காட்டு யானம் அரிசி ப்ரைடு ரைஸ்

7521
காட்டு யானம் அரிசி , காட்டு யானம் அரிசியின் பயன்கள்

காட்டு யானம் அரிசி

நம் நாட்டில் எண்ணற்ற அரிசி வகைகள் பயிரிடப்படுகிறது. அவை அனைத்தும் ஒவ்வொரு விதமான சத்துக்களை கொண்டுள்ளது. நம் தளத்தில் ஏற்கனவே இந்த வரிசையில் கவுணி அரிசி பற்றி பார்த்துள்ளோம். அதேபோல பல பயன்களை கொண்ட காட்டு யானம் அரிசி பற்றி பார்க்கலாம்.

காட்டு யானம் அரிசி பயன்கள்

  • சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
  • புற்று நோய் காரணிகளை எதிர்க்கும்
  • இதில் உள்ள குளுக்கோஸ் சிறிது சிறிதாக இரத்தத்தில் கலப்பதால் பயனகளின்போது இந்த காட்டுயானம் அரிசியால் செய்யப்பட உணவை உண்டால் களைப்பின்றி இருக்கலாம்
  • அடிக்கடி பசி எடுப்பவர்கள் இந்த அரிசியை சேர்த்துக்கொள்ளலாம்
  • தாதுவை பலப்படுத்தி ஆண்மையை அதிகரிக்கும்

இந்த மாதிரி சத்துள்ள உணவுகளை நாம் பெரும்பாலும் விரும்புவதில்லை. ஏனென்றால் அதிலுள்ள பழைய சுவை நமக்கு பிடிப்பதில்லை.

காட்டு யானம் அரிசி , காட்டு யானம் அரிசியின் பயன்கள்

எனவே இந்த மாதிரி சத்து நிறைந்த பொருட்களில் புதிது புதிதாக சமைத்து கொடுத்தால் அனைவருக்கும் பிடிக்கும். எனவேதான் இந்த பதிவில் காட்டு யானம் அரிசியில் எப்படி ப்ரைடு ரைஸ் எப்படி செய்யலாம் என்று பார்க்கப்போகிறோம்.

தேவையான பொருட்கள்:

காட்டு யானம் அரிசி-1 கப்

பெரிய வெங்காயம்-1 கப்

முட்டைகோஸ்-1/2 கப்

கேரட்-1

பச்ச மிளகாய்-2

குடை மிளகாய்-தேவையான அளவு

சோம்பு-1/4 ஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது- சிறிதளவு

லெமன்– சிறிதளவு

உப்பு- தேவையான அளவு

சீரகத்தூள்-1/4 ஸ்பூன்

மிளகுத்தூள்-1/4 ஸ்பூன்

சோயா சாஸ்-1 ஸ்பூன்

கொத்தமல்லி- சிறிதளவு

காட்டு யானம் அரிசியை நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை:

காட்டு யானம் அரிசி , காட்டு யானம் அரிசியின் பயன்கள்

ஒரு காடயில் எண்ணெயை ஊற்றி அதில் சோம்பு சேர்த்து பொரியவிடவெண்டும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பிறகு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.பின்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். பின் முட்டைகோஸ், கேரட் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு, பச்ச மிளகாய், குடை மிளகாய் போடவும்.பிறகு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு, லெமன் சிறிதளவும், சோயா சாஸ்சும் தேவையான அளவு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, காட்டு யாணம் அரிசி சேர்த்து நன்கு கிளறவும். சிறிது நேரம் கழித்து இறக்கியவுடன் கொத்தமல்லியை தூவி பரிமாறவும்..

இந்த பதிவு அனைவருக்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.