Contents
*காடை வறுவல்*
ஒரு சில உணவுகள் மிகவும் சுவையாக இருந்தாலும் அதிகம் பேர் அதை சமைக்க தெரியாமல் ருசிக்க தவறுகிறார்கள். அந்த வகையில் காடை இறைச்சியில் செய்யப்படும் காடை வறுவல் அதிக மக்களுக்கு சுவையாக சமைக்க தெரியாத ஒரு உணவாக உள்ளது.
எனவே இந்த பதிவு மிகவும் சுவையாக செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
காடை-2
மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
சிக்கன்-65 மசாலா-1 ஸ்பூன்
மிளகாய் தூள்-1 ஸ்பூன்
கான் ப்ளவர் மாவு-1 ஸ்பூன்
தக்காளி-1
இஞ்சி, பூண்டு விழுது- தேவைக்கேற்ப
உப்பு- தேவையான அளவு
முதலில் காடையை சிறிது சிறிதாக நறுக்கி அலசி கொள்ளவும். பின்பு, மஞ்சள் தூள், சிக்கன் 65 மசாலா, மிளகாய் தூள், கான் ப்ளவர் மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பின்பு, தக்காளியை அதில் பிசைந்து கொள்ளவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பிசைந்து 1/4 நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காடையை அதில் போட்டு வருக்க ஆரம்பிக்கவும். காடை வறுக்கும்போது அடுப்பை சற்று குறைத்து வைத்துக்கொள்ளவும்.
பின், மிளகு தூள் தூவி, பாதி எலுமிச்சை சாற்றை பிழிந்து கொத்த மல்லியை தூவி பரிமாறவும். சுவை மிக்க காடை-65 ரெடி