சோலார் பேனல் மின்சாரம்
வெயில் காலம் வந்தால் அனைவர் வீட்டிலும் மின்சார தேவை அதிகமாக இருக்கும். இப்பொழுது பிரிட்ஜ், தண்ணீர் மோட்டார், வாஷிங் மெசின் போன்ற சாதனங்கள் உள்ள வீட்டிற்கும் இரண்டு மாதங்களுக்கு ஏறக்குறைய 400 யூனிட்டுகளை கடந்து விடுகிறது. கூடவே AC இருக்கும் வீடுகளில் அப்படியே இரண்டு மடங்காகிறது.
அதுவும் நமது தமிழ்நாட்டில் கிட்டத்திட்ட 300 நாட்களுக்கும் மேல் வெயில்தான் கொளுத்துகிறது. வெயில் குறைவாக உள்ள பலநாடுகளில் சோலார் பேனல் மின்சாரத்தை பெற சோலார் பேனல் -களை அமைத்து பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் எளிதாக கிடைக்கும் சூரிய சக்தி மின்சாரத்தை நமது நாட்டினர் கண்டுகொள்வதில்லை. அதற்கு காரணம் சோலார் பேனல் மின்சாரம் பற்றிய போதிய அறிவும் நம்மிடம் முன்பெல்லாம் இல்லாததே.
ஆனால் சமீப காலமாக இந்த சோலார் மின்சாரத்தை பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது. அரசாங்கமும் சோலார் மின்சாரம் யூனிட்டுகளை வீட்டில் அமைப்பதற்கு மானியமும் கொடுக்கிறது.
சோலார் பேனல் மின்சாரம் முறை தோல்வி ஏன்?
சோலார் பற்றிய போதிய அறிவு இல்லாததாலும், தவறுதலான வழிகாட்டுதலினாலும் அனேக மக்கள் சோலார் மின்சார விஷயத்தில் ஏமாந்ததுதான் அதிகம்.
எனவே மக்கள் இன்னும் அதிகம் இந்த சோலார் மின்சாரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். முன்பை விட இப்பொழுது சோலார் மின்சார யூனிட்டுகள் தொழில்நுட்பத்தில் நன்கு வளர்ந்து வருகின்றது.
சோலார் மின்சாரம் என்றதும் வீட்டில் உள்ள AC,பிரிட்ஜ், தண்ணீர் மோட்டார், வாஷிங் மெசின் போன்ற அனைத்தையுமே உபயோகிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதலில் இறங்க கூடாது.
இப்பொழுது அனைவர் வீட்டிலும் Inverter இருக்கிறது. குறைந்தது 120Ah, 150 AH, 180 AH போன்ற அளவுகளில் பேட்டரிகள் பயன் படுத்தி வருகிறோம். இதிலிருந்து குறைந்தது 2 Fan, 8 Lights, Tv போன்ற சாதனங்களை பயன்படுத்தி வருகிறோம்.
இந்த பேட்டரிகள் குறைந்து 4 வருடங்களிலிருந்து 6 வருடங்கள் வரை உழைக்கிறது. பின்னர் எப்படியும் நாம் பேட்டரி மாற்றியேதான் ஆகா வேண்டும்.
அப்படி மாற்றும்போது இந்த சோலார் பேட்டரி வாங்கி கூடவே அதற்கேற்ற சோலார் பேனல்களையும் வாங்கிகொண்டால் 2 மாதத்திற்கு ஒருமுறை நம் வீட்டில் குறைந்தது 300 யூனிட்டுகளை நாம் மிச்சப்படுத்த முடியும்.
Loom Solar System
அந்த வகையில் சோலார் பேனல், சோலார் பேட்டரி, சோலார் கன்ட்ரோலர் போன்ற சாதனங்களை குறைந்த விலையிலும் சிறிய சிறிய யூனிட்டுகளாகவும் விற்பனை செய்து வருகிறார்கள்.
சிறிய யூனிட்டுகள் என்றால் மின்சார வசதி இல்லாத இடங்களில் சிறிய மின்சார உபகரணங்களை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் 40 வாட்ஸ் சோலார் பேனல், 18 AH பேட்டரி, 6 Amps சோலார் கன்ட்ரோலர் போன்றவைகளை ஒன்றாக விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்த மாதிரி சின்னச்சின்ன யூனிட்டுகள் மின்சார வசதி இல்லாத கிராமங்கள் மற்றும் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே தேவைப்படுபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து Loom Slar வெப்சைட்டில் சென்று பாருங்கள்.
[wp_ad_camp_3]
அதேபோல ஒரு வீட்டிற்கு தேவையான Fan, light, Tv, Computer போன்ற மின் சாதனங்கள் பயன்படுத்தக்கூடிய 120Ah,150Ah மற்றும் 180Ah போன்ற சோலார் பேட்டரி மற்றும் சோலார் பேனல், சோலார் கன்ட்ரோலர், இன்வெர்டர் ஆகியவைகள் அடங்கிய யூனிட்டுகளையும் இந்த Loom Solar System வெப்சைட்டில் விற்பனை செய்து வருகிறார்கள்.
அல்லது உங்கள் வீட்டில் Inverter and Battery இருந்தால் சோலார் கன்ட்ரோலர் தேவையான விகிதத்தில் வாங்கி அந்த Inverter க்கு தேவையான மின்சாரத்தை மட்டும் சோலார் பேனல் மூலமாக பெறும்படி அமைத்துக்கொண்டால் நமது வீட்டின் மின்சார கட்டணத்தை பாதியாக குறைக்க முடியும்.