Contents
சுண்ட வத்தல் குழம்பு
தேவையான பொருட்கள்:
வெந்தயம்-1/4 ஸ்பூன்
மிளகு-1/4 ஸ்பூன்
சீரகம்-1/4 ஸ்பூன்
சுண்ட வத்தல் – தேவையான அளவு
நல்லெண்ணெய்
கடுகு-1/4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்-4
புளி-1 எலுமிச்சை அளவு
பெருங்காயம்- சிறிதளவு
சின்ன வெங்காயம்-15
பூண்டு-தேவையான அளவு
தக்காளி-1
மஞ்சத்தூள்-1/4 ஸ்பூன்
மிளகாய் தூள்-1/4 ஸ்பூன்
சாம்பார் பொடி-1 ஸ்பூன்
கல் உப்பு- தேவையான அளவு
வெல்லம்- சிறிதளவு
கருவேப்பிலை – தேவையான அளவு
முதலில் எண்ணெய் ஊற்றாமல் வெந்தயம், மிளகு, சீரகம்,கறிவேப்பிலை சேர்த்து நன்கு வாசனை வரும் அளவிற்கு வறுத்து எடுக்கவும். பின், நன்கு அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு, சுண்ட வத்தலை எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
செய்முறை:
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாயைப் போட்டு கடுகு சேர்த்து பொரிய விடவும். பின்பு , பெருங்காய தூள் சேர்த்து பொரிய விடவும். பின்பு, வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு, மஞ்சத் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி, கல் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு பச்சை வாடை நீங்கும் அளவிற்கு வதக்கவும். பின்பு, புளி தண்ணீரை சேர்த்து அதனுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து கொள்ளவும். பின்பு, பொரித்து வைத்த சுண்ட வத்தல் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின், அரைத்து வைத்த பொடியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு, கருவேப்பிலையை தூவி இறக்கவும்.
சுவையான வத்தல் குழம்பு ரெடி..