உருளைக்கிழங்கு மசாலா
உருளைக்கிழங்கு பல சத்துக்களையும், நல்ல சுவையையும் கொண்ட உணவு ஆகும். இதில் விதவிதமாக பல உணவு வகைகளை செய்யலாம். அதில் ஒன்றுதான் இந்த உருளைக்கிழங்கு பூரி மசாலா ஆகும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுக்கும் விருப்பமான ஒன்றாகும்.
தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு-5
- பெரிய வெங்காயம்-2
- தக்காளி-3
- கொத்தமல்லி- தேவையான அளவு
- பச்சை மிளகாய்-4
- கருவேப்பிலை – தேவையான அளவு
- கடுகு, உளுந்து-1/2 ஸ்பூன்
- சீரகம்-1/2 ஸ்பூன்
- மல்லித்தூள்-1/4 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்
- மஞ்சள்தூள்-1/2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- தண்ணீர்- தேவையான அளவு
உருளைக்கிழங்கு -களை வேகவைத்து எடுத்து உரித்து வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை:
முதலில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம் போட்டு வெடிக்க விடவும். பின், வெங்காயம், பச்ச மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். பின்பு, தக்காளியை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, உருளைக்கிழங்கை போட்டு நன்கு வதக்கவும்.
இவைகள் நன்கு வதங்கிய பின்பு, மல்லித்தூள், மிளகாய் தூள், மஞ்சத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் தண்ணீர் சிறிதளவு ஊற்றி மூடி வைக்கவும். உங்களுக்கு தேவையான அளவு வற்றியவுடன் இறக்கி, அதில் கொத்தமல்லி இலைகளை மேலாக தூவி விட்டு பூரியை பிட்டு இந்த மசாலாவில் நனைத்து சாப்பிட்டால்….. ஆஹா…. என்ன சுவை!
[…] கிழங்கை வேக வைத்து எடுத்து கொள்ளவும். பின் […]