Contents
தங்க நகை கடன்
தங்க நகை கடன் வாங்க குறைந்த வட்டியில் எந்தெந்த வங்கிகள் தருகின்றன? வங்கிகளில் தங்க நகை கடனுக்கான வட்டி விகிதங்கள்
பொதுவாக பெண்கள் அனைவரும் விரும்பி வாங்கும் நாளுக்கு நாள் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக் கொண்டுதான் இருக்கிறது. தற்போது பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் இதை விரும்பி வாங்கும் அளவிற்கு தங்கம் இடம்பெற்றிருக்கிறது.
ஏனென்றால் பெண்கள் அணிவதற்கும் ஆண்கள் முதலீடு செய்வதற்காகவும் தங்கத்தை அதிக அளவில் வாங்கி குவிக்கின்றனர்.
இன்றைய தங்கத்தின் விலை என்ற வார்த்தை கோடிக்கணக்கில் உலகம் முழுவதும் ஆன்லைனில் தேடப்படும் ஒன்றாக இருக்கிறது.
இந்தியாவில் தங்க நகை கடன் அனைத்து வங்கிகளிலும் தரப்பட்டு வருகிறது.
தங்க நகை கடன் குறைந்த வட்டி
வங்கிகள் மட்டுமல்லாமல் பிற தனியார் நிதி நிறுவனங்களும் தங்கத்தை அடகு கடை வாங்கி வட்டிக்கு பணம் கொடுக்கின்றனர். தற்போது தங்கத்தின் மதிப்பிற்கு 90 சதவிகிதம் வரை கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தது.
இதை ஒவ்வொரு தனியார் நிறுவனங்களும் அவர்களின் விதிமுறைகளுக்கு ஏற்ப தொகையும் அதற்கான வட்டி விகிதமும் அமைத்துக் கொள்கின்றன.
நமக்குத் தெரிந்து எந்தெந்த வங்கிகளில் குறைந்த விகிதத்தில் நகை கடன் வட்டி வழங்கப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
வங்கிகளின் நகை கடன் வட்டி விகிதங்கள்
- இந்தியன் வங்கி – 8.50%
- எஸ்பிஐ வங்கி – 7.50%
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9.25%
- பஞ்சாப் நேஷனல் வங்கி – 8.75%
- பஞ்சாப் & சிந்து வங்கி – 7%
- கனரா வங்கி – 7.65%
- யூனியன் வங்கி – 8.85%
- எச்டிஎஃப்சி வங்கி – 9.50%
- பெடரல் வங்கி – 8.50%
- பேங்க் ஆப் பரோடா வங்கி – 9.60%
- சென்ட்ரல் வங்கி – 9.05%
- கர்நாடகா வங்கி 8.35%
- ஆக்சிஸ் வங்கி – 13%
- ஐசிஐசிஐ வங்கி – 10%
- லக்ஷ்மி விலாஸ் வங்கி – 8.80%
- கரூர் வைசியா வங்கி – 10.10%
- சிட்டி யூனியன் வங்கி – 14.25%
- கோடக் மகேந்திரா வங்கி – 10%
- யூகோ வங்கி – 8.50%