கருணை கிழங்கு புளிக்கறி

0
3383
கருணைக்கிழங்கு புளிக்கறி, கருணை கிழங்கு புளிக்கறி, கருணை கிழங்கு, கருணைக்கிழங்கு, கருணை கிழங்கு புளிக்கறி

கருணை கிழங்கு புளிக்கறி எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம். கருணை கிழங்கில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. அனால் அதிகம் மக்கள் இதன் சுவை மற்றும் அரிப்பு பிடிக்காமல் இதை சாப்பிட மாட்டார்கள். ஆனால் இந்த புளிக்கறி செய்து கொடுத்தால் இதன் சுவை அனைவருக்கும் பிடிக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

Contents

தேவையான பொருட்கள்:

கருணை கிழங்கு -1/4

நல்லெண்ணெய் – தேவையான அளவு

சின்ன வெங்காயம்-சிறிதளவு

பச்ச மிளகாய்-2

தக்காளி-1

புளி- சிறிதளவு

கடுகு, உளுந்து-1 ஸ்பூன்

உப்பு -தேவையான அளவு

தண்ணீர்- அரை டம்ளர்

செய்முறை:

கருணை கிழங்கை வேக வைத்து எடுத்து கொள்ளவும். பின் உரித்து பிசைந்து வைத்து கொள்ளவும். புளியை சிறிது நீரில் ஊற வைத்துகொள்ளவும். ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து போட்டு வெடிக்க விட்டு, பச்ச மிளகாய், வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். பின், தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, கருணை கிழங்கை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும். பின்பு, புளி ஊறவைத்த நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

இப்பொழுது நல்ல மணமான, சுவையான கருணை கிழங்கு புளிக்கறி ரெடி…

இந்த பதிவு அனைவருக்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள்.நன்றி.