நமக்கு சாதாரணமாக தெரியும் பல விஷயங்களில் நாம் நினைத்து கூட பார்க்க இயலாத நல்ல மருத்துவ பலன்கள் இருக்கின்றன.
அந்த வரிசையில் செம்பருத்தி தாவரமும் ஒன்று. இந்த செம்பருத்தி தாவரம் இலை, பூ என அனைத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. செம்பருத்தியின் இல்லை மற்றும் பூவில் என்னென்ன மருத்துவ பழங்கள் உள்ளன என்று இந்த பதிவில் தோர்ந்து பார்க்கலாம்.
Contents
செம்பருத்தி பூவின் பயன்கள்
- இதன் மலர்களின் சாயம் காலணிகளுக்கு மெருகூட்ட பயன்படுகிறது.
- பூவினை அரைத்து தடவி குளித்து வந்தால் பேண் தொல்லைகளை நீக்கச் செய்யும்.
- பூக்களை கொதிக்க வைத்து அந்த நீரினை குடித்து வந்தால் சிறுநீரக எரிச்சலிலிருந்து விடுபடலாம்.
- பூவினை காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால் இதய சம்பந்தபட்ட பிரச்சினைகள் மற்றும் பலவீனம் நீங்கும்.
- பூவினை தூள் செய்து அதனுடன் மருதம் பட்டை தூளை கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகைப் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். மேலும், உடலில் இரும்புச்சத்தை அதிகபடுத்தும்.
- பெண்கள் தினசரி சாப்பிட்டு வந்தால் வெள்ளைப் படுவதிலிருந்து விடுபடலாம்.
- மூட்டு வலி மற்றும் இடுப்பு வலி பிரச்சினைகளை குணப்படுத்தும்.
- குழந்தைகளுக்கு பூவைக் கொடுத்து வந்தால் ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
- கண்களுக்கு நல்ல குளிர்ச்சியும், கண் கோளாறுகளையும் சீராக்கி நல்ல ஒளியைக் கொடுக்கும்.
- மூளைக்கு தேவையான பலத்தைக் கொடுக்கக் கூடியது.
- பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் சோர்வுகளிலிருந்து விடுபடலாம்.
- உடலில் அதிகமாகக் கொழுப்புகள் உருவாவதைத் தவிர்க்கும் மற்றும் இரத்தத்தில் உள்ள கொழுப்புகளைக் கரைக்கக் கூடியது.கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறுகளையும் நீக்கக் கூடியது.
- பூவைப் பொடி செய்து தினமும் நீரில் கலந்து குடித்து வந்தால் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
- குழந்தை இல்லாதவர்கள் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- முகத்தை அழகாகவும்,பளபளப்பாகவும் ஆக்கச் செய்யும்.
செம்பருத்தி இலையின் பயன்கள்
- செம்பருத்தி இலைகளை தலையில் தடவி குளித்து வந்தால் முடியைப் பளபளப்பாகவும்,மென்மையாகவும் ஆக்கச் செய்யும்.
- தசைகள் சமந்தபட்ட பிரச்சனைகளைக் குணப்படுத்தும் மற்றும் தசைகளை மிருதுவாகவும் வைக்கச் செய்யும்.