Contents
பல் வலி
வந்தால்தான் தெரியும் இதன் கொடூரம். நாம் சாப்பிடும் உணவுகள் பல் இடுக்குகளில் மாட்டிக்கொண்டு அதில் கிருமிகள் சேர்ந்து பல்லை அரிக்க ஆரம்பிக்கும். இந்த பல் வலி -க்கு பல்லை பிடுங்குவது, வேர் சிகிச்சை செய்வது, பல்லில் உள்ள ஓட்டையை அடைப்பது மட்டுமே தீர்வாக உள்ளது. பல் கிருமிகளை அழிக்க இன்னும் சரியான மருந்தே இல்லை எனலாம்.
ஆனால் நமது தமிழ் மருத்துவத்தில் வலியிலிருந்து நிவாரணம் பெறவும், ஆரம்பத்திலேயே பரவ விடாமல் தடுக்கவும் பல எளிய வழிமுறைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
நல்லெண்ணெய்
தினமும் காலையில் எழுந்து வாய் கொப்பளித்ததும் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி 10 நிமிடங்கள் நன்கு கொப்பளிக்கவும். நல்லெண்ணெய் நன்கு வெள்ளை நிறமாகும் வரை இதை செய்யுங்கள்.
இதை ஒரு வாரம் நீங்கள் தொடர்ந்து செய்தாலே, உங்கள் பூச்சி பல் வலி, ஈறு வீக்கம், வாய்நாற்றம் பிரச்சனைகள் குறைவதை நன்கு உணர முடியும்.
இந்த முறைக்கு ஆயில் புல்லிங் என்று சொல்லுவார்கள். இதில் இந்த பிரச்சனைகள் மட்டுமின்றி வேறு சில நோய்களும் குணமாகிறது என்று கூறுகிறார்கள்.
[wp_ad_camp_3]
குறிப்பு: இந்த வழியை உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிகொடுங்கள். மேலும் தவறாமல் இரவு உணவு சாப்பிட்ட பிறகு ஒரு முறை பல் துலக்க சொல்லிக்கொடுக்க மறவாதீர்கள்.
பாரசிடமால் மாத்திரை
பூச்சி பல் உள்ளவர்களுக்கு இரவில் திடீரென்று வலி வரும். எந்த மருந்தும் கையில் இல்லையென்றால் அவ்ளோவுதான். இந்த வேதனையை சொல்லி புரிய வைக்க முடியாது அனுபவித்தவர்களுக்குதான் தெரியம்.
இதற்கு ஒரு அதிரடி வைத்தியம் உண்டு. இந்த மாதிரி திடீரென்று பல் வலி வரும் சமயத்தில் பாரசிடமால் மாத்திரையை எடுத்து சிறிது சுடுநீர் விட்டு பசை போல் ஆக்கிகொள்ளுங்கள். அது காய்வதற்குள் பூச்சி பல் உள்ள இடத்தில வைத்து கடித்து கொள்ளுங்கள். சட்டென்று வலி குறைவதை நீங்கள் உணர முடியும்.
மிளகு
10மிளகு எடுத்து பொடி செய்து கொண்டு அதை கால் தம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு பின் மிதமான சூட்டில் பூச்சி பல் உள்ள இடதிற்கு வெளியில் உள்ள கண்ணத்தில் தடவினால் வலி குறையும். இதை அளவாக உபயோகிக்கவும்.
சோற்று கற்றாழை
அடுத்து மிக எளிதாக கிடைக்கும் சோற்றுக்கற்றாழை ஜெல் -ஐ எடுத்து வீங்கிய ஈறுகள், பல்லில் இரத்தம் கசியும் இடங்களில் தடவி பின் வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்க நல்ல பலன் கிடைக்கும்.
கொய்யா இலை
கொய்யா இலைகளை காய வைத்து அதனுடன் உப்பு சேர்த்து அரைத்து பொடி செய்து வைத்து கொள்ளுங்கள். அதை வைத்து இரவு வேளைகளில் பல் துலக்கி வர, சொத்தை பல்லால் வரும் பல் வலி, இரத்தம் கசிதல் மற்றும் ஈறு வீக்கம் ஆகியவை நன்கு குணமாகும்.
வீட்டு பொருட்கள்
சிறிய வெங்காயம், வெள்ளரிக்காய், இஞ்சி, கிராம்பு இவற்றுள் ஏதாவது ஒன்றை வலி உள்ள இடத்தில் வைத்து கடிக்க பல் வலி குறையும்.
குழந்தைகளுக்கு முக்கியமாக சொல்லி கொடுக்க வேண்டியவைகள்
- காலை பல் துலக்கினாலும் இரவு உணவு முடித்த பிறகு கண்டிப்பாக பல் துலக்க வழக்கமாக்குங்கள்.
- முடித்த அளவிற்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பற்பொடியை உபயோகிக்க பழக்குங்கள். முடியவில்லை என்றால் காலையில் பேஸ்ட் -லும் இரவு பற்பொடியையும் உபயோகிக்க பழக்குங்கள்.
- இரவு பல் துலக்கும்போது விரலை பயன்படுத்த பழக்குங்கள். விரலால் ஈறுகளை மெதுவாக அழுத்தி கொடுக்க கற்றுக்கொடுங்கள்.