பனி வெடிப்பு மருந்து
ஒவ்வொரு பருவ காலங்களிலும் ஒவ்வொரு வகையான் நோய்களா நம்மை தாக்குவது வழக்கம். கோடை காலத்தில் வேனல் கட்டி, அம்மை மற்றும் உடல் சூடு சம்பத்தப்பட்ட நோய்கள் தாக்கும். மழை காலத்தில் சளி, காய்ச்சல்னு அவதி படுவோம்.
அதேபோல இந்த பனி காலங்களில் சுவாச பிரச்சினைகள் மற்றும் பனி வெடிப்பு நோய்களுக்கு ஆளாக நேரிடும். இந்த பனி வெடிப்பு பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உள்ள பெரும் பிரச்சினை ஆகும். அதை நமக்கு எளிதாக கிடைக்கும் இயற்கை பொருட்களை கொண்டு எப்படி குணப்படுத்துவது என்று பார்க்கலாம்.
பனி உடலில் அதிக வறட்சியை கொடுக்கும். பனி காலங்களில் நமது உணவில் அதிக அளவில் நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் இருக்க வேண்டும். குளித்து விட்டு வந்தாலே பத்து பத்தாக அசிங்கமான தோற்றத்தை கொடுக்கும். இதுதான் இந்த பனி வெடிப்பு நோய் ஆகும். உடலில் சொரசொரப்பு தன்மையை ஏற்படுத்தும்.
குறிப்புகள்
பனி காலங்களில் வைட்டமின் ஏ, ஈ போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்தவற்றை சாப்பிட வேண்டும்.
தண்ணீரை அதிகமாக குடித்து வந்தால் வறட்சியைத் தடுக்கச் செய்யும்.
பழங்களை சாப்பிட்டு வந்தால் பனியின் பாதிப்பில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கலாம்.
ஆல்பகோடா பழத்தை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து போட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பப்பாளி மற்றும் கற்றாழையை கலந்து சருமத்தில் தேய்த்து வந்தால் சருமத்தைப் பொலிவாக வைக்க செய்யும். வேப்பெண்ணையை கை மற்றும் கால்களில் தேய்த்து வந்தால் வறட்சியைப் போக்கும்.
வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் சரும வறட்சியிலிருந்து விடுபடலாம்.
தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் மற்றும் பாதாம் ஆயில் கலந்து தேய்த்து வந்தால் சருமத்தைப் பாதுகாக்கும்.
உதடு வெடிப்புகள்
உதடுகளுக்கு பனிகாலங்களில் நீர்சத்து அதிகம் தேவையான ஒன்று.
விளக்கெண்ணையையும் , எலுமிச்சையையும் கலந்து போட்டு வந்தால் வெடிப்புகளுக்கு நல்லது. வெண்ணெயை தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தேங்காய் எண்ணெயுடன் உப்பு கலந்து உதடுகள் மீது மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் தரும்.
சாதாரணமாக தேங்காய் எண்ணெய்யை கொண்டு உதட்டில் மசாஜ் செய்து வந்தாலே உதடுகள் மென்மையாகும்.