இப்பொழுது பிஎஃப் தொகை தொழிலாளிக்கு கிடைக்கும் வண்ணம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

how to check epf balance online from mobile app │ epf balance Missed call number │ Epf balance know by sms │ பிஎஃப் பேலன்ஸ் பார்ப்பது எப்படி

அதேபோல நமது பிஎஃப் பேலன்ஸ் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை நாமே தெரிந்து கொள்ளும் வகையில் ஆண்ட்ராய்டு ஆப்ஸ், UAN வெப்சைட், மிஸ்டு கால் கொடுத்து அதன் மூலம் பிஎஃப் பேலன்ஸ் தெரிந்து கொள்ளும் முறை, எஸ்எம்எஸ் அனுப்பி அதன் மூலம் நமது Epf balance check செய்துகொள்ள முடியும்.

இவ்வாறு பிஎஃப் கணக்கில் எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இந்த பிராவிடண்ட் பண்ட் நிறுவனம் நமக்கு இந்த வசதிகளை வழங்கியிருக்கிறது.

ஆனால் ஒரு சில சமயங்களில் இந்த பிஎப் பேலன்ஸ் மிஸ்டு கால் நம்பர் வேலை செய்வதில்லை. அதேபோல எஸ்எம்எஸ் அனுப்பும் முறையும் சர்வர் கோளாறுகளினால் பலநேரங்களில் இயங்குவதில்லை.

ஆனால் UAN வெப்சைட்டில் நாம் சென்று நமது பிஎஃப் பேலன்ஸ் – EPF Balance எவ்வளவு தொகை இருக்கிறது, அதில் தொழிலாளியின் தொகை எவ்வளவு, முதலாளியின் தொகை எவ்வளவு, பென்ஷன் ஸ்கீம் தொகை எவ்வளவு, இடையில் நாம் அட்வான்ஸாக பெற்ற தொகையின் விவரங்கள் போன்ற அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

அதுமட்டுமில்லாமல் இந்த யுஏஎன் இணையதளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பிராவிடண்ட் பண்ட்  தொகையிலிருந்து அட்வான்சாக வேண்டுமென்றால் விண்ணப்பித்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.

ஆன்லைனில் EPF அட்வான்ஸ் withdrawal -க்கு விண்ணப்பித்து இருந்தால் அந்த விண்ணப்பத்தின் நிலை போன்றவற்றை அறிந்து கொள்ளும் வசதியும் உண்டு.

EPF Balance check – பிஎஃப் பேலன்ஸ் by UAMNG

இப்பொழுது இந்த பதிவில் UAMNG என்ற ஒரு ஆண்ட்ராய்டு ஆப் மூலமாக EPF Balance Check செய்து எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது? மேலும் UAN Passbook எவ்வாறு பார்ப்பது மற்றும் டவுன்லோட் செய்வது என்பதையும் இந்த வீடியோவில் பார்க்க போகிறோம்.

இந்த UAMNG என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பெரும்பாலான துறைகளில் நாம் விண்ணப்பிக்கும் அல்லது பயன்பெறும் சேவைகளை மொபைல் மூலமாக பெறுவதற்காக மத்திய அரசு மூலம் உருவாக்கப்பட்ட ஒரு ஆண்ட்ராய்டு ஆப் ஆகும்.

இதைப்பற்றி வீடியோ உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பயன்பெறுங்கள்.

https://youtu.be/yHU-bcesc-A

ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த ஆப்பை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். லிங்க் கீழே உள்ளது.

https://play.google.com/store/apps/details?id=in.gov.umang.negd.g2c

  • ஆப் இன்ஸ்டால் செய்து உங்களுக்கு தெரிந்த மொழியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
  • உங்கள் மொபைல் எண் கொடுத்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.
  • அடுத்து இபிஎப்ஓ என்று தேடுதல் செய்து அதன் உள்ளே செல்லுங்கள்.
  • இந்த இபிஎப்ஓ துறையில் உள்ள அனைத்து ஆன்லைன் சேவைகளும் திரையில் இருக்கும்.
  • உங்களுக்கு மற்ற சேவைகள் தேவை என்றால் அதை கிளிக் செய்து உள்ளே சென்று கேட்கும் தகவல்களை கொடுத்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • இப்பொழுது வியூ பாஸ்புக் என்பதை கிளிக் செய்தால் உங்கள் என் கணக்கில் உள்ள தொகையை பாஸ்புக் ஆக பார்க்கலாம்.
  • நியூ என்பதை கிளிக் செய்தால் உங்கள் யுஏஎன் நம்பர் டைப் செய்து Get Otp கிளிக் செய்து உங்கள் பிஎஃப் கணக்கு உடன் இணைத்துள்ள மொபைலில் இருக்கும் வரும் Otp -ஐ டைப் செய்து Submit என்பதை கிளிக் செய்தால் நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் ID தோன்றும்.
  • நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வேலை செய்தால் அனைத்து நிறுவனங்களின் ID -களும் தோன்றும். நீங்கள் எந்த நிறுவனத்தின் இபிஎப்ஓ பாஸ்புக் பார்க்க விரும்புகிறீர்களோ அதை கிளிக் செய்யுங்கள்.
  • இப்பொழுது அனைத்து விவரங்களும் திரையில் தோன்றும்.
  • கீழே சென்று பார்த்தால் டவுன்லோட் என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து உங்கள் பிஎஃப் கணக்கின் பாஸ் புக் டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.