டிஎன்பிஎஸ்சி குரூப் எக்ஸாம்
tnpsc தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் எளிதான ஒரு காரியம். அதற்குத் தேவை விடாமுயற்சியும் சற்று கடின உழைப்பும்.
இரண்டும் இருந்தால் உங்களால் கண்டிப்பாக tnpsc குரூப் தேர்வுகள், விஏஓ தேர்வுகள், tet தேர்வுகள் மற்றும் தமிழ்நாடு அரசு நடத்தும் தேர்வுகளிலும் உங்களால் வெற்றி பெற முடியும்.
1.ஆசாரக்கோவை என்ற பாடலின் ஆசிரியர் யார்?
– பெருவாயின் முள்ளியார்
2. நன்றியறிதலின் பொருள் யாது?
– பிறர் செய்த உதவியை மறவாமை
3. ஒப்புரவு என்ற சொல்லின் பொருள் யாது?
– பிறருக்கு உதவி செய்தல்
4. நட்டல் என்ற சொல்லின் பொருள் யாது?
– நட்புக் கொள்ளுதல்
5. பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் யாது?
– கயத்தூர்
6.ஆசாரக்கோவை என்பதின் பொருள் யாது?
– நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
7.ஆசாரக்கோவை எந்த நூல்களில் ஒன்று?
– பதினெண் கீழ்க்கணக்கு
8.ஆசாரக்கோவை என்ற நூல் எத்தனை வென்பாக்களைக் கொண்டது?
– நூறு
9. பிறரிடம் நான்____பேசுவேன்?
– இன்சொல்
10. அறிவு+உடைமை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் யாது?
– அறிவுடைமை
11. இவை+எட்டும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் யாது?
– இவையெட்டும்
12. நன்றியறிதல் என்பதை பிரித்து எழுதக் கிடைப்பது?
– நன்றி+அறிதல்
13. பொறையுடைமை என்ற சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது?
– பொறை+உடைமை
14. நந்தவனம் என்ற சொல்லின் பொருள் யாது?
– பூஞ்சோலை
15. பண் என்ற சொல்லின் பொருள் யாது?
– இசை
16. பார் என்ற சொல்லின் பொருள் யாது?
– உலகம்
17. இழைத்து என்ற சொல்லின் பொருள் யாது?
– செய்து
18. முத்தேன் என்ற சொல்லின் தொகைச் சொல் யாது?
– கொம்புத்தேன்,பொந்துத்தேன், கொசுத்தேன்
19. முக்கணி என்ற சொல்லின் தொகை சொல் யாது?
– மா, பலா, வாழை
20. முத்தமிழ் என்ற சொல்லின் தொகை பொருள் யாது?
– இயல், இசை, நாடகம்
21. தால் என்பதன் பொருள் யாது?
– நாக்கு
22. தாலாட்டு_____இலக்கியங்களில் ஒன்று?
– வாய்மொழி
23. நாவை அசைத்துப் பாடுவதால்___என்று பெயர் பெற்றது?
– தாலாட்டு
24. தாலாட்டு என்பதை பிரித்து எழுதக் கிடைப்பது?
– தால்+ஆட்டு
25. இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு. அது எதற்காக அமைந்தது?
– குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும்
26.பாட்டிசைத்து என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
– பாட்டு+இசைத்து
27.கண்ணுறங்கு என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
– கண்+உறங்கு
28. வாழை+இலை என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
– வாழையிலை
29. கை+அமர்த்தி என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
– கையமர்த்தி
30. உதித்த என்ற சொல்லின் எதிர்சொல் யாது?
– மறைந்த
31. இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவுவளிக்கும் நாடு எது?
– சோழநாடு
32. தமிழரின் மரபு யாது?
– இயற்கையை கடவுளாக வணங்குதல்
33. கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்புச் செய்யும் விழா எது?
– பொங்கல்
34. உழவர்கள்_____விதைப்பர்?
– ஆடிதிங்களில்
நாங்கள் இனி வரும் பதிவுகளில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் மற்றும்,vao தேர்வுகள், டெட் தேர்வுகள் மற்றும் அரசு நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் அடிக்கடி கேட்கப்படும் முக்கிய வினா விடைகள், மாதிரி வினா விடைகள், repeated questions, கணக்கு வினாக்கள், புதிய பாடத்திட்டம், ஆறாம் வகுப்பில் இருந்து வகுப்பு வரையிலான தமிழ் பாடங்களில் இருந்தும் மற்ற பாடங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட வினா விடைகள் தொகுத்து வழங்க உள்ளோம். எனவே நீங்கள் இதை தரவு செய்தாலே tnpsc வெற்றி பெறுவது உறுதி. வாழ்த்துக்கள்.
[…] டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1,குரூப்-2, குரூப்-4, குரூப்-8 ஆகிய தேர்வுகள் மற்றும் விஏஓ, இந்தியன் போஸ்ட், ஏர் போர்ஸ், ஆர் ஆர் பி, வங்கித் தேர்வுகள் போன்றவற்றிற்கான பாடத்திட்டம் study material மற்றும் மாதிரி தேர்வு இவை அனைத்திற்குமான ஒரு இணையதளத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. […]