குப்பைமேனி
வேறு பெயர்கள் :
- குப்பைமேனி
- அரிமஞ்சரி
- பூனை வணங்கி
- குப்பி
தோல் நோய்கள் நீங்க :
குப்பைமேனி இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்து உடல் முழுவதும் பூசி வந்தால் உடலில் இருக்கும் தோல் தொடர்பான வியாதிகள் நீங்கும். மேலும் நச்சுக்கடி, தீப்புண் இவற்றிலும் இதை தடவினால் விரைவில் குணமடையும்.
எந்த புண் காயத்தின் மீது குப்பை மேனி இலை சாற்றினை தடவினாலும் புண்கள் விரைவில் ஆரும்.
குப்பைமேனி இலை சாறானது பாம்பு கடி விஷத்தையும் முறிக்க வல்லது.
சளி,இருமலுக்கு மருந்தாகும் குப்பை மேனி;
குப்பைமேனி செடியின் இலையை ஒரு கைபிடி அளவு எடுத்து அதை நன்கு தட்டி சாறு எடுத்து அதை ஒரு டம்ளர் நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவர சளி மற்றும் இருமல் குணமாகும்.
வயிற்றுப் பூச்சியை நீக்கும்:
குப்பைமேனி வேரை நீரில் கொதிக்க வைத்து அருந்தி வர வயிற்றுப் பூச்சி நீங்கும். மேலும் மந்தம்,அஜீரணம், கண் கோளாறு நீங்கும்.
முகம் அழகு பெற :
குப்பை மேனி இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி வர முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்கி முகம் அழகு பெரும்.
அசுத்த இரத்தத்தை சுத்தம் செய்யும் குப்பைமேனி:
குப்பை மேனியை வேருடன் பிடுங்கி நன்கு அலசி அத்துடன் சிறிது மிளகு
அல்லது திரிகடுகப் பொடி சேர்த்து நன்கு அரைத்து ஒரு நெல்லிக்காய்
அளவு காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதை வாரம் ஒரு முறை 3 வாரம் தொடர்ந்து செய்துவந்தால் உடலில் உள்ள அசுத்த நீர், மற்றும் விஷநீர் வெளியேறும்.
குப்பை மேனி மருந்தை எடுத்துக்கொள்ளும் காலத்தில் தவிர்க்க வேண்டியவைகள்:
இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் காலத்தில் அசைவம் சாப்பிட கூடாது. மது அருந்துதல்,புகை பிடித்தல் கூடாது.
இந்த மருந்தை எடுத்துக் கொள்வதனால் ஏற்படும் பயன்கள்:
- நாட்பட்ட புண்கள் ஆறும்
- உடல் தளர்ச்சி நீங்கும்
- புத்துணர்வு உண்டாகும்
- முகம் பொலிவு பெரும்
- தோல் நோய்கள் நீங்கும்