வித்தியாசமான கோணத்தில் விகாரி வருட துலாம் ராசி பலன்கள் 2019-2020
சுய ஜாதகப்படி நற்பலன்கள் அளவு மற்றும் கெடுபலன்கள் அளவு – உங்களுக்கு நீங்களே அறிந்துகொள்ளும் சூட்சமத்துடன்
துலாம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் பொதுவாக சொல்லப்படும் யாவும், அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே.
சொல்லப்படும் பலன்கள் சுய ஜாதகத்தின் தசாபுத்தி பொருத்து மாறும் என்பது உண்மையே. இருந்தாலும் இன்னொரு சூட்சமமும் உள்ளது.
அந்த சூட்சமத்தையும் அதன்படி பலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ள அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி பலன்களின் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது.
முதலில் பலன்களையும் பின்பு யார்யாருக்கு எந்த அளவு பலன்கள் கிடைக்கும் என்பதனையும் பார்ப்போம்
துலாம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-2020
வருட பலன்களை நிர்ணயிக்க உதவும் குரு மற்றும் சனி போன்ற முக்கியமான கிரகங்கள் அனைத்தும் பெயர்ச்சி காண போகும் இந்த விகாரி வருடத்தில், சர்ப்ப கிரகங்கள் என்று சொல்லபடும் ராகு-கேதுக்கள் முன்னமே பெயர்ச்சி கண்டுள்ள நிலையில் முக்கோண தரப்பில் பலன்கள் தர காத்துள்ளது இந்த தமிழ் புத்தாண்டான விகாரி தமிழ் புத்தாண்டு.
இதில், விகாரி பிறப்புக்கு சில வாரங்கள் முன்னமே மார்ச் மாதத்தில் பெயர்ச்சி கண்ட ராகு-கேதுக்கள், உங்கள் துலாம் ராசிக்கு முறையே ஒன்பது-மூன்று என்று சொல்லபடும் பாக்கிய மற்றும் வீரிய ஸ்தானங்களில் அமர்ந்துவிட்ட நிலையில், விகாரி ஆண்டு மத்தியில் நவம்பர் மாதத்தில் நடக்கும் பெயர்ச்சி மூலம் குரு, தனது ஆட்சி வீடான தனுசிலும் (ஆட்சி பலம் பெற்று ராசிக்கு மூன்றிலும்), அதற்கடுத்து வரும் ஜனவரி மாதத்தில் நடக்கும் பெயர்ச்சி மூலம் சனியும் தனது ஆட்சி வீடான மகரத்தில் (ஆட்சி பலம் பெற்று அர்த்த அஷ்டமசனியாக ராசிக்கு நான்கில்) அமரவுள்ளனர்.
துலாம் ராசிக்கு வருடம் ஆரம்பத்தில் இருந்தே நல்ல பலன்கள் அள்ளித்தரும் தரும் வகையில் வருட கிரகங்களின் கோட்சாரங்கள் நல்ல நிலையில் அமைந்துள்ள வருடமாக இந்த வருடம் இருப்பதால் மனமும் உடலும் துள்ளி திரிய போகிறது. உங்கள் சுய ஜாதகத்தில் அதிக வலிமை பெற்றுள்ள கிரகம் எது என கண்டறிந்து அதற்கான இறைவழிபாடு அல்லது இரத்தின கல் அணிவதன் மூலம், இந்த விகாரி வருடத்தின் பலன்களை உங்களுக்கு சாதகமாக்கி கொள்ளுங்கள்.
நல்ல வேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம், பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும்.
கலைத்துறையினர் நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டும்.
சொந்தத்தொழில் செய்பவர்கள் தங்களுடைய தொழில் விரிவாக்கத்தினை சற்றுக் கவனமுடன் செயல்படுத்துவது நல்லது. வேலைக்காரர்களை நம்ப வேண்டாம்.
வேலை
[wp_ad_camp_3]
வேலைக்காரர்கள் திருடுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
அரசு வேலை பெற தேர்வு எழுதி வெற்றி பெற்ற பின்பும், வேலையில் சேர காத்திருக்கும் அன்பர்களுக்கு இந்த வருடம் தித்திப்பை தரவுள்ளது.
உங்களின் சுய ஜாதகத்தில் அரசு வேலை அமைத்து தரும் கிரகங்கள் சரியான இடத்தில் சுப வலிமை பெற்று அமர்ந்திருக்கும் பட்சத்தில், தகுந்த தசாபுத்தி அமைப்புகள் நடப்பில் இருக்குமேயானால் நிச்சயம் அரசு வேலையில் உங்களை அமர வைக்கும் வருடமாக இந்த விகாரி வருடம் இருக்கும்.
அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும்.
தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
தொழில்
தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் கண்ணும் கருத்துமாக விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். யாரையும் நம்பக் கூடாது. எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாக இருப்பது நல்லதல்ல.
பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும்.
தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்றமாக நடக்கும்.
குலதெய்வத்தின் அருள் இந்த வருடம் உங்கள் குடும்பத்திற்கு பூரணமாக கிடைக்கும். நவகிரக சுற்றுலா போவீர்கள். நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடன்களை செலுத்தலாம். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும்.
உயர்கல்வி கற்க இதுவரை இருந்து வந்த தடங்கல்கள் விலகும். ஒரு சிலர் ஏற்கனவே இருக்கும் படிப்புத்தடை விலகி தொடர்ந்து படிப்பீர்கள்.
வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது
மார்ச் மாதம் நடந்த’ ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் கேதுபகவான் மிகவும் நல்ல பலன்களை தரக்கூடிய மூன்றாமிடத்திற்கு மாறுவது துலாம் ராசிக்கு ஒரு சிறந்த அமைப்பு.
எனவே இந்த ஆண்டின் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் அபரிமிதமான தொழில் முன்னேற்றங்களையும், பொருளாதார லாபங்களையும், பணவரவுகளையும் துலாம் ராசிக்காரர்கள் எதிர்கொண்டு சந்தோஷப்படுவீர்கள்.
கேது பகவான் பிறந்த ஜாதகத்திலோ, கோட்சார நிலையிலோ யோக நிலையில் அமரும்போது மறைமுகமான வழிகளில் அளவற்ற செல்வத்தைத் அதிர்ஷ்டம் தரும் அமைப்பில் துலாம் ராசிக்கு வர இருப்பதால் சாதுர்யமான வழிகளில் உங்களை ஈடுபடுத்தி தனலாபத்தைத் தருவார்.
அதிர்ஷ்ட பலன்கள்
திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். சிலருக்கு பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற அதிர்ஷ்ட விளைவுகளில் குறிப்பிட்டதக்க அளவிற்கு பணலாபம் கிடைக்கும்.
அதேநேரத்தில் இந்த பலன் எல்லோருக்கும் பொருந்தாது. ஜனன கால தசாபுக்தி அமைப்புகள் சரியாக இல்லாத துலாம் ராசிக்காரர்களுக்கு பங்கு சந்தையில் சரிவுகள் வரலாம் என்பதால் இதில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
வெளிநாட்டுக்கு போக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் வெற்றி கிடைக்கும். ஏற்கனவே வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் நன்மைகளை அடைவீர்கள்.
வயதானவர்கள் தங்கள் பிள்ளைகளை பார்ப்பதற்கோ, பேரன், பேத்தி பிரசவத்திற்கோ வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
வருடம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும்.
தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.
பண வரவிற்கு தடையாக இருந்த விஷயங்கள் அனைத்தும் மாறி உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுப் பெற்று பொருளாதார மேன்மை அடைவீர்கள்.
குரு இருக்கப் போகும் இடம் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் என்பதால் உங்கள் சொல்லும் பலித்து, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும்.
நாளைக்கு வா பணம் தருகிறேன் என்று ஒருவருக்கு வாக்குறுதி அளித்தால் இன்றைக்கு இரவே அவருக்கென்று பணத்தை ஒதுக்கி வைக்கமுடியும்.
நீண்ட நாட்களாக குழந்தைச்செல்வம் இல்லாத தம்பதிகளுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும். இதுவரை குடும்பத்திற்கு வாங்க முடியாத அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தையும் வாங்கி வீட்டை அழகுபடுத்துவீர்கள்.
குறிப்பிட்ட சிலருக்கு ஹவுசிங் லோன் போன்றவைகளின் மூலம் வீடுவாங்கும் அமைப்பு ஏற்பட இருக்கிறது.
வங்கிக்கடன் ஏற்படும். ஏற்கனவே இருக்கின்ற வாகனத்தையோ, சொத்தையோ விற்றுவிட்டு மேற்கொண்டு கடன் வாங்கி அதை விட நல்ல வாகனமோ, சொத்தோ வாங்குவீர்கள்.
பெண்கள்
பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் இருக்கும் ஆண்களால் ஏற்கப்படும்.
வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.
ஆக மொத்தத்தில் துலாம் ராசிக்கு இந்த புதிய வருடம், கடந்த 10 வருடங்களாக உங்களுக்கு இருந்து வந்த துயரங்களை துடைத்தெடுத்து, ஆனந்த கோலத்தில் உங்களை நீங்களே, பார்த்து பெருமைப்பட்டு கொள்ள செய்யபோகும் வருடமாக இந்த வருடம் இருப்பதால் மனமும் உடலும் துள்ளி திரிய போகிறது.
நல்ல கோட்சார நிலை அமைந்துள்ள பின்பும் துலாம் ராசி அன்பர்கள் யாரேனும் இன்னமும், துன்பங்கள் அனுபவித்துக்கொண்டு இருப்பீர்களே எனில், உங்களுக்கு ஆகாத தசாபுத்தி அல்லது உங்கள் குடும்பத்தில் யார்க்கேனும் அஷ்டமசனி அல்லது ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கும்
துலாம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் உங்களில் யாருக்கு நடக்கும்? யாருக்கு நடக்காது?
நன்மைகள் எவ்வளவு? தீமைகள் எவ்வளவு?
மேலே சொன்ன பலன்கள் யாவும், விருச்சிகம் ராசியில் பிறந்த அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே.
இதற்கு மூலகாரணமாக அவரவர்களின் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி பொறுத்தே பலன்கள் நடக்கும் என்பது மட்டுமல்ல.
மற்றொரு கூடுதல் காரணமாக பின்வரும் லிங்க்-ல் சொல்லப்ட்டுள்ள விதிகளை பொருத்தி பாருங்கள். அவை பொருந்தும் விதம் பொருத்து உங்களுக்கு சொல்லப்பட்ட பலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ளுங்கள்.
அவற்றை அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி அதன் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது. நன்மை தரும் கிரகங்களின் தசாபுத்தியோடு பொருந்திவந்தால் பலன்கள் உங்களுக்கு தித்திப்பை தரும். தீமை தரும் கிரகங்களின் தசாபுத்தியோடு பொருந்திவந்தால் பலன்கள் உங்களுக்கு கசப்பை தரும்.
நன்மைகளின் அளவை அதிகரிப்பதற்கும், தீமைகளின் அளவை குறைக்கவும் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறைகளை அறிந்து கொள்ளவும் பின்வரும் வீடியோவை கிளிக் செய்யவும்.
துலாம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் துலாம் 2019-2020
[wp_ad_camp_3]
மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.
https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM
மேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)
ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,
(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)
எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா
M.M.CHANDRA SEGARAN,
(M.M.சந்திர சேகரன்)
ஆலோசனை கட்டணம் குறித்த விபரமறிய உங்களின் ஜாதகத்தை
70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்
*********************************
எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்
குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு
உயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
*********************************