கடகம் லக்னம் உடையவர்களின் வருமானம் – எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா – MM சந்திரசேகரனின் ஜோதிட கட்டுரை 4

8838
கடகம் லக்னம், கடக லக்னமும் வருமானமும், கடக லக்னம் உடையவர்களின் வருமான தடை நீங்க, கடக லக்னம் உடையவர்களின் வருமானம் அதிகரிக்க, Kadaka laknam, cancer lagna,

கடகம் லக்னமும் வருமானமும்

கடகம் லக்னம் உடையவர்களுக்கு வருமானத்தை

தர கூடிய / உயர்த்த கூடிய கிரக அமைப்பு,

அதற்கு இருக்கும் தடைகள்,

அத்தடையை நீக்கும் வழிமுறைகள்

கடகம் லக்னம், கடக லக்னமும் வருமானமும், கடக லக்னம் உடையவர்களின் வருமான தடை நீங்க, கடக லக்னம் உடையவர்களின் வருமானம் அதிகரிக்க, Kadaka laknam, cancer lagna,

 

                             கடகம் லக்னம் அன்பர்களே ஒவ்வொரு லக்னத்திற்கும் சில கிரக தொடர்புகள் நன்மையையும், தீமையையும் செய்யும். குறிப்பாக ஒரே கிரகம் எல்லா லக்னத்திற்கும் வருமானம் தர கடமைபடுவதில்லை. குறிப்பிட்ட லக்னத்திற்கு தீமை செய்ய கடமைப்பட்ட கிரகங்கள் கூட சமயத்தில் அவர்களுக்கு வருமானத்தை தர கடமைப்பட்டுள்ளது. தீமை செய்யும் கிரகம் எப்படி நன்மை செய்யும் என்ற கேள்வி எழலாம். அசுப கிரகங்கள் முழுவதுமாக தீமை செய்துவிடாது. அதில் சில நன்மையையும் கலந்தே இருக்கும். ஆகையால் சொல்லப்படும், அமைப்பும், இறைவழிபாடும், குறிப்பிட்ட லக்னத்திற்கு அசுப கிரகமாக வந்தாலும், அதையும் தாண்டி அவர்களுக்கு வருமானம் தர அக்கிரகம் முன்வரும் என்பதை மனதில் கொள்க. அதே சமயம் சொல்லப்படும், அமைப்பும், இறைவழிபாடும், குறிப்பிட்ட லக்னத்திற்கு சுப கிரகமாக வந்தால், அதனால உண்டாகும் உயர்வும் அதிகமாக இருக்கும் என்பதையும் மனதில் கொள்க,

                              வாருங்கள் இன்று கடகம் லக்னத்திற்கு வருமானத்தை உயர்த்தும் கிரக அமைப்பு மற்றும் அதற்கு இருக்கும் தடையும், அத்தடையை நீக்கும் முறை பற்றியும் பார்ப்போம்.

கடகம் லக்னம் உடையவர்களுக்கு வருமானத்தை உயர்த்தும் கிரக அமைப்பு

  1. சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை,
  2. சூரியன் மற்றும் சுக்கிரனின் பார்வை
  3. ரிஷபத்தில் சூரியனோ சுக்கிரனோ இருப்பது (தனித்தோ, சேர்ந்தோ)
  4. ரிஷபத்தை சூரியனோ சுக்கிரனோ பார்ப்பது (தனித்தோ, சேர்ந்தோ)
  5. சிம்மத்தில் சூரியனோ சுக்கிரனோ இருப்பது (தனித்தோ, சேர்ந்தோ)
  6. சிம்மத்தை சூரியனோ சுக்கிரனோ பார்ப்பது (தனித்தோ, சேர்ந்தோ)
  7. சூரியன் நட்சத்திரத்தில் சுக்கிரன் இருப்பது
  8. சுக்கிரன் நட்சத்திரத்தில் சூரியன் இருப்பது.
  9. பிறப்புஜாதகங்களுக்கு மட்டுமல்ல, கோட்சாரத்திலும் பொருந்தும்
  10. பிறப்பு ஜாதக சூரியனுடன் மேற்சொன்ன தொடர்பை கோட்சார சுக்கிரன் பெறுவது
  11. பிறப்புஜாதக சுக்கிரனுடன் மேற்சொன்ன தொடர்பை கோட்சார சூரியன் பெறுவது ஆகும்.

கடகம் லக்னம் உடையவர்களுக்கு வருமான உயர்வில் இருக்கும் முக்கியமான தடை

சுக்கிரன் மற்றும் சூரியனுடன் ராகு / கேது தொடர்பு

                                உங்கள் ஜாதகத்தில் மேலே சொல்லப்பட்ட அமைப்பில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்ட தொடர்புகள் இருந்தாலும், உங்களுக்கு முழுமையான பலன் கிடைப்பதில்லை என்பதன் முதன்மையான காரணம் ராகு மற்றும் கேது. அதாவது மேற்சொன்ன அமைப்பு இருந்தும், போதுமான அளவு வருமானம் இல்லாத நிலையை, அல்லது வருமான பற்றாக்குறையை ஏற்படுத்தும் வலிமை உள்ள அமைப்புகளில் முதன்மையானது ராகு மற்றும் கேது

  1. சூரியனுடன் ராகுவோ கேதுவோ இருப்பது
  2. சுக்கிரனுடன்’ ராகுவோ கேதுவோ இருப்பது
  3. சூரியனுக்கு அடுத்து ராகுவோ கேதுவோ இருப்பது
  4. சுக்கிரனுக்கு அடுத்து ராகுவோ கேதுவோ இருப்பது
  5. ரிஷபத்தில் ராகுவோ கேதுவோ இருப்பது
  6. சிம்மத்தில் ராகுவோ கேதுவோ இருப்பது
  7. பிறப்புஜாதக சூரியனுடன் மேற்சொன்ன தொடர்பை கோட்சார ராகுவோ கோட்சார கேதுவோ பெறுவது
  8. பிறப்பு ஜாதக சுக்கிரனுடன் மேற்சொன்ன தொடர்பை கோட்சார ராகுவோ கோட்சார கேதுவோ பெறுவது
  9. சூரியனுக்கும் ராகுவுக்கும் அல்லது சூரியனுக்கும் கேதுவுக்கும் இடையில் எத்தனை கட்டங்கள் இடைவெளி இருந்தாலும், இடையில் வேறு எந்த கிரகமும் இல்லாமலிருப்பது
  10. சுக்கிரனுக்கும் ராகுவுக்கும் அல்லது சுக்கிரனுக்கும் கேதுவுக்கும் இடையில் எத்தனை கட்டங்கள் இடைவெளி இருந்தாலும், இடையில் வேறு எந்த கிரகமும் இல்லாமலிருப்பது
  11. முன்னர் சொன்ன அனைத்தும் பிறப்பு ஜாதகங்களுக்கு மட்டுமல்ல, கோட்சாரத்திலும் தொடர்புற்றால் பொருந்தும்

குறிப்பு – சொல்லப்பட்ட தடையுடன் (ராகு மற்றும் கேதுவுடன்) மாந்தி எனும்   உப கிரகத்தையும் சேர்த்து கொள்க

வருமான உயர்வு – தாழ்வு தசாபுத்தி ஒத்துழைப்பும்

                    வருமானம் எல்லா காலமும் வருமா என்றால் அது கிடையாது. வருமானத்தை தரும் கிரக அமைப்பில் கிரகங்கள் இருந்தாலும் கூட, அது நிறைவான பலனையோ, குறைவான பலனையோ தருவதன் காரணம், அவரவர் ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தியே

இதற்கு ஒரு உதாரண கதை பார்ப்போம்.

                    இனிப்பு தயாரிப்பு நிறுவனத்தில் நண்பர்கள் இருவருக்கு வேலை கிடைக்கிறது. அங்கு வேலை செய்யும் அனைவருக்கும், குறிப்பிட்ட அளவு இனிப்பை சாப்பிட அனுமதி வழங்கபடுகிறது. இருவரில் ஒருவர் மட்டும், இனிப்பை சாப்பிட மற்றொருவர் இனிப்பு சாப்பிடாமல் இருக்கிறார். காரணம் அவர்க்கு சர்க்கரை வியாதி உள்ளது. இது அவருக்கு சாப்பிட அனுமதி இருந்தும், அதை சாப்பிட முடியாத நிலையை காட்டுகிறது, அதாவது வாய்ப்பு இருந்தும் அதை உபயோகிக்க முடியாத நிலையை சுட்டிகாட்டுகிறது

இந்த கதையை அப்படியே ஜாதகம் மற்றும் தசாபுத்தியுடன் இணைப்போம்.

  1. இனிப்பு தயாரிப்பு நிறுவனத்தில் நண்பர்கள் இருவருக்கு வேலை கிடைப்பதை அவர்களுக்கு பிறப்பு ஜாதகத்தில் இருக்கும் கிரக அமைப்போடு ஒப்பிடுங்கள்.
  2. குறிப்பிட்ட அளவு இனிப்பை சாப்பிட அனுமதி வழங்கபடுவதை கிரக அமைப்பு வருமானத்தை தர தயாராக உள்ள நிலையுடன் ஒப்பிடுங்கள். (பிறந்த உடன் எல்லாரும் சம்பாதிப்பது இல்லை. குறிப்பிட வயதில் தான் சம்பாதிக்கவேண்டும் என்ற நிலை உருவாகிறது – அதாவது சம்பாதிக்க வேண்டிய வயது காலத்தில் அந்த நபர்கள் இருக்கும் நிலை)
  3. இருவரில் ஒருவர் மட்டும், இனிப்பை சாப்பிட மற்றொருவர் இனிப்பு சாப்பிடாமல் இருப்பதை, தசாபுத்தியுடன் ஒப்பிடுங்கள் (அதாவது வருமானம் தரும் கிரக அமைப்புகள் இருந்தும், சம்பாதிக்க வேண்டிய வயது நடந்தும், வருமான பெற முடியாத, கைக்கு எட்டியதை வாய்க்கு எட்டாத நிலையில் வைத்திருப்பது அவரவருக்கு நடக்கும் தசாபுத்தியே..

                       தசாபுத்தி ஒத்துழைக்கும் போது, சிறு வயதிலேயே சம்பாதிக்க தொடங்கிவிடுவர் சிலர். தசாபுத்தி ஒத்துழைக்காத போது, சம்பாதிக்கும் வயது எட்டியும், சம்பாதிக்க வேண்டிய நிலை இருந்தும் சம்பாத்தியம் இல்லாமல், சம்பாத்திய பற்றாகுறையுடன் வாழவைப்பதும் தசாபுத்தியே

தடையை தாண்டி வருமானம் தரும் மற்றும் வருமானம் உயர்த்தும் வழிமுறை

வழிமுறை 1

  1. வருட இறைவழிபாடு
  2. வாழ்நாள் முழுவதும் வருடம் ஒருமுறை நிச்சயம் செய்ய வேண்டும்
  3. தேய்பிறை வெள்ளிக்கிழமையன்று ஒருமுறை மற்றும் வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று ஒருமுறை – கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோயிலுக்கு செல்ல வேண்டும்.
  4. தேய்பிறை ஞாயிற்றுக்கிழமையன்று ஒருமுறை மற்றும் வளர்பிறை ஞாயிற்றுக்கிழமையன்று ஒருமுறை – திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் அல்லது கஞ்சனூர் சுக்கிரன் கோயிலுக்கு செல்ல வேண்டும்.,
  5. சொல்லப்பட்ட கோவிலுக்கு முதல்முறை தேய்பிறையிலும் இரண்டாம்முறை வளர்பிறையிலும் செல்ல வேண்டும் மாறாக முதல்முறை வளர்பிறையிலும் இரண்டாம்முறை தேய்பிறையிலும் சென்று வந்தால் பாதகம் ஒன்றும் இல்லை
  6. சூரிய உதய நேரத்தில் இருந்து குறைந்தபட்சம் 7 மணிநேரம் கோயிலுக்குள் இருக்க்க வேண்டும்.
  7. சொல்லப்பட்ட கோயிலுக்கு சென்று விட்டு, வேறு எந்த கோயிலுக்கும் செல்லாமல் வீடு திரும்ப வேண்டும்.

வழிமுறை 2

  1. வார இறைவழிபாடு
  2. ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து 48 வாரங்கள் வழிபாடு செய்ய வேண்டும். அனைத்து வாரங்களும் செய்தாலும் மேலும் சிறப்பு.
  3. விடுபடாமல் 48 வாரங்கள் செய்ய வேண்டும். மிக முக்கியம்.
  4. வெள்ளிக்கிழமையன்று சூரியபகவானுக்கும், ஞாயிற்றுக்கிழமையன்று சுக்கிரபகவானுக்கும் விளக்கு ஏற்ற வேண்டும்.
  5. விளக்கு – சுத்தமான நல்லெண்ணையில் அல்லது சுத்தமான நெய்யில் மட்டுமே ஏற்ற வேண்டும்.

                     பொதுவாக எல்லோரும் ஞாயிற்றுக்கிழமையன்று சூரியபகவான் வழிபாடும் வெள்ளிக்கிழமையன்று சுக்கிரபகவான் வழிபாடும் செல்வார்கள். ஆனால், இந்த வழிபாடு முறை வித்தியாசமானது. ஒரே நாளில் இரண்டு கிரகங்களையும் இணைக்கும் பாலமாகும்

சொல்லப்பட்ட இரண்டு வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் உங்கள் வசதிக்கேற்ப தேர்வு செய்து செயல்படுத்தினால் போதுமானது. இரண்டையும் செய்ய முடிந்தால் மிக சிறப்பு.

                      ராகு, கேது, மாந்தி, தசாபுத்தி இவற்றால் வருமானம் தடைபட்டாலும், பற்றாக்குறை உண்டானாலும் சொல்லப்பட்ட வழிமுறைகள் உங்களை தரம் உயர்த்தும்.

           அனால் அதற்கு நம்பிக்கையும், ஆத்மார்த்தமான வழிபாடும் மிக முக்கியம்

கடகம் லக்னம் உடையவர்களின் வருமானம் பற்றிய வீடியோ பதிவிற்கு

https://youtu.be/G9VvQC9nI70

                        மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM

                            ம்மிடம் தங்களது ஜாதகம் குறித்த கேள்விகள் மற்றும் தனி ஜாதக சந்தேகங்களுக்கு இலவச பலன் சொல்லுவது கிடையாது முறையான தட்சணை அவசியம்

  1. நேரில் (திருச்சி – செவ்வாய் மற்றும் வெள்ளி மட்டுமே) பார்க்க ஒரு ஜாதகம் ₹500/- (முன் அனுமதி அவசியம்)
  2. நேரில் வர இயலாதவர்கள் ஆன்லைன் (வாட்ஸப்) மூலம் பலன் அறிய – ஒரு ஜாதகம் ₹Rs.400/- (வாட்சப்பில் உங்கள் ஜாதக விபரங்களை அனுப்பிய பின்பு, கட்டணம் செலுத்தும் முறை மற்றும் பலன்கள் அனுப்பிவைக்கும் விபரங்கள் உங்கள் எண்ணிற்கு அனுப்பப்படும்)
  3. ஜாதகம் பார்க்கும் நபருக்கு சந்திராஷ்டமம் இருக்கும் நாளில் எம்மை தொடர்புகொள்ள வேண்டாமென அன்புடன் கேட்டுகொள்ளபடுகிறது
  4. கட்டணங்கள் எதிர்வரும் காலத்தில் மாறுதலுக்கு உட்பட்டது

குறிப்பு – பன்னிரண்டு லக்னத்திற்கும் வருமான உயர்வு குறித்து பதிவிட்ட பின்பு இந்த வருடம் நடைபெறவிருக்கும் குருபெயர்ச்சி குறித்து வித்தியாசமான முறையில் விளக்கம் குறித்த பதிவுகள் வரும். 

ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி

(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)

எளிய பரிகார ஜோதிடர்

ஜோதிட ஆச்சார்யா

பிரசன்ன ரத்னா

M.M.CHANDRA SEGARAN

(M.M.சந்திர சேகரன்)

89730-66642, 70102-92553 

(இரண்டு எண்களும் வாட்சப்பில் உள்ளன)

*********************************

எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான் உயர்திரு ஜி.கே. அய்யா அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

*********************************

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நட்புகளும் உறவுகளும் பயன்பெற கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.