வித்தியாசமான கோணத்தில் விகாரி வருட தனுசு ராசி பலன்கள் 2019-2020
சுய ஜாதகப்படி நற்பலன்கள் அளவு மற்றும் கெடுபலன்கள் அளவு – உங்களுக்கு நீங்களே அறிந்துகொள்ளும் சூட்சமத்துடன்
தனுசு ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் பொதுவாக சொல்லப்படும் யாவும், அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே.
சொல்லப்படும் பலன்கள் சுய ஜாதகத்தின் தசாபுத்தி பொருத்து மாறும் என்பது உண்மையே. இருந்தாலும் இன்னொரு சூட்சமமும் உள்ளது.
அந்த சூட்சமத்தையும் அதன்படி பலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ள அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி பலன்களின் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது.
முதலில் பலன்களையும் பின்பு யார்யாருக்கு எந்த அளவு பலன்கள் கிடைக்கும் என்பதனையும் பார்ப்போம்
தனுசு ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 -2020
வருட பலன்களை நிர்ணயிக்க உதவும் குரு மற்றும் சனி போன்ற முக்கியமான கிரகங்கள் அனைத்தும் பெயர்ச்சி காண போகும் இந்த விகாரி வருடத்தில், சர்ப்ப கிரகங்கள் என்று சொல்லபடும் ராகு-கேதுக்கள் முன்னமே பெயர்ச்சி கண்டுள்ள நிலையில் முக்கோண தரப்பில் பலன்கள் தர காத்துள்ளது இந்த தமிழ் புத்தாண்டான விகாரி தமிழ் புத்தாண்டு.
இதில், விகாரி பிறப்புக்கு சில வாரங்கள் முன்னமே மார்ச் மாதத்தில் பெயர்ச்சி கண்ட ராகு-கேதுக்கள், உங்கள் தனுசு ராசிக்கு முறையே ஏழு-ஒன்று என்று சொல்லபடும் களத்திர மற்றும் ஆன்ம ஸ்தானங்களில் அமர்ந்துவிட்ட நிலையில், விகாரி ஆண்டு மத்தியில் நவம்பர் மாதத்தில் நடக்கும் பெயர்ச்சி மூலம் குரு, தனது ஆட்சி வீடான தனுசிலும் (ஆட்சி பலம் பெற்று ராசியிலேயே ராசியாதிபதி), அதற்கடுத்து வரும் ஜனவரி மாதத்தில் நடக்கும் பெயர்ச்சி மூலம் சனியும் தனது ஆட்சி வீடான மகரத்தில் (ஆட்சி பலம் பெற்று ராசிக்கு இரண்டாம் அதிபதி – இரண்டில்) அமரவுள்ளனர்.
தனுசு ராசி அன்பர்கள் ஜென்மசனியின் தாக்கத்தோடு இந்த வருடத்தை ஆரம்பித்து அடுத்த வருடம் ஆரம்பத்தில் ஜென்மசனியின் தாக்கத்தில் இருந்து விலக போகிறீர்கள்.
ஜென்ம ராசியில் சேர்ந்திருக்கும் ஜென்ம சனி, இந்த வருடம் முழுவதும் எந்தவொரு விசயத்தையும் நடந்து முடியும் வரை, உங்களை ஒருவித மனகலக்கதுடனே வைத்திருந்து இறுதிகட்டம் வரை நடக்குமா நடக்காதா என்ற பீதியில் வைத்தே காரியங்களை நடத்தும்.
காரிய வெற்றி
நினைத்த காரியம் ஒன்றாகவும், நடந்து முடியும் காரியம் வேறு ஒன்றாகவும் இருக்க வாய்ப்புகள் அதிகம்.
நினைத்த காரியம் நினைத்தபடி நடந்து முடிக்க இந்த வருடம் நீங்கள் உங்களின் காரியம் நடந்து முடிக்கும் வரை, முக்கியமான நபர்களிடம் மட்டும், அல்லது முடிந்த வரை யாரிடமும் அதனை பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதே சாலசிறந்தது.
விரய செலவுகளை சுப விரயங்களாக மாற்ற சூழ்நிலைகளை உருவாக்கி கொள்ளமுடியும். பலருக்கு ஏழரைசனி மற்றும் அட்டமசனியின் போதுதான் திருமணம், குழந்தைபிறப்பு போன்ற சுபகாரியங்கள் நடக்கும். அதன்படி, திருமணம் மற்றும் குழந்தை பிறப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த வருடம் ஒரு தித்திப்பான வருடமே.
ஆனாலும் டென்ஷன் மற்றும் சிற்சில பிரச்சனைகளுடன் அந்த சுபகாரியங்கள் நிறைவேறும்.
என்னதான் ஏழரைச் சனி என்றாலும் தனுசு, குருவின் வீடாகையால் தனுசு ராசிக்கு சனி பெரிய கெடுதல்கள் எதையும் செய்ய மாட்டார்.
மேலும் விகாரி ஆண்டின் மத்தியில், குருவும் பெயர்ச்சியாகி சனியோடு இணைய உள்ளதால் எதையும் கடைசி நேரத்தில் சமாளித்து வெற்றி அடைய முடியும். இருந்தாலும் சற்று எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவது சிறப்பு.
மறைமுக எதிரிகள் தோன்றுவார்கள். நண்பர் ஒருவரே உங்களுக்கு எதிராக திரும்பி விரோதியாகும் வாய்ப்பு இருக்கிறது.
அதற்கு உங்களுடைய முன் யோசனை இல்லாத அவரசக் குடுக்கைத்தனமான செய்கையோ அல்லது கவனமின்றி சொல்லப்படும் ஒரு வார்த்தையோ காரணமாக இருக்கும்.
புது தொழில்
இந்த வருடம் புதிதாக தொழில் ஆரம்பிப்பது, புதிய முயற்சிகள் எதையும் செய்வது கூடாது. ஏழரைச்சனி நேரத்தில் ஆரம்பிக்கப்படும் தொழில் முயற்சிகள் கடுமையான சிக்கல்களையும், தேவைக்கு அதிகமான உடல் உழைப்பையும் தரும் என்பதால் புதிய தொழில் துவங்குவதை இளம்பருவ குறிப்பாக நாற்பது வயதுக்குட்பட்ட தனுசு ராசிக்காரர்கள் தவிர்ப்பது நல்லது.
மேலும் வருடத்தின் பிற்பகுதியில் இளைய பருவத்தினருக்கு வேலை மாற்றங்களும், தொழில் மாற்றங்களும் ஏற்படும் என்பதால் அதற்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைப்பது நடக்கும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து ஒரு நல்ல தொகை கைக்கு கிடைக்கலாம்.
பழைய கடனை புதுக் கடன் வாங்கி அடைக்க முடியும். அல்லது தொழில் விரிவாக்கம், வியாபாரம், புதுத்தொழில் போன்றவற்றிற்காக கடன் வாங்க நேரிடலாம்.
கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.
தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரிடமும் அனாவசியமாக பேசி சிக்கலை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். நிலம், வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும்.
வெளிநாடு சம்பந்தப்பட்ட கம்பெனியில் வேலை செய்பவர்கள், வெளிநாட்டோடு வியாபாரத் தொடர்பு வைத்திருப்பவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் மேன்மை அடைவார்கள். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு விசா கிடைக்கும். மாணவர்கள் கல்வி கற்க வெளிதேசம் செல்வார்கள்.
கவனம்
புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடம் இந்த வருடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குறிப்பாக என்னிடம் திறமை இருக்கிறது, இது போன்ற ஒரு திட்டம் இருக்கிறது, இந்த திட்டத்திற்கு நீங்கள் பணமுதலீடுகள் செய்தால் இதன் மூலம் பலமடங்கு லாபம் அடையலாம் என்று உங்களை உசுப்பேற்றுபவர்களிடம் இருந்து தள்ளி நில்லுங்கள்.
இந்த வருடம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சிக்கல்களைத் தரும் என்பதால் பண விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இப்போது கடன் வாங்கியோ ஹவுசிங் லோன் போட்டோ, சொந்த வீடு அமையும்.
பெருநகரங்களில் உள்ளவர்கள் சொந்த பிளாட் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட நல்ல சொகுசு வாகனம் வாங்குவீர்கள்.
ராகு ஏழாமிடத்திற்கு மாறுவது முன்பிருந்ததைவிட நல்ல அமைப்பு என்பதால் இதுவரை தொழில் துறைகளில் ஏற்ற இறக்கங்களையும், பண கஷ்டங்களையும், பொருளாதார சிக்கல்களையும் சந்தித்து கொண்டிருந்தவர்கள் இனி அது நீங்கப் பெறுவீர்கள்.
குறிப்பாக இதுவரை இளையவர்களின் திருமணங்களுக்குத் தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருத்த அமைப்பு இந்த வருட பிற்பகுதியில் விலகுகிறது.
மேலும் எட்டில் இருந்து பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் உங்களுக்கு விரயங்களைத் தந்து கொண்டிருந்த ராகு விலகுவதால் இனிமேல் நஷ்டங்கள் உங்களை விட்டு விலகும்.
உங்களுக்கு மறைமுக எதிரிகள் தோன்றுவார்கள். நண்பர் ஒருவரே உங்களுக்கு எதிராக திரும்பி விரோதியாகும் வாய்ப்பு இருக்கிறது.
அதற்கு உங்களுடைய முன்யோசனை இல்லாத அவரசக்குடுக்கைத்தனமான செய்கையோ அல்லது கவனமின்றி சொல்லப்படும் ஒரு வார்த்தையோ காரணமாக இருக்கும்.
வயதானவர்கள் உடல்நலத்தில் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம்.
நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
வேலை மற்றும் தொழில்
[wp_ad_camp_3]
அக்டோபர் மாதத்திற்கு மேல் தொழில் வேலை வியாபாரம் போன்ற அமைப்புக்கள் சுமாரான பலன்களைத்தான் தரும். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம்.
எந்த நேரமும் பரபரப்பாக அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அதற்கு தகுந்த பிரதிபலன் கிடைப்பது கஷ்டமாக இருக்கும்.
டிரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வெளியூருக்கு மாறுதல்கள் கிடைக்கும். இந்த வருடத்தில் தொழில் ரீதியான பயணங்கள் அடிக்கடி இருக்கும்.
வெளி மாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு.
உங்களில் நடுத்தர வயதினர் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைப்பது நடக்கும்.
நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கும்.
ஆனாலும் அதில் கூடவே பிரச்சனைகளும் சேர்ந்து தான் வரும் என்பதால், மிகவும் எச்சரிக்கை தேவை. சில சமயம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போக வாய்ப்புகள் மிக மிக அதிகம்
பெண்களுக்கு இந்த வருடம் மிகப்பெரிய மேன்மைகளை அளிக்கும் என்பது உறுதி. வேலை செய்யும் இடங்களில் இதுவரை இருந்து வந்த மனக் கசப்புகள் அனைத்தும் நல்லபடியாகத் தீர்ந்து உங்களுடைய அதிகாரங்களும் மேலாண்மையும் நிலைநாட்டப் படும்.
இதுவரையில் வீட்டிலும், அலுவலகத்திலும் இருந்து வந்த அனைத்து பிரச்னைகளும் நல்லபடியாக, சாதகமாக முடிவுக்கு வந்து நிம்மதி அடைவீர்கள்.
விகாரி வருடம் தனுசின் வேதனைக்கு முழுமையாக முடிவு கட்டும் வருடமாக இருக்கும். கடும் இழப்பு, நெருங்கியவரின் பிரிவு, துயரம், கடன், ஆரோக்கிய குறைவு, மன அழுத்தம், வேலையில், தொழிலில் சிக்கல், வழக்கு போன்ற எல்லாவிதமான கெடுபலன்களையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடத்துடன் அனைத்தும் ஒரு முடிவிற்கு வரும்.
ஆக மொத்தத்தில் இந்த வருடம் உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கான அடித்தளங்களை சிறிது கலவரத்துடன் அமைத்துத் தருவதாக அமையும் என்பதால் இனிமேல் தனுசு ராசியினருக்கு எந்தக் குறையும் வராது என்பது உறுதி.
ஆனாலும் நவம்பர் மாதத்திற்கு பின் ஜென்ம குருவாக ராசிநாதனே வருவதால், உங்களின் முன்னோர்கள் செய்த குற்றத்திற்காகவும், நீங்கள் உங்களையும் அறியாமல் மற்றும் அறிந்து உங்களின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருந்தால் நிச்சயம் அதற்கு உண்டான அவமானத்தை தராமல் செல்லமாட்டார்.
அதிசார குருவாக சில காலம் இருக்கும்போதே அதற்கான முகாந்திரங்களை குருபகவான் உங்களுக்கு முன்னோட்டம் காட்டிவிடுவார்.
ஆகையால் உங்கள் சுய ஜாதகத்தில் அதிக வலிமை பெற்றுள்ள கிரகம் எது என கண்டறிந்து அதற்கான இறைவழிபாடு அல்லது இரத்தின கல் அணிவதன் மூலம், இந்த விகாரி வருடத்தின் பலன்களை உங்களின் தலைக்கு வரும் ஆபத்து தலைப்பாகையோடு போகும்படியாக மாற்றி கொள்ள முடியும்.
தனுசு ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் உங்களில் யாருக்கு நடக்கும்? யாருக்கு நடக்காது?
நன்மைகள் எவ்வளவு? தீமைகள் எவ்வளவு?
மேலே சொன்ன பலன்கள் யாவும், தனுசு ராசியில் பிறந்த அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே.
இதற்கு மூலகாரணமாக அவரவர்களின் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி பொறுத்தே பலன்கள் நடக்கும் என்பது மட்டுமல்ல. மற்றொரு கூடுதல் காரணமாக பின்வரும் லிங்க்-ல் சொல்லப்ட்டுள்ள விதிகளை பொருத்தி பாருங்கள்.
அவை பொருந்தும் விதம் பொருத்து உங்களுக்கு சொல்லப்பட்ட பலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ளுங்கள். அவற்றை அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி அதன் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது.
நன்மை தரும் கிரகங்களின் தசாபுத்தியோடு பொருந்திவந்தால் பலன்கள் உங்களுக்கு தித்திப்பை தரும். தீமை தரும் கிரகங்களின் தசாபுத்தியோடு பொருந்திவந்தால் பலன்கள் உங்களுக்கு கசப்பை தரும்.
நன்மைகளின் அளவை அதிகரிப்பதற்கும், தீமைகளின் அளவை குறைக்கவும் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறைகளை அறிந்து கொள்ளவும் பின்வரும் வீடியோவை கிளிக் செய்யவும்.
தனுசு ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் தனுசு 2019-2020
[wp_ad_camp_3]
மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.
https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM
மேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)
ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,
(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)
எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா
M.M.CHANDRA SEGARAN,
(M.M.சந்திர சேகரன்)
ஆலோசனை கட்டணம் குறித்த விபரமறிய உங்களின் ஜாதகத்தை
70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்
*********************************
எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்
குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு
உயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
*********************************