Annamalai University DDE Exam
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி மையத்தில் DDE தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து பணம் செலுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.
இதுவரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வெப்சைட்டில் இருந்த, ஆன்லைனில் தேர்வுகள் மற்றும் வேறு விஷயங்களுக்கு பணம் செலுத்தும் முறையை மாற்றியுள்ளது. எனவே இந்த பதிவை கவனமாக கடைசி வரை படியுங்கள்.
இந்த லிங்கை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
இந்த பக்கத்தில் Examination என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து வரும் பக்கத்தில் இந்த லிங்கை கிளிக் செய்து இந்த பக்கத்திற்கு வாருங்கள்.
இங்கே உங்களது தேர்வு எழுதும் மையத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதற்கடுத்து கீழே உங்களது என்றும் என் நம்பர் டைப் செய்யுங்கள் பின்னர் அருகில் உள்ள Search பட்டனை கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது உங்களது கோர்ஸ் மற்றும் உங்களது பெயர் வரும். உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.அதற்கு அடுத்து கீழே உங்களுடைய மொபைல் எண் மற்றும் இமெயில் ஐடி கொடுக்க வேண்டும்.அதற்கடுத்து கீழே Search Papers என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும்.
அதை கிளிக் செய்து உங்களுடைய Course க்கானன அத்தனை பாடங்களும் வரிசை எண்களும் வரும் எனவே கவனமாக அனைத்து பாடங்களையும் தேர்வு செய்து மேலே சேர்த்துக் கொள்ளுங்கள்.
படங்களையும் தெரிவு செய்தபின் மேலே ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள் அனைத்து பாடங்களையும் தேர்வு செய்து விட்டீர்களா என்பதை.
இப்பொழுது இந்த இடத்தில் உங்களது தேர்வு கட்டணத்திற்கான முழு விவரங்களும் இருக்கும். அதைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அனைத்து தகவல்களும் சரியாக உறுதிப்படுத்திக்கொண்டு Proceed Now என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து பணம் செலுத்தும் பக்கத்திற்கு செல்லும்.
இங்கே கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், நெட் பேங்கிங் ஆகிய வழிகளில் நமது தேர்வு கட்டணத்தை செலுத்த முடியும். உங்களிடம் எந்த வசதி உள்ளது அதை தேர்வு செய்து கட்டணத்தை செலுத்தி கொள்ளுங்கள்.
தேர்வுக் கட்டண ரசீது
உங்களது தேர்வு கட்டணம் செலுத்திய பின் இது போல ஒரு சிறிய விண்டோவில் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது வரும் இதை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த ரசீதை நீங்கள் டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளலாம்.
ரசீதில் Trance Status என்பதற்கு அருகே Success என்று இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் பணம் செலுத்தும்போது ஏதேனும் Error இருந்தால் எந்த இடத்தில் Failed என்று வந்திருக்கும்.
இப்பொழுது நீங்கள் ஆன்லைனில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் DDE தேர்வுகளுக்கு விண்ணப்பித்ததில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டிருந்தால் அதை எப்படி சரி செய்யலாம் என்று பார்க்கலாம்.
மறுபடியும் இந்த பக்கத்திற்கு வந்து நீங்கள் தேர்வு செய்த தேர்வு மையம் உங்களது Enroll Number இவற்றை டைப் செய்து Search என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
அடுத்து வரும் இந்த பக்கத்தில் Edit என்பதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்களது மொபைல் எண் மற்றும் அதற்கு கீழே Send otp என்ற ஆப்ஷன் இருக்கும். நீங்கள் அதை கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு நான்கு இலக்கங்களில் ஒருமுறை கடவுச்சொல் வரும். அதை இந்த இடத்தில் டைப் செய்து Submit என்பதை கிளிக் செய்துகொள்ளுங்கள்.
அடுத்து வரும் பக்கத்தில் உங்களது தேர்வு மையம் மற்றும் நீங்கள் தேர்ந்தெடுத்த பாடங்களில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் செய்து கொள்ளலாம்.
மாற்றங்களை தேர்ந்தெடுத்த பின்னர் கீழே Save என்பதை க்ளிக் செய்து உங்களது மாற்றத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Enroll நம்பர் எப்படி கண்டுபிடிப்பது
ஒருவேளை உங்களது Enroll நம்பர் தெரியவில்லை என்றால் பின்வரும் லிங்கை கிளிக் செய்து பல்கலைக்கழகத்தில் உங்களுக்கு கொடுத்த ஐடி கார்டின் பின்புறத்தில் உள்ள அப்ளிகேஷன் நம்பர் மற்றும் உங்களது பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கொடுத்து உங்களது Enroll நம்பரை கண்டுபிடித்துக் கொள்ளலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள்.