நோய் எதிர்ப்பு சக்தி உங்கள் உடலில் அதிகரிக்க
நோய் எதிர்ப்பு சக்திக்கு என்ன சாப்பிடலாம் என்று தொற்று நோய் பரவும் இந்த காலகட்டத்தில் நாம் அனைவரும் தேடிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் நமது தமிழ் கலாச்சாரத்தில் நாம் உண்ணும் உணவே மருந்தாக இருப்பதால் நாம் பெரும்பாலான நோய்களை கண்டு அஞ்சத்தேவையில்லை.
அதேபோல நாம் அடிக்கடி உண்ணும் பழங்களான பப்பாளி, சாத்துக்குடி, பேரிச்சை, வெள்ளரிக்காய், ஆரஞ்சு, திராட்சை போன்றவற்றிலும் இயற்கையாகவே விட்டமின்களும் தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருப்பதும் நாம் அறிந்ததே.
மேலும் நமது நமது மக்கள் அதிக அளவில் கொண்டைக்கடலை, பச்சை பயறு, தட்டைப்பயறு, பாசிப்பயறு போன்ற பயறு வகைகளையும் அதிக அளவில் உண்டு வருகிறோம்.
ஆனால் இவற்றையெல்லாம் நாம் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்கிறோமா? எந்தெந்த பொருட்களில் எந்தெந்த விட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் உள்ளன என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோமா? என்று கேட்டால் நம்மில் பல பேருக்கு முழுவதுமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
செயற்கையான துரித உணவுகளை அதிக அளவில் எடுக்க ஆரம்பித்து விட்டோம். அதனால் நமது உடலில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கி இருக்கிறது என்று பல வகைகளில் கேள்விப்படுகிறோம்.
உடனடியாக நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க எந்த மாதிரி உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
விட்டமின் ஏ அதிகம் உள்ள உணவுகள்
விட்டமின் ஏ சத்து நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, ஆரோக்கியமாக செயல்படுவதற்கு முக்கிய பங்காற்றுகிறது. முக்கியமாக நமது, கண் பார்வை, உள் உறுப்புகள் ஆரோக்கியமாக இயங்குவதற்கும், இனப்பெருக்க சக்திக்கும் இந்த விட்டமின் ஏ இன்றியமையாததாக உள்ளது.
சர்க்கரைவள்ளி கிழங்கு, பசலைக்கீரை, பப்பாளி பழம், முருங்கைக்கீரை, மாம்பழம், ப்ரோக்கோலி, கேரட் போன்ற சைவ உணவுகளில் அதிக அளவில் விட்டமின் ஏ நிறைந்துள்ளது.
அதைப்போல முட்டை, கோழி ஆடு மாடு ஆகியவற்றின் ஈரல் களிலும், சால்மன் மீனில் அதிக அளவும் விட்டமின் ஏ உள்ளது.
விட்டமின் சி அதிகம் உள்ள உணவுகள்
விட்டமின் சி அதிகம் எடுத்துக் கொண்டால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகவும் என்று நாம் அனைவரும் அறிந்ததே. அன்றாடம் நாம் உண்ணும் உணவுகளில் எவற்றில் இந்த விட்டமின் சி அதிகம் உள்ளது என்று பார்க்கலாம்.
தக்காளி, அன்னாசிப்பழம், ஆரஞ்சு, மாம்பழம், நெல்லிக்காய், ப்ரோக்கோலி, எலுமிச்சை, காலிபிளவர், உருளைக்கிழங்கு, கொய்யாப்பழம், கிவி பழம், குடைமிளகாய் போன்ற எளிமையாக கிடைக்கும் இந்த உணவுகளில் விட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது.
எனவே தினமும் குறைந்தது இவற்றில் ஏதாவது ஒன்றை உணவில் சேர்த்துக் கொண்டோம் என்றால் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு தன்மை கட்டமைப்பு வலிமை பெரும்.
விட்டமின் ஈ ஏன் அதிகம் இருக்கும் உணவுகள்
விட்டமின் ஈ உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்வதிலும், நோய்த்தொற்றுகள் உங்களை அணுகாமலும் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் சருமப் பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாப்பதிலும் விட்டமின் ஈ முக்கிய பங்கு வகிக்கிறது.
பசலைக்கீரை விட்டமின் ஈ உற்பத்தி இயந்திரம் என்று கூட சொல்லலாம். பசலைக்கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் ஈ ஆகிய அனைத்து சத்துக்களும் கிடைப்பதால் அடிக்கடி உணவில் சேர்த்து பயன் பெறலாம்.
பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, நிலக்கடலை, சிவப்பு குடைமிளகாய், ப்ரோக்கோலி ஆகிய இறுதியில் கிடைக்கும் உணவு வகைகளில் விட்டமின் ஈ அதிக அளவில் கிடைக்கிறது.
எனவே மேற்கண்ட அனைத்து உணவுகளும் எளிதில் கிடைக்கும் அன்றாடம் உண்ணக்கூடிய உணவுகள்தான். அன்றாடம் நமது உடலுக்குத் தேவையான இந்த சத்துக்கள் கிடைக்கும் வண்ணம் உணவு எடுத்துக் கொண்டோம் என்றால், நமது உடலின் நோயெதிர்ப்பு கட்டமைப்பு வலுப்பெற்று நோய் தொற்றுகளில் இருந்து உங்களை எளிதில் காத்துக்கொள்ள முடியும். ஒருவேளை உங்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டாலும் மேற்கண்ட சத்துக்கள் உங்கள் உடலில் தேவையான அளவு இருந்தால் கிருமிகளை இயற்கையாகவே எதிர்த்துப் போராடி உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும்.