இயற்கை நமக்கு அளித்த மருத்துவ அருங்கொடையில் கற்றாழை மிக மிக முக்கிய இடத்தில் உள்ளது. மருத்துவத்தையும் அழகியலையும் வாரி வழங்குவதில் முதல் இடத்தில் உள்ள தாவரம் கற்றாழை. நாம் நமது வீட்டின் அருகிலேயே கிடைக்கும் இந்த கற்றாழையை கண்டுகொள்ள மாட்டோம். ஆனால் கற்றாழையை ஆங்கிலத்தில் Aloe Vera பேசியல் கிரீம், ஜெல், ஷாம்பூ போன்றவற்றை அதிக விலையில் நம்மிடம் விற்றால் உடனே வாங்கி பந்தாவாக பயன்படுத்துவோம். இன்றைய காலகட்டத்தில் தினமும் காலையில் நடைபயிற்சி செய்யும் வழியில் எத்தனை கற்றாழை ஜூஸ் கடைகள் முளைத்திருக்கிறது என்று பார்த்திருப்பீர்கள். அந்த அளவுக்கு இப்பொழுது கற்றாழை பற்றிய விழிப்புணர்வு வந்து விட்டது.
கற்றாழை அதிக அளவு மருத்துவ குணம் நிறைந்தது. இந்த தாவரத்தின் இலை, வேர், தண்டு என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. இத்தாவரத்தை குமரி, தாழை, சோற்று கற்றாழை எனவும் அழைப்பர். இந்த பதிவில் கற்றாழையின் மருத்துவ பயன்களையும், அழகு பயன்களையும் பற்றி பார்க்கலாம்.
மேலும் கற்றாழை தாவரமானது அதிக அளவில் ஆக்சிஜனை வெளியிடகூடியது. மேலும் இந்த தாவரத்தை வளர்ப்பதற்கு நீங்கள் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. தானாகவே வளரும் தன்மை கொடாது.
எனவே ஒரு தொட்டியில் மண்ணை கொட்டி அதில் நட்டு வீட்டிற்கு முன்போ அல்லது பின்புறமோ வைத்து வளர்த்து வந்தால் நல்ல ஆக்சிஜன் சூழல், மருத்துவ மற்றும் அழகியல் பயன்பாடு உங்களை அருகிலேயே.
கற்றாழை ஜூஸ்
- இதை அடிக்கடி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்
- இதன் முக்கிய மருத்துவ பயனாக உடல் சூட்டை போக்குவதற்கு ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவங்களில் பயன்படுகிறது
- பெண்களுக்கு வெள்ளைபடுதல் பிரச்சினை நீங்கும்
- செரிமான பிரச்சினைகள் நீங்கி அதனால் உண்டாகும் அசிடிட்டி மற்றும் வயிற்று வலி நோய்களும் தீரும். வயிற்றில் உள்ள புண்களும் ஆறும்
- உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் இதன் ஜூஸை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் நல்ல பலனை காணலாம்
- மேலும் உடலில் உள்ள இறந்த செல்களை நீங்கி புது செல்கள் உற்பத்தியாக துணைபுரிகிறது
- உடலில் இரத்த அழுத்ததை சீராக வைப்பதற்கு உதவுகிறது
- புற்று நோய் உள்ளவர்கள் கற்றாழை எடுத்துக்கொண்டால் புற்றுநோய் கட்டிகள் வளர்வதை தடுக்கும்
- இருமல்மற்றும் சளி நீங்கவும், குடல் புண் நீக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது
அழகிற்கான கற்றாழையின் பங்கு
- கற்றாழையின் தோலை நீக்கி விட்டு அதன் ஜெல் பகுதியை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி புதிய செல்கள் தோன்றும். மேலும் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதால் முகத்தின் செல்கள் அனைத்தும் நன்கு சுவாசிக்க முடியும். இதனால் முகம் புத்துணர்வுடன் காணப்படும்
- கற்றாழை ஜெல்லை தடவி வர உடலில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்
- குளிப்பதற்கு அரைமணி நேரத்திற்குமுன் கற்றாழை ஜெல்லை அடிக்கடி தலையில் தேய்த்து பின் குளித்து வந்தால் முடி கொட்டுவது குறைந்து நன்கு வளர தொடங்கும். மேலும் கூந்தல் பளபளப்புடனும் இருக்கும்
இவற்றையெல்லாம் முயற்சி செய்து பார்க்க இன்றே உங்கள் வீட்டில் தொட்டி வாங்கி, அதில் கற்றாழையை நட்டு வளர்த்துவாருங்கள். மருத்துவத்திர்காகவும் அழகுக்காகவும் செலவு செய்யும் பணத்தை மிச்சபடுத்துங்கள்.
[…] ஆக்சிஜனை வெளியிடும் தாவரங்களாகும். கற்றாழை, புங்கை, வேம்பு, அரச மரம், மூங்கில் இவை […]
[…] மற்றும் கற்றாழையை கலந்து சருமத்தில் தேய்த்து வந்தால் […]