உளுந்தம்பருப்பு சட்னி செய்யும் முறையும் அதன் பயன்களும்

0
3451
உளுந்து சட்னி

Contents

மிகவும் சுவையான சத்துமிக்க உளுந்தம் பருப்பு சட்னி ஐந்தே நிமிடத்தில் செய்வது எப்படி?

மனித உடலில் உள்ள உளுத்துப்போன உறுப்புக்களை பலப்படுத்தி இளமை பொங்க வைப்பதாலே நம் முன்னோர்கள் இந்த பருப்புக்கு உளுந்தம்பருப்பு என்ற பெயரை வைத்தனர்.

தேவையான பொருள்கள்

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்

உளுந்தம் பருப்பு – அரை கப்

காய்ந்த மிளகாய் – ஆறு

கடுகு,கருவேப்பிள்ளை – தேவையான அளவு

செய்முறை

இந்த சட்னியை யார் வேண்டுமானாலும் செய்யலாம். மிக எளிதான செய்முறைதான். தேவையான பொருட்களும் மிக குறைவுதான்.

ஒரு கடாயில் எண்ணைய் ஊற்றி உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு பொன் நிறமாக வறுக்கவும். பின்பு இவற்றை நன்றாக ஆற வைக்கவும்.இவற்றுடன் உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும். சட்னி பதம் வரும் வரை அரைக்கவும்.

பின்பு எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிள்ளை போட்டு தாளித்து சட்னியில் போடவும். இந்த சட்னியானது இட்டலிக்கு மிகவும் சுவையாக இருக்கும். சுவையான சத்துள்ள உளுந்தம் பருப்பு சட்னி தயார்.

உளுந்தை கஞ்சி, களி, கூழ் செய்து சாப்பிட பிடிக்காதவர்கள் சட்னியாக செய்து சாப்பிடலாம்.

உளுந்தில் உள்ள பயன்களை பற்றி தெரிந்து உண்போமா?

உளுந்தம்பருப்பு சட்னி

  • உளுந்தம்பருப்பில் எண்ணற்ற நன்மைகள் பொதிந்துள்ளன. எனவேதான் உளுந்தை கஞ்சி, கூழ், களி, பொடி என்று அவரவர் விரும்பும் சுவைகளில் உண்கின்றோம். ஆனால் இந்த தலைமுறையில் உள்ள நாம் பல உணவுகளில் உள்ள மருத்துவ மகத்துவம் தெரியாலமேயே உண்கின்றோம்.
  • உளுந்து முக்கியமாக சளி, காசநோய் போன்ற நுரையீரல் சம்பத்தப்பட்ட நோய்களுக்கு நல்ல நிவாரணி.
  • உளுந்தை பொன் நிறமாக வறுத்து அதனுடன் மல்லி இலை, புதினா, தூதுவளை சேர்த்து துவையலாக அரைத்து சாதத்தில் பிரட்டி சாப்பிட்டு வந்தால் நுரையீரல் திசுக்கள் பலப்படும்.
  • உளுந்தபருப்பை அரைத்து தேங்காய், வெள்ளம் சேர்த்து கஞ்சியாக குடித்து வந்தால் மார்புச்சளி நீங்கும். நெஞ்சு வலியும் குறையும்.
  • இதில் கெட்ட கொழுப்பு குறைவு. புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
  • உடல் மெலிந்த நிலையில் இருக்கும் வாலிபர்கள் உளுந்தை களி -யாக செய்து சாப்பிட உடல் நல்ல சதைபிடிப்பாக மாறும்.
  • சூட்டினால் வரும் நீர் கடுப்பு மற்றும் சிறுநீர் பிரச்சினைகளுக்கு முதல்நாள் இரவில் ஒருகைப்பிடி உளுந்தை நீரில் ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.
  • அந்தகாலத்தில் விரத வழிபாடு செய்பவர்கள் உளுந்திலான உணவை சாப்ப்ட்டுதான் விரதத்தை முடிப்பார்களாம். ஏனென்றால் உளுந்திற்கு நம் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும் தன்மை உள்ளது.