டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டம் : அதாவது புதியதாக மாற்றியுள்ள வகுப்பு பாடங்களிலிருந்து முக்கிய வினாக்கள் : தமிழக அரசு நடத்தும் தேர்வுகளில் 6 – ஆம் வகுப்பிலிருந்து 12 – ஆம் வகுப்பு வரை முக்கியமாக கேட்கப்படும் கேள்விகளை இங்கே தொகுத்து தொடர்ந்து பதிவிடுகிறோம். இதை நீங்கள் தரவு செய்தாலே 100% வெற்றி நிச்சயம். எனவே தொடர்ந்து படித்து பயன் பெறுங்கள்.
- சிறப்பு+உடையார் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
– சிறப்புடையார்
- துன்பம் வெல்லும் கல்வி என்ற பாடலின் ஆசிரியர் யார்?
– பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- தூற்றும்படி என்ற சொல்லின் பொருள் யாது?
– இகழும்படி
- எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியவர் யார்?
– பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- எந்த பாடல்களில் ப.கல்யாணசுந்தரம் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றினார்?
– திரையிசை
- திரயிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர் யார்?
– பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
7.ப. கல்யாணசுந்தரனார்___என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்?
– மக்கள் கவிஞர்
- மூத்தோர் என்னும் சொல்லின் பொருள் யாது?
– பெரியோர்
- மேதைகள் என்ற சொல்லின் பொருள் யாது?
– அறிஞர்கள்
- மாணவர் பிறர்_____நடக்கக் கூடாது?
– தூற்றும்படி
- மாற்றார் என்ற சொல்லின் பொருள் யாது?
– மற்றவர்
- வற்றாமல் என்ற சொல்லின் பொருள் யாது?
– அழியாமல்
- நாம்_____சொல்படி நடக்க வேண்டும்?
– மூத்தோர்
- நெறி என்ற சொல்லின் பொருள் யாது?
– வழி
- கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் யாது?
கை+பொருள்
- மானம்+இல்லா என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் யாது?
– மானமில்லா
- காமராசரின் சிறப்புப் பெயர்கள் யாவை?
-பெருந்தலைவர், கறுப்புக் காந்தி, படிக்காத மேதை,ஏழைப்பங்காளர், கர்மவீரர்,தலைவர்களை உருவாக்குபவர்
காமராசர் அவர்களுக்கு நடுவண் அரசு 1976 இல்_____விருது வழங்கியது?
– பாரத ரத்னா
19.கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம்____ ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
– 02.10.2000
- காமராசர் மாணவர்கள் பசியின்றி படிக்க___திட்டத்தை கொண்டு வந்தார்?
-மதிய உணவு
டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டம் முக்கிய வினாக்கள் அடங்கிய தொகுப்பை தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம். எனவே அனைவருக்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.